E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
தோழமைகளுக்கு வணக்கம்:)
என்னுடைய Pofile pic 17 வருடங்களுக்கு முன்பு இன்றைய தேதியில் (24.4.2000) எடுத்தது. எங்களது திருமண நிச்சயத்தின் போது எடுத்தது.

இன்னுமொரு சுவாரசியமான தகவல் சொல்லவா? இன்று ரியல் தல அஜித்குமார் திருமணநாள். 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேதியில் தான் தன் சரிபாதி ஷாலினியின் கைபிடித்தார் தல.

பல்லாண்டு காலம் வாழட்டும் இந்த ரியல் ஹீரோ:)
 

Sundaramuma

Well-Known Member
Hi malli mam,
precap a parththuttu romance com love thappa sollittangoooo:eek: sry ithu horror epingooo:mad:Enna oru arakki thanam... Ammadiyooo_O ivaloo naal varshikku thaan support seiththaen but ini eshwar ku thaan en support
.....pppppa evaaaaalooo porumai chanceless.But varsh babe tis is too toooo much...oruthan sikkittannu ippadi mudiya pidichchi attakkudathu...
Sema terror epi...naan ini romance pathi pesuvaen??!!¿¿mattaengoooo love a pothum...pppaaaaa!!!!!!!!!!!!:eek:

Pavam esh:(.
:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..

இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..

அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..

கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..


நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..

இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..

Beautifully expressed emotions

Super ... Fathima:):):)
 

Sundaramuma

Well-Known Member
மிக, மிக, அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
நம்முடைய வர்ஷினிக்குட்டி, ஹ்ம்ம்………………….
என்ன சொல்ல என்று தெரியவில்லை, மல்லி டியர்
விஷ்வேஷ்வரனைப் போலவே நானும் உணர்கிறேன்,
மல்லி செல்லம்
எப்பொழுதும் வர்ஷினியைப் பற்றித்தான், நான்
நினைக்கிறேனேத் தவிர,
ஈஸ்வரைப் பற்றி நான் இதுவரை நினைக்கவில்லை,
மல்லி டியர்
ஆனால் இப்பொழுது நினைக்க வைத்துவிட்டாளே, நம்ம
வர்ஷினி டியர்
இவ்வளவு கோபத்தையும் வெளிப்படுத்தியப் பிறகாவது,
இவள் நார்மலாவாளா?
இவளோட கோபம், ஆத்திரம் தீருமா?
இனியாவது இந்த வர்ஷினி டியர், தன் மீதான, ஈஸ்வரின்
அன்பை, காதலைப் புரிந்து கொள்ளுவாளா?
இப்போதே புரிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்
ஹாஸ்பிடலில் வர்ஷியின் கவலை, பரிதவிப்புயெல்லாம்
பார்க்கும் பொழுது அப்படித்தான் தோணுது, மல்லி செல்லம்
ஹய்யோ, நல்லாத்தானே=ம்மா போய்கிட்டிருந்தது,
அதுக்குள்ளே எதுக்கு இந்த ஐஸ்வர்யா வந்தாள்?
இன்னும் இவங்களுக்குள்ளேயே சரியாகலை, இந்த ஐஸ்
பொருட்டு தானே, நம்ம ஈஸ்வர் கடி வாங்கி, ஜுரம் வந்து
அவஸ்தைப்படுகிறான்
தலை முடியைப் பிய்த்து, தோளில் கடித்து என இவ்வளவு ஆக்ரோஷம் எனில், வர்ஷி, ஈஸ்வர் மீது, எவ்வளவு அன்பு வைத்திருக்கவேண்டும்?
அது அவளுக்கே இன்னும் புரியவில்லை
தன்னை, இவன் ஏமாற்றி விட்டானே, என்ற ஆத்திரம்
என்னை மட்டுமே நேசிக்காமல், எனக்கு முன்பு வேறு
ஒருத்தியா?
ஏற்கெனவே அப்பா, அம்மாவே எனக்கு சரியில்லை
இப்போது தன்னை விரும்பி மணந்த கணவனும்,
வேறு ஒருத்தியை முன்னரே விரும்பியிருக்கிறானே,
என்ற ஆத்திரம், வர்ஷிக்குட்டியின் கண்ணை மறைத்து
விட்டது, மல்லி டியர்
இனியாவது ஈஸ்வரன், வர்ஷினி இவர்களின் வாழ்க்கை
சரியாகுமா?
நம்ம ரதிப்ரியா டியர், சொன்னது போல நான்கு வேண்டாம்,
இரண்டு குழந்தைகளாவது, இவர்களுக்கு வர வேண்டும்,
மல்லி செல்லம்
இந்த ரூபாவுக்கு, வேறு வேலையே இல்லையா?
ஏற்கெனவே ஐஸ்வர்யா, ஈஸ்வரை ஒப்பிட்டுப்பார்த்து
வரும் வரனையெல்லாம் தள்ளுபடி பண்ணுறாள்
இதிலே, நம்ம வர்ஷிக்குட்டி, விஷ்வாவிடம் டைவர்ஸ்
கேட்டதை மெனக்கெட்டுப் போய் ஐஸிடம், சொல்ல
வேண்டுமா?
இவளெல்லாம் எப்படித்தான் ஜெகனுக்கு தொழிலில் ஹெல்ப் பண்ணுறாளோ?
ஒரு வேளை இந்த ரூபாவுக்கு, வர்ஷியை விட்டுவிட்டு,
ஈஷ்வர் ஐஸை கல்யாணம் பண்ணட்டும் என்ற
எண்ணமிருக்குமோ?
ஆனால், அது ஒரு நாளும் நடக்காதே!
இனி, ஈஷ்வர் வர்ஷியைத் தவிர, வேறு யாரையும்
திரும்பிப் பார்க்க மாட்டானே!
ஹ்ம்ம்.......................ஏற்கெனெவே வர்ஷிக்குட்டி.
விஷ்வாவிடம் உரண்டை இழுத்துக்கொண்டிருக்கிறாள்
இதிலே. இந்த ஐஸ்வர்யாவைப் பார்த்த பின்பு. வேறு
என்ன நடக்குமோ=ன்னு ஒரே கவலையா இருக்கு,
மல்லி டியர்
இப்படி என்னை புலம்ப வைத்து விட்டீர்களே, மல்லி டியர்
Waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
ஐஸ்வர்யா வந்தா நிரைய கேள்விகளுக்கு விடை வரும்...பானு ....:):):)
அசத்தல் கமெண்ட்
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன சொல்ல ... மல்லிகா ...
அறிவார்த்த கருத்துக்கள் , ஆழமான கருத்துக்கள், உணர்வுபூர்வமான கருத்துக்கள் , நகைசுவை கருத்துக்கள் , நக்கல் கருத்துக்கள் , சுய முயற்சி கவிதைகள் , சந்தர்ப்ப சினிமா பாடல்கள் என்று போட்டு ஏற்கனவே அரை பயித்தியமாக இங்கு சுற்றி கொண்டு இருந்தவர்களை ஒரே பதிவில் முழுபயித்திமாக்கிய பெருமை உங்களை தான் சாரும் .....
Hats off ...


1. எபிசொட் ஹயிலைட் ஒன்று .....வர்ஷினி.....ஒரு எரிமலை...எண்ணற்ற மனக்குமுறல்களை தன்னுள் உள்ளடக்கி இருக்கும் ஒரு எரிமலை .....சிறுவயதில் இருந்து தன எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த சரியான உறவுகள் , சந்தர்ப்பங்கள் என்று அமையாமல் தன்னுள் அடக்கியே பழக்க பட்டவள்......அவளுடைய தனிமை அவளுக்கு அவளே உருவாக்கி கொண்ட ஒரு பாதுகாப்பு கவசம்......ஒரு மாறுபட்ட பெண்ணாக , வித்தியாசமான பெண்ணாக வளர்ந்து விட்டாள்..... அவளுடைய மனா உளைச்சல்களுக்கு எல்லாம் ஈஸ்வர் மட்டும் கரணம் இல்லை ......அனால் அவனும் ஒரு பெரும் காரணம் அதற்கு ......அவனால் தான் அவன் கொடுத்த அனுபவத்தால் தான் அவளின் எண்ணங்கள் தான் சரியா தவற என்ற மனஅழுத்தத்தை பெரும் அளவில் அதிகமாக்கி போதையை நாடும் அளவிற்கு அவளை தள்ளி விட்டது...... இருந்தும் அவன் மீது உள்ள பிடிப்பு, அவனில்லாமல் எதுவும் முடியாது என்ற அவளின் தவிப்பு மற்றும் இஇயலாமை பெரும்
கோபமாக வெளிய்ப்படுகிறது ...... இன்னும் வெளி வர வேண்டியவை நிறைய இருக்கிறது என நினைக்கிறேன் .....


2.எபிசொட் ஹயிலைட் ரெண்டு ........ஒரு முழுமையான காதல் கணவனாக ஈஸ்வர் இந்த பதிவில் வெளி வந்து இருக்கிறான்......தன் கதை மனைவியின் மனா வலிகளை தன்னுடையாகி கொள்ள முடியாமல் அவள் கொடுக்கும் உடல் வலிகளை சகித்து , அவளை பாது காக்க என்னும் அவன் தீவிரம், உறுதி......அவளை புரிந்து கொள்ள வேண்டும், முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவனுடைய துடிப்பு, பரிதவிப்பு, ஏக்கம் என்ற எல்லா உணர்வுகளும் உங்கள் கைவண்ணத்தில் மிக அற்புதமாக வெளிவந்து இருக்கிறது ......
அவனுடைய கொஞ்சல், கெஞ்சல் , கோபம் மட்டுறும் அவன் யாசிப்பு ........இன்னும் சொல்லி கொன்டே போகலாம்....ஒரு கை தேர்ந்த சிற்பி செதுக்குவது போல நாயகன் நாயகி கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறீர்கள் .....again hats off


3.எபிசொட் ஹயிலைட் மூன்று .....ஐஸ்வர்யா.......பார்த்தவுடன் வர்ஷினி காதலை உணர்ந்து கொள்ளவது ......அவள் சிந்தைகளும் வெகு யதார்த்தமாக ஏமாற்ற பட்ட ஒரு பெண்..... அவள் எண்ண போக்குகளை அப்படியே கொடுத்துகிளீர்கள் .......ஈஸ்வற்கு வர்ஷினியின் மேல் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை, அவனுக்கு வர்ஷினி எவ்வளவு முக்கியமானவள் என்பதை அஸ்வின் நேரில் பார்த்து தெரிந்து கொண்டான்( ரஞ்சனி காணாமல் போன எபிசொட் ....பத்து , வர்ஷினி , ஈஸ்வர் அனைவரும் அஷ்வினை தேடி செல்லும் எபிசொட்) .
இப்போது ஐஸ்வர்யா, வர்ஷினி காதலை தெரிந்து கொண்டு உள்ளாள்.....இவ்வாறு நீங்கள் கொண்டு வந்தது எனக்கு மிகவும் பிடித்தது ......நிறைவாகவும் உள்ளது.....நான் முன்பே இருவரின் காதலையும் பிறர் உணர்வதாக வரும் காட்சி அமைப்பு கேட்டு இருந்தேன் .....
கொடுத்து விட்டீர்கள் ..


அடக்கி வைக்க பட்ட எரிமலை வெடித்து சிதறும் (ஆரம்ப சிதறல் ) அந்த காட்சி அழகாக ,
உணர்ச்சி பூர்வமாக , உணர்வு மயமானதாக வந்து உள்ளது .....
இதோடு நிறுத்தி கொள்கிறேன் ......ரொம்ப பெரிதாக போய் விட்டது கமெண்ட்......
இருந்தும் மனதின் தாக்கத்தை முழுவதும் என்னுடைய எழுத்தில் கொண்டு வர முடியவில்லை....
மல்லிகா ...நன்றி ...மிக்க நன்றி :):):)
அற்புதமா சொல்லியிருக்கீங்க, சுந்தரம்உமா டியர்
 

Sundaramuma

Well-Known Member
ரொம்ப ரொம்ப கனமான அத்தியாயம்

ஐஸ்வர்யா எண்ணவோட்டங்களை பார்த்தால் தன் காதலை அவள் வர்ஸ் இடம் கூறவில்லை போல இருக்கு
ஒரு வேளை ஐஸ் வார்ஸிடம் பேசினால் அவள் கலக்கங்கள் குறையுமா??

இது உணர்வுகளின் போராட்டம்... வர்ஸ் என்ன செய்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை
வர்ஸ் என்றால் ஈஸ்வரின் எண்ணங்களும் செயலும் அவன் கையில் இல்லை அதே நிலை தான் வர்ஷினிக்கும் ...
நீங்க முன்ன வர்ஷினி பற்றி சொன்னது எல்லாம் சரியாய் வந்து இருக்கு......
ஐஸ்வர்யா வந்து குழப்பி வீட்டா கூட நல்லதுதான் .....
வர்ஷினிக்கு தெளிவு வருதான்னு பார்க்கலாம் .....
 
தோழமைகளுக்கு வணக்கம்:)
என்னுடைய Pofile pic 17 வருடங்களுக்கு முன்பு இன்றைய தேதியில் (24.4.2000) எடுத்தது. எங்களது திருமண நிச்சயத்தின் போது எடுத்தது.

இன்னுமொரு சுவாரசியமான தகவல் சொல்லவா? இன்று ரியல் தல அஜித்குமார் திருமணநாள். 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேதியில் தான் தன் சரிபாதி ஷாலினியின் கைபிடித்தார் தல.

பல்லாண்டு காலம் வாழட்டும் இந்த ரியல் ஹீரோ:)
Hi mam,
Nice pp:) and suvarasiyamana thagaval abt ajith.thanks for tat and i remember my school days i was eighth standard.those days are never come again.i miss tat days. Thanks for remembering those days.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top