E14 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி... ஈ...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்

ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்

இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது

வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்

ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்

இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே

இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே...
சகோதரி, இது அருமையானப்பாடல் இதில் மற்றுக்கருத்துயில்லை, ஆனால் இதை விட நீங்கள் அருமையாக எழுதுவீர்.
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி
படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று
பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .
எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக்
கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.
தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்
நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்.....
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..


 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஆஹா.... மல்லி..... மணக்குதே.....

மனதுக்குள் வந்திட்ட மன்னவன்
மஞ்சம் வந்திட நாளாகுமா என்ன.....
நினைவுக்குள் நிறைந்திட்ட சுந்தரி
நிழலாய் தொடர்ந்திடும் நாளென்ன.....
காதல் மனதுக்குள் கண்ணாமூச்சியா......
கண்ணைத் திறந்தால் நிஜமாகுமே.....
ரொமான்ஸ் தெரியா கண்ணனா நீ.....
வெட்கமறியா சுந்தரிப் பெண்ணவள்
விழிவீச்சை தொடங்கிவிட்டால்
விண்ணின் சொர்க்கம் மண்ணில் வந்திடாதோ.....
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹேய் சூப்பர் சூப்பர்... நேத்து நானும் வந்து படிச்சுட்டேன்னு ஒரு ஸ்மைலி போட்டாச்சு...

கட்டிட்டான் கட்டிட்டான் தாலி கட்டிட்டான்... துரைன்னு நிருபிச்சுட்ட ராசா நீ... சூப்பர் முதல்ல கட்டினது செல்லாதுன்னு திரும்பவும் கட்டின பாரு அங்க நிக்கறீங்க துரை நீங்க...

இப்படி துரை வேலை செஞ்சுட்டு பொண்டாட்டியை கண்ணான சுத்தி வர்றீங்க பாருங்க ஹா ஹா அருமை அருமை... சுந்தரி நினைக்குறா போல இங்க தான் இருப்பேன்னு அடம் பிடிச்சிருக்கலாமோ ஹீரோ... அடுத்து என்ன நடக்குமோ தெரியலையே... குட்டி பையா நீ தான்யா உங்கப்பா அம்மாவை சேர்த்து வைக்கணும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இருதாரம் கொண்ட கண்ணனல்ல
இருதரமும் ஒருவளையே
தாரமாக கொண்ட கண்ணன்..

அவசர திருமணம்...
அலங்கோலமாய் ஆனது...
அவசிய திருமணம்
அதிர்ச்சியில் முடிந்தது..

வாழ்க்கை பயணத்தை
நன்றே தொடங்கிய
இருசக்கர பயணம்..


பேச தயங்கியவள்..
நேசம் கொள்ள துவங்கினாள்...
பாசமும் தெரிந்தது
அவளிட்ட உணவில்..
பசி ருசி அறிந்ததோ இல்லையோ...
அவளது மலரும் நேசம் அறிந்தது..

தயக்கத்தை கடந்தது மயக்கம்
அது ஏக்கமாய் மாறும் முன்..
காதலையும் காத்திருப்பையும்
வெளிபடுத்துமா..

super da fathi...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top