E2 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
கவிதை நடையில் கருத்தை சொல்வது நன்றாக தான் இருக்கிறது பாத்திமா.

தோல்வியுற்ற திருமண வாழ்வா பாரதி கண்ட புதுமை பெண்ணை உருவாக்குவது...

தோல்வியுற்ற திருமணம் யாருக்கு?


கையில் குழுந்தையுடன் கண்ணியமாக வாழ்க்கை நடத்தி 10 பேருக்கு படியளக்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் 'சுந்தரி' தோற்றுப் போனவளா?

அவளது பெயர் பிடிக்கவில்லை
அவளது தோற்றம் பிடிக்கவில்லை.
அவளது வீடும் பிடிக்கவில்லை
அவளது தந்தையை பிடிக்கவில்லை
சோறு போடும் விவசாயியின் வியர்வை மணம் பிடிக்கவில்லை
அவளை முழுமையாய் சுகித்த பின்னும் அவளுடன் வாழ பிடிக்கவில்லை
அவனும் அவளும் பிறந்து வளர்ந்த நந்தவன பூமி பிடிக்கவில்லை
இன்னும் எத்தனை பிடிக்கவில்லை அவளிடம் அவனுக்கு முழுமையாக தெரியவில்லை


இத்தனை பிடிக்கவில்லைகளை கூறி மணவிலக்கு கோரும் அவனிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்டிருந்தால் அவள் மணவாழ்க்கையில் வெற்றி பெற்ற பாரதி கண்ட புதுமை பெண் ஆகியிருப்பாளோ உங்கள் கூற்றுப்படி.

எங்கே கூறியிருக்கிறான் அந்த முண்டாசு கவி இப்படியோர் பொருள் வரும் கவிதையை.


புதிய சமுதாயம் படைக்க புறபட்டிருக்கும் உங்கள் தாரக மந்திரம் என்ன? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதா? உன்னை பிடிக்கவில்லை என்பவனுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அவள் மல்லியின் கதாநாயகியாய் இருந்திருக்க முடியாது. நீ எனக்கு வேண்டாம் என்றவனிடம் நீ எனக்கு வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வெற்றி நடைபோடும்.
மல்லியின் சுந்தரியின் பின்னே புதிய சமுதாயம் நோக்கி போரடவே நான் விரும்புகிறேன்.

அவள் கண்ணனுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அவள் பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

இப்படியொருத்தியை மனைவியாகவும் மருமகளாகவும் அடைந்தும் தக்கவைத்துக் கொள்ளாமல் தவறவிட்டவர்களே வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்.என்பதே எனது தாழ்மையான கருத்து பாத்திமா அவர்களே.

I dunno wat to say..
Juz remove your yellow goggles and read it again..

I juz mentioning those who lost life in marriage relationship and come back alone is not puthumai pen as bharathi dreamt..

All women goal should not be good family alone..
We need to create a good society as well..
.hope u read it again and understand...
 

banumathi jayaraman

Well-Known Member
நிச்சயமாக நீ தமிழன் தான்..
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..
படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..
நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .
மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..
காலம் கடந்து போராடினாலும்
வீறுகொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
கண்டிப்பாக துரைக்கண்ணன் போராடத்தான் வேண்டும், பாத்திமா டியர்
ஏனென்றால் காலம் கடத்தியது அவன் தானே
தப்பு செய்தவன் துரைக்கண்ணன் தானே, பாத்திமா டியர்
 

fathima.ar

Well-Known Member
கண்டிப்பாக துரைக்கண்ணன் போராடத்தான் வேண்டும், பாத்திமா டியர்
ஏனென்றால் காலம் கடத்தியது அவன் தானே
தப்பு செய்தவன் துரைக்கண்ணன் தானே, பாத்திமா டியர்

Yes banuma thappu pannittan porattam perusa thaan irukum nu sollite..
 

Ansadoss

Well-Known Member
I dunno wat to say..
Juz remove your yellow goggles and read it again..

I juz mentioning those who lost life in marriage relationship and come back alone is not puthumai pen as bharathi dreamt..

All women goal should not be good family alone..
We need to create a good society as well..
.hope u read it again and understand...
மஞ்சள் கண்ணாடி அணிந்தது நான் அல்ல தோழி. உங்கள் கவிதையையும் என் கருத்தையும் வாசிக்கும் மற்ற தோழிகளுக்கு புரியும்.

பாதகம் செய்பவரை கண்டால் நீ
பயம் கொள்ளலாகது பாப்பா
மோதி உதைத்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

என்ற பாரதியின் பாப்பா பாட்டை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் தானே?

பாரதியின் கனவுக்கு இழுக்கென்று எதை குறிப்பிட்டீர்கள்? எந்த இடத்தில் கூறியிருக்கிறீர்கள்?

இதே தளத்தில் நம்முடன் பயணிக்கும் சில உடன்பிறப்புகள் துரதிர்ஷ்டவசமாக மணவாழ்க்கையிலிருந்து விலகி தனிமையில் இருக்கின்றனர்.

அவர்கள் எல்லாம் தோற்றுப்போனவர்களா? அவர்களை கைநழுவவிட்டவர்கள் தான் தோற்றோடியவர்கள்.

மல்லியின் நாயகியைப் பற்றி பேசும்போது எதிர்மறை கருத்துகள் எதற்கு? நிச்சயம் மல்லி சுந்தரியின் கதாபாத்திரத்தை படைத்திருப்பதே சமூதாயத்தில் இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்பதற்காக தான்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Very very superb UD, Malli dear
நண்பர்களின் கிண்டலுக்கு பயந்து அருமையான வைரத்தைக் கோட்டை விட்டுவிட்டானே இந்தத் துரைக்கண்ணன், Malli dear
படித்த முட்டாள், என்ன படித்து என்ன புண்ணியம்?
அம்மாவின் பேச்சைத்தானே கேட்டு பெண்டாட்டி சுந்தரியை, அப்பா வீட்டுக்குத் துரத்தி விட்டானே
அப்புறமென்ன, எல்லோரையும் விட அதிகமாய் அம்மா மீது கோபம் இவனுக்கு?
பாவம் சுந்தரி,
ஜந்து நாட்களில் ஜந்து ஜென்மங்களுக்கான தண்டனையை துரை வீட்டினர் தந்து விட்டார்களோ?
கண்டிப்பாக துரைக்கண்ணன் போராடத்தான் வேண்டும்
ஏனென்றால் காலம் கடத்தியது அவன் தானே
தப்பு செய்தவன் அவன் தானே
தன்னோட மகன், தன் பேச்சைக் கேட்பான் என்ற நம்பிக்கையில், இவன் விரும்பாத பெண்ணை, இவன் விருப்பத்தைக் கேட்காமல், திருமணம் செய்து வைத்தார் இவன் தந்தை
ஆனால் தந்தையின் நம்பிக்கையை, உடைத்து
கடும் உழைப்பாளியான, மாமனாரையும், மனிதனாகக் கூட, மதிக்காமல்
வியர்வை நாற்றம் பிடித்தவர், என எள்ளி நகையாடி
கருப்பான, மாநிறத்துக்கும் சற்றுக் குறைவான, குண்டான பூசின உடல் வாகுடைய, பருக்கள் நிறைந்த முகத்தையுடைய, பெயர் கூட பிடிக்காத, ஒரு முறை கூடப்பார்க்க முடியாத, பெண்ணை இந்த துரை கல்யாணமே, செய்திருக்கக் கூடாது
ஒரு பெண்ணை இதை விட அவமானப்படுத்த முடியாது
யாரு கொடுத்தது இவனுக்கு இதற்கான தைரியத்தை?
திருமண நேரத்தில், எங்கேயாவது ஓடி இருக்கலாம்
அல்லது வீரமாக நின்று, சுந்தரியை, மணம் செய்ய மாட்டேன், என உறுதியாக நின்றிருக்கலாம்
இதை விடுத்து, கோர்ட்டில் வந்து என்னோட வாழ வந்தால் வரட்டும்=ன்னு சொல்லுவது
ஊருக்கு வந்துட்டாங்கன்னா விவாகரத்து வேண்டாம் வந்துடச் சொல்லுங்க=ன்னு சொல்லுவது, ஆண்மகன்
=ன்ற திமிர் தானே
அந்தத் திமிருக்கு, நம்ம சுந்தரி சூப்பரா கொடுத்தாளே
நெத்தியடி போலே
உன்னைப்போன்ற முள் மரம் எனக்கு வேண்டாமுன்னு
எனக்கு பூ மரம், பழ மரம் தான் வேண்டும்
-ன்னு
நேற்று சாப்பிட்ட சாப்பாட்டுக்கு இன்று தண்ணீர் குடிப்பானா
நேற்றே குடித்திருக்க வேண்டுமல்லவா
ஹ்ம்ம்............. இதிலே இந்த விமலா வேற
தனக்கும் ஒரு பொண்ணு இருப்பதை மறந்து வாழ வந்த அடுத்த வீட்டுப் பெண்ணை துரத்த எப்படித்தான் மனம் வருதோ?
ஒரு சில இடங்களில்
சின்ன மாமியார் நல்லவர் தானோ?
அங்கே சித்ரா அம்மையார், இங்கே துரையின் சித்தி!
எப்பொழுதுமே பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகவே இருக்கிறாளே!
இப்படிப் பிடிக்கவே பிடிக்காதப் பெண்ணுடன் இவன் ஐந்து நாட்கள் கூட வாழ்ந்திருக்கக்கூடாது
ஒரு குழந்தையையும் கொடுத்திருக்கக்கூடாது
இதில் அந்தக் குழந்தை, ஆணா, பெண்ணா
=ன்னு கூட கண்ணனுக்குத் தெரியாதாம்,
நல்ல வேடிக்கைதான்
waiting for your next lovely ud, eagerly, Malli chellam
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மிக, மிக, மிக, அருமையான முன்னுரை, மல்லி டியர்
உன்னை வளர்த்து, இயற்கையை வளர்த்து, முக்கியமாக மனிதத்தை வளர்க்க, சொல்லியிருக்கும் கருத்துக்கள், சூப்பரோ சூப்பர், மல்லி செல்லம்
மனிதன் தொலைந்து போகாமல் இருக்க, இதுவே சரியான வழி, மல்லி டியர்
Waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top