E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா

என் வாரத்தையை அன்பே
சிறையில் நான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் மருகினேன்

நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில் உனை மயக்க ஏங்கினேனே

தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிடச் சென்றேன்
பிறகும் தாகத்தில் நின்றேன்

பேசும் பொழுதே சில வாரத்தை தடுமாறும்
அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அடங்குவதில்லை
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான வரிகள், மல்லி செல்லம்
அஸ்தமனமெல்லாம் நிரந்தரமல்லதான்
கண்டிப்பாக, மேற்கில் விதைத்தால், கிழக்கில்
முளைக்கத்தானே வேண்டும், மல்லி டியர்!
அந்த நம்பிக்கைதானே, வாழ்க்கையை வழி நடத்திச்
செல்கிறது, மல்லி செல்லம்
 

Sasideera

Well-Known Member
Awesome episode Malli mam...
அவங்க வாழ்க்கையின் காதலில் அடி எடுத்து வைக்க இந்த அடி கண்டிப்பாக தேவை... :p

This is for eswar...

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி...


This is for varshu...

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே...
உயிரிலே நினைவுகள் தளும்புதே...
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே...
முத்தமிட்ட உதடுகள் உளறுதே...
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்...
என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்...
காதல் சிறகானது இன்று சருகானது... என் உள் நெஞ்சம் உடைகின்றது..
உன் பாதை எது என் பயணம் அது,பனித்திரை ஒன்று மறைக்கின்றது...
 

Hema27

Well-Known Member
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..

இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..

அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..

கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..


நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..

இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..

Beautifully expressed emotions
Malli writing ah readers eppadi unardhu rasikirom nu... kavidhai vadivul miga, miga azhakaga sollirke fathee. Really super.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மிக, மிக, அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
நம்முடைய வர்ஷினிக்குட்டி, ஹ்ம்ம்………………….
என்ன சொல்ல என்று தெரியவில்லை, மல்லி டியர்
விஷ்வேஷ்வரனைப் போலவே நானும் உணர்கிறேன்,
மல்லி செல்லம்
எப்பொழுதும் வர்ஷினியைப் பற்றித்தான், நான்
நினைக்கிறேனேத் தவிர,
ஈஸ்வரைப் பற்றி நான் இதுவரை நினைக்கவில்லை,
மல்லி டியர்
ஆனால் இப்பொழுது நினைக்க வைத்துவிட்டாளே, நம்ம
வர்ஷினி டியர்
இவ்வளவு கோபத்தையும் வெளிப்படுத்தியப் பிறகாவது,
இவள் நார்மலாவாளா?
இவளோட கோபம், ஆத்திரம் தீருமா?
இனியாவது இந்த வர்ஷினி டியர், தன் மீதான, ஈஸ்வரின்
அன்பை, காதலைப் புரிந்து கொள்ளுவாளா?
இப்போதே புரிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்
ஹாஸ்பிடலில் வர்ஷியின் கவலை, பரிதவிப்புயெல்லாம்
பார்க்கும் பொழுது அப்படித்தான் தோணுது, மல்லி செல்லம்
ஹய்யோ, நல்லாத்தானே=ம்மா போய்கிட்டிருந்தது,
அதுக்குள்ளே எதுக்கு இந்த ஐஸ்வர்யா வந்தாள்?
இன்னும் இவங்களுக்குள்ளேயே சரியாகலை, இந்த ஐஸ்
பொருட்டு தானே, நம்ம ஈஸ்வர் கடி வாங்கி, ஜுரம் வந்து
அவஸ்தைப்படுகிறான்
தலை முடியைப் பிய்த்து, தோளில் கடித்து என இவ்வளவு ஆக்ரோஷம் எனில், வர்ஷி, ஈஸ்வர் மீது, எவ்வளவு அன்பு வைத்திருக்கவேண்டும்?
அது அவளுக்கே இன்னும் புரியவில்லை
தன்னை, இவன் ஏமாற்றி விட்டானே, என்ற ஆத்திரம்
என்னை மட்டுமே நேசிக்காமல், எனக்கு முன்பு வேறு
ஒருத்தியா?
ஏற்கெனவே அப்பா, அம்மாவே எனக்கு சரியில்லை
இப்போது தன்னை விரும்பி மணந்த கணவனும்,
வேறு ஒருத்தியை முன்னரே விரும்பியிருக்கிறானே,
என்ற ஆத்திரம், வர்ஷிக்குட்டியின் கண்ணை மறைத்து
விட்டது, மல்லி டியர்
இனியாவது ஈஸ்வரன், வர்ஷினி இவர்களின் வாழ்க்கை
சரியாகுமா?
நம்ம ரதிப்ரியா டியர், சொன்னது போல நான்கு வேண்டாம்,
இரண்டு குழந்தைகளாவது, இவர்களுக்கு வர வேண்டும்,
மல்லி செல்லம்
இந்த ரூபாவுக்கு, வேறு வேலையே இல்லையா?
ஏற்கெனவே ஐஸ்வர்யா, ஈஸ்வரை ஒப்பிட்டுப்பார்த்து
வரும் வரனையெல்லாம் தள்ளுபடி பண்ணுறாள்
இதிலே, நம்ம வர்ஷிக்குட்டி, விஷ்வாவிடம் டைவர்ஸ்
கேட்டதை மெனக்கெட்டுப் போய் ஐஸிடம், சொல்ல
வேண்டுமா?
இவளெல்லாம் எப்படித்தான் ஜெகனுக்கு தொழிலில் ஹெல்ப் பண்ணுறாளோ?
ஒரு வேளை இந்த ரூபாவுக்கு, வர்ஷியை விட்டுவிட்டு,
ஈஷ்வர் ஐஸை கல்யாணம் பண்ணட்டும் என்ற
எண்ணமிருக்குமோ?
ஆனால், அது ஒரு நாளும் நடக்காதே!
இனி, ஈஷ்வர் வர்ஷியைத் தவிர, வேறு யாரையும்
திரும்பிப் பார்க்க மாட்டானே!
ஹ்ம்ம்.......................ஏற்கெனெவே வர்ஷிக்குட்டி.
விஷ்வாவிடம் உரண்டை இழுத்துக்கொண்டிருக்கிறாள்
இதிலே. இந்த ஐஸ்வர்யாவைப் பார்த்த பின்பு. வேறு
என்ன நடக்குமோ=ன்னு ஒரே கவலையா இருக்கு,
மல்லி டியர்
இப்படி என்னை புலம்ப வைத்து விட்டீர்களே, மல்லி டியர்
Waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
கவலை வேண்டாம்...புயலுக்கு பின்னே அமைதி தானே....இனி..நல்லதே நடக்கும்...விடிந்துவிடும்...மல்லியே சொல்லிட்டாங்களே
:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top