E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
HI FRIEND MM,
என்ன சொல்ல எது சொல்ல புரியல MM...... வார்த்தைகள் இல்லை பெரிய பெரிய கமெண்ட் எழுதுவேன் இப்பொழுது எதுவும் வரமாட்டேங்குது....
பொழுது போக்கு என்று அல்லாமல் உங்கள் இந்த கதை இன்று என் தின வாழ்க்கையையோடு ஒன்றிவிட்டது.....


நான் எப்போதோ சொல்லிவிட்டேன் இந்த கதை உங்களுக்கு ஒரு மைல் கல்கள் ............என்று மிக லாவகமாக அழகு குறையாமல் கதையை முடித்துவிட்டீர்கள்...........

நீங்கள் சொல்லிக்கிறீர்கள் இன்னும் நல்லா கொடுத்திருக்கலாமோ இதை...... என்ற உங்கள் எண்ணம் இன்னும் ஒரு அழகான கதையை எங்களுக்கு வழங்க போகிறது தெரிவிக்கிறது

பெண்களின் உணர்வுகளையும் மரியாதையையும் தன்மானத்தையும் தூக்கி நிறுத்தும் உங்கள் கதை எப்போதும்.........
அதுவும் இங்கு வர்ஷ் ஒரு மாறுபட்ட பிறப்பு வளர்ப்பு அவளுடைய கேரக்ட்டரை நீங்கள் கொண்டு போன விதம் அப்பா ஒரு கம்பி மேல் நடப்பது போல் மிக சிறப்பாக நுணுக்கமாக கையாண்டுள்ளீர்கள்........I AM SOOOOOOOOO HAPPPY YYYYYYYY FOR that


உங்கள் கதையை படித்து கொண்டிருக்கும் போதெல்லாம் எந்த பெண்ணை பார்த்தாலும் உற்று நோக்க சொல்லுகிறது மனது.......

என் பசங்க சொல்லிகிறார்கள் வர வர நான் பெண்களை ரொம்ப சைட் அடிக்கிறதா என்று....... மானஸீகமாக எல்லோருடனும் நட்புணர்வு வருகிறது எல்லோருரையும் ரசிக்கிறேன் இன்று நிலையில் அதன் முழு கிரெடிட்டும் உங்களுக்குத்தான்.........

எப்பொழுதும் என் ஓட்டு பெண்கள் பக்கம் தான் எனினும்....... பராபட்ச்சமில்லாமல் எல்லோருரையும் ஏற்று ரசிக்கும், முகஉண்ர்வை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் தன்மையை வழங்கியது உங்கள் எழுத்து என்னுள் நன்றி நன்றி நன்றி .........

முக்கியமாக ஒரு ஒரு எபியிலும் வந்த அதனை ரெட் கோட்டட் வரிகள் அத்தனையும் அழகு அருமை.............

உங்கள் எழுத்து என்றும் சிறக்க வாழ்வு வளம் பெற என் இறைவி உங்களுடன் எப்போதும் துணையிருக்க வேண்டி கொள்கிறேன்............ &
மற்றும் இங்கு இந்த கதையுடன் பயணித்த அதனை தோழமைகளின் வாழ்வும் வளம் பெற
பெண்களின் உணர்வுகளையும் மரியாதையையும் தன்மானத்தையும் தூக்கி நிறுத்தும் உங்கள் கதை எப்போதும்........
இது தான் என்னை மல்லிகா எழுத்துக்கு அடிமை ஆக்கியது.....
அருமை.....:):):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
dei chellam
nee en darling nu avarukku therinchuduchu pola
athan nammalai pirikama munnadi potaru
(MV: nama ennaikku padichom...sari annan asaikku ...nammalum solalam....hey naaangalum padipps than...naangalum padipps than )
பக்கத்தில் இடம் போட்டு வச்சிருக்கேன்...
சீக்கிரம் வந்து ஜாயின் பண்ணுங்க.
பார்த்துகிட்டே இருப்பேன் சகோதரி, இல்லா பதிவை{கடி கருத்து}போட்டு நிறைத்துவிடுவேன் சகோதரி
Semma pa Meeru...MV Queen, nee
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
மாட்டிப்பது நாம் தான் ..
அவ நல்ல பிள்ள பேர் வாங்கிடவா..
சகோ கூட அவளை பாராட்டிட்டாங்களே பார்ததியா..:(
கி..கி..பப்ளிக்..பப்ளிக்
டேமேஜ் பண்ணாத:mad:
வராவிட்டால் ...மாட்டி விட்டு எங்களை வெளியே தள்ளவச்சுடுவ:eek:
ஹா ஹா ஹா
 

Sundaramuma

Well-Known Member
ஹா ஹா கோபமாக இருக்காது சகோ பெண்ணின் பக்கம் இருக்கும் அது கதாநாயகி என்று எல்லாம் பேதம் பார்க்காது பெண்ணின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் ஆராய்தலுடன் அவ்வ்ளவுதான் அதற்கு என்று
ஆண்கள் உணர்வுகளை கீழ் இறக்கமாட்டேன் அவர்களுக்கு உரியதையும் சொல்வேன் எங்கு சரியாக வருகிறதோ
நிஜ வாழ்விலும் இதே முறைதான் கடைபிடிக்கிறேன் உங்களை போல் சொல்பவர்களும் உண்டு.... கை கொடுப்பவர்களும் உண்டு.... புரிந்து கொள்பவர்களும் உண்டு .....உச்சகடடமாக என்னை கண்டதும் ஒளிந்து கொள்பவர்களும் உண்டு.... என் கல்லூரி தோழர்கள் வக்கீலாம்மா வரங்கப்பா வழி விடு என்று கூறுவார்கள் :D:D
Really .....:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli,

ஜாதி முல்லை....
கற்பின் இலக்கணம்
இயற்கையின் கையில்!

ஒட்டுறவில் மலர்ந்த முல்லை!
கட்டுறவில் வளர்ந்த கிள்ளை!

உறவின் மொழி அறியா தங்கை!
மரபின் வழி அறியா மங்கை!

தனக்கென்று ஓர் கனவு!
அதற்கென்று ஓர் நனவு!
எதற்கென்று ஓர் நினைவு!
எப்படியோ வாழ்ந்து வந்த விந்தை!

அறியாத வயதில்
புரியாத நடப்பில்
தெரியாத தவிப்பில்
பழகிவிட்ட போதை!
மாற்றிவிட்ட பாதை!

கம்பீரமாய் வந்தவன்,
காதலின் நாயகன்!
கடமையாய் வந்தவன்,
கணவனாய் ஆனவன்!

மரபில் வாழ்ந்தவன்
மணாளனாய் மாயவன்!
உறவில் உய்ர்ந்தவன்
உயிராய் ஆண்டவன்!

முல்லை மலர
எல்லை ஆனான்!

உறவுக்காய் அவன்!
அவனுக்காய் அவள்!
காத்திருந்த காதல்!
தனிமையின் தேடல்!
தவிப்பினில் ஊடல்!
மறுப்பினில் மீறல்!
வெறுப்பினில் குமுறல்!
காட்டிய பாதை
நாடிய பேதை,
தேடிய போதை!

அழிவின் ஆரம்பம்
அன்பின் தொடக்கம்
பண்பின் விளக்கம்
நட்பின் இணக்கம்
பிரிவில் முடக்கம்!

காதலின் பிரிவு,
அன்பின் செரிவு!
ஊடலின் முடிவு,
தேடலின் தெளிவு!

காலத்தின் மாற்றம்,
கோலத்தின் தோற்றம்!

எண்ணத்தில் அவள் மாற்றம்,
மன்னனவன் தடுமாற்றம்!

சேர்ந்திட்ட வாழ்வில்
வீழ்ந்திட்ட மனதில்
காதலின் ஆர்பாட்டம்
மலரவள் போராட்டம்!

உணர்த்த முடியா அவன்
உணர முடியா அவள்
காலத்தின் கையில்
உணர்வின் பிடியில்
உறவுகளின் ஆர்பரிப்பு!
உள்ளங்களின் பரிதவிப்பு!

ஏன் என்ற கேள்வி.....?
எதற்கு என்ற கேள்வி.....?
அலையாய் பொங்க
அமைதியாய் அடங்க
காலமகளின் மாற்றமும் காரணமோ...?

புரிய வந்த சொந்தம்!
மலர வந்த பந்தம்!
உணர வைத்த சொந்தம்!
ஆயுட்கால பந்தம்!

உயிர்த்திட்ட காதல்,
உயிருட்டிய தாய்மை
தாய்மையின் பொறுப்பில்
தனிமையின் விடுதலை!

தாயாய் மலர்ந்த முல்லை!
சேயாய் வளர்ந்த கிள்ளை!
சங்கீத வாழ்வின் எல்லை!
சங்கமமாய் வந்த பிள்ளை!

உன் காதல் மன்னன் உன்னை,
பூவாய் மலர வைத்த அன்பன்!
உன் காதல் கண்ணன் உன்னை
தாயாய் மலர வைத்த கள்வன்!
உன் காதல் அன்பன் உன்னை
பெண்ணாய் மிளிர வைத்த மன்னன்!

சங்கீத ஜாதி முல்லை!
இங்கித வாழ்வின் எல்லை!


வாழ்த்துக்கள் மல்லி, நன்றி.

உங்கள் கதைகளை சில நாட்களாகத்தான் படிக்கின்றேன். எல்லாம் மிக மிக எதார்த்தமான எளிய வாழ்வின் நிகழ்வுகளின் தொகுப்பு. நன்று.
Wow.....
hands-clapping-applause-smiley-emoticon.gif
 

Adhirith

Well-Known Member
எஸ் எனக்கும் புரிந்தது ..... இருந்தும் அங்கு மென்ஷன் செய்யப்படவில்லை யாரால் என்று அப்போது கருத்து மாறும் வாய்ப்பை தருகிறது அவளை பற்றி அடுத்த இரண்டு வரிகள் அதனால் ரிக்வஸ்ட் வைத்தேன்

முதல் தடவை படிக்கும், போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
மறுபடியும் படிக்கும்போது,புரியாத நடப்பில், கிளிக் ஆனது.....
:D
 

Sundaramuma

Well-Known Member
மற்றவர்களைப்போல, எனக்கு நன்றாகவெல்லாம்
விமர்சிக்கத் தெரியாது, மல்லி டியர்
எழுத்தாளர் எழுதிய கதையின், ஓட்டத்தோடு தான்,
நான் பயணிப்பேன், மல்லி செல்லம்
அவரின் எழுத்துக்களை ஒட்டியே, எனது கருத்தும்
இருக்கும், மல்லி டியர்
நாவலாசிரியரின் எண்ணம்
, கருத்துக்கோர்வை,
என்னால் மாறிவிடுமோ
-ங்கிற,
அவருக்கு, அவரின் எண்ணப்போக்கிற்கு, என்னால்
ஏதாவது இடைஞ்சல் வந்துவிடுமோ
-ங்கிற
பயத்தில்
,
எப்பொழுதுமே நான் கதையை / கதாப்பாத்திரங்களை
ஒட்டியே பயணிப்பேன், மல்லி செல்லம்
சும்மா சொல்லாதீங்க ..பானு
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வரிக்கும் அழகான விமர்சனம் வருது .....
உங்களது கமெண்ட் படிக்கிறதே எனக்கு சந்தோசம் ....
அருமை ....:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top