E2 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Kolai pannitu varutha patta ennaka use. Sundari kalil saastangama viluntha great escape than,setharam kuraiyum.
Tamizhana kaalla vizha vaikkurathula
Enna anandhamo..
Ippo thaan rendu pombalainga illama
Amaichargal mudhugelumbu nimirnthu irukku..
ஹா, ஹா, ஹா, மிகவும் சரியாக சொன்னீர்கள், பாத்திமா டியர்
அவங்க சொல்லுவது போலே, காலில் விழுவதுதான் உங்களுக்கு பிடித்தமா, மங்கா டியர்?
 

ThangaMalar

Well-Known Member
:)


malli mam made me to feel with her charecter sundari..
dedicated to them
I THOUGHT TO GIVE THIS EVEN THOUGH YOU HAVE EXPLAINED IN NICE MANNER

நீ என்பது யாதெனில்
நீ என்பது நான்
நான் என்பது நீ
நான் ஆகிய நீ
நான் நீ நாமாகும் நேரம் எப்போது
நாம் ஆனால் உலகம் நம்மை பார்க்கும்
நாம் ஆனால் நம் உலகம் வெல்லும்
வேறானால் உலகம் தூற்றும்
பூக்களின் தோட்டம் இந்த உலகம்
அதில் பூக்களின் வாசமும் தேவை
வண்டுகளின் வாசமும் தேவை
பூமகள் அவள்
பூமகளின் வண்டு அவன் ...
வண்டு மாறலாம்
பூக்கள் மாறுமோ..
...
வண்டு வரும் காலம் பூவும் காத்திருக்குமோ
காலம் சொல்லும்
எதிர் நீளும் காலம் சொல்லும்.
தேன் எடுத்து செல்லும் வண்டு கனி கொடுப்பது வாடிக்கை
அதை வேடிக்கையாய் எண்ணுதல் நியாயமோ
பூந்தோட்டத்தில்
நாங்களும் காத்திருக்கிறோம்
பூமகளின் வாசனையை முகர ..
ஆம்..
மல்லி பூமகளின் வாசனையை முகர
.....
உன் தமிழ் அழகு, மீரா
 

fathima.ar

Well-Known Member
தமிழ் கருத்துரையை பாரீர்
கவி புனையும் பாத்திமா

கவிதை மட்டும் அழகு தமிழில்
வழங்கும் நீவிர்
கருத்துரைக்கு அன்னிய மொழி பயன்படுத்துவது ஏனோ?....

Ipdi maatti Vida koodathu!!!
All my comments I type it from mobile onnly.

Site irukkura fast la..
English la type panrathu konjam easy..

Kavithai WhatsApp la type pannitu copy pasting here .
 

fathima.ar

Well-Known Member
கருத்துக்களையும் அவ்வாறே ..நகலெடுத்தே பகிரலாமே..:p
:)..
வெளியே புதுமையாக தோன்றினாலும்
உள்ளே தமிழச்சி தான்..

இதை தான் என்னுடைய கருத்தும்
கவிதையும் உணர்த்தும்...
 

banumathi jayaraman

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..
ரொம்பவே ஜோரான கவிதை பாத்திமா டியர்
உண்மை, சரியான உண்மை தான், பாத்திமா செல்லம்
நல்ல சமுதாயமும், நம்முடைய கைகளில்தான், பாத்திமா டியர் நீங்க சொன்னது போலே புதிய தமிழகத்தை உருவாக்குவதுடன்
அதன் புனிதத்தை மீட்டு எப்பொழுதும் கண்ணிமை போலவே நாம் காப்போம், பாத்திமா செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:)..
வெளியே புதுமையாக தோன்றினாலும்
உள்ளே தமிழச்சி தான்..

இதை தான் என்னுடைய கருத்தும்
கவிதையும் உணர்த்தும்...
வாழ்க தமிழ் ...
வளர்க தமிழ்..
வெல்க தமிழ்...
 

Ansadoss

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..
கவிதை நடையில் கருத்தை சொல்வது நன்றாக தான் இருக்கிறது பாத்திமா.

தோல்வியுற்ற திருமண வாழ்வா பாரதி கண்ட புதுமை பெண்ணை உருவாக்குவது...

தோல்வியுற்ற திருமணம் யாருக்கு?


கையில் குழுந்தையுடன் கண்ணியமாக வாழ்க்கை நடத்தி 10 பேருக்கு படியளக்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் 'சுந்தரி' தோற்றுப் போனவளா?

அவளது பெயர் பிடிக்கவில்லை
அவளது தோற்றம் பிடிக்கவில்லை.
அவளது வீடும் பிடிக்கவில்லை
அவளது தந்தையை பிடிக்கவில்லை
சோறு போடும் விவசாயியின் வியர்வை மணம் பிடிக்கவில்லை
அவளை முழுமையாய் சுகித்த பின்னும் அவளுடன் வாழ பிடிக்கவில்லை
அவனும் அவளும் பிறந்து வளர்ந்த நந்தவன பூமி பிடிக்கவில்லை
இன்னும் எத்தனை பிடிக்கவில்லை அவளிடம் அவனுக்கு முழுமையாக தெரியவில்லை


இத்தனை பிடிக்கவில்லைகளை கூறி மணவிலக்கு கோரும் அவனிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்டிருந்தால் அவள் மணவாழ்க்கையில் வெற்றி பெற்ற பாரதி கண்ட புதுமை பெண் ஆகியிருப்பாளோ உங்கள் கூற்றுப்படி.

எங்கே கூறியிருக்கிறான் அந்த முண்டாசு கவி இப்படியோர் பொருள் வரும் கவிதையை.


புதிய சமுதாயம் படைக்க புறபட்டிருக்கும் உங்கள் தாரக மந்திரம் என்ன? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதா? உன்னை பிடிக்கவில்லை என்பவனுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அவள் மல்லியின் கதாநாயகியாய் இருந்திருக்க முடியாது. நீ எனக்கு வேண்டாம் என்றவனிடம் நீ எனக்கு வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வெற்றி நடைபோடும்.
மல்லியின் சுந்தரியின் பின்னே புதிய சமுதாயம் நோக்கி போரடவே நான் விரும்புகிறேன்.

அவள் கண்ணனுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அவள் பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

இப்படியொருத்தியை மனைவியாகவும் மருமகளாகவும் அடைந்தும் தக்கவைத்துக் கொள்ளாமல் தவறவிட்டவர்களே வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்.என்பதே எனது தாழ்மையான கருத்து பாத்திமா அவர்களே.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top