E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
எங்க தல யாருக்கும் தெரியக்கூடாது என்று எவ்வளவு முயற்சி.:)..அதுக்கு அர்த்தம் இல்லாமல் போகாது...யாராவது குதிப்பாங்க:cool:
நான் இப்படி நினைச்சேன்.... ஐஸ்வர்யா பார்த்தா ஏதாவது insult -டா ஏதாவது சொல்லுவா...
வர்ஷினிக்கு கோவம் வரும்....ஆனா ஈஸ்வர் பாவம்னு இருக்கு.... அன்பு கடியா எடுத்துக்க சான்ஸ் இருக்கு,,,,
 
Sundaramuma

Well-Known Member
அப்படியா சொல்றீங்க...வாய்பபில்ல....
அவன் காதல் புரியணும்அவளுக்கு...
அவள் மேல்அவனுக்கு காதல் இல்லை என்பதையும் புரிய ஒரு வாய்பபோன்னு தோணுச்சு....அவளிடம் சிகிச்சை செய்ய மறுப்பான்..ஆனால் வேற வழியில்லை
ippo than ippadi naanum sonnean.... adutha pakkam unga comment ....
 
Sundaramuma

Well-Known Member
மிக அருமையாக, அழகாக, கருத்துக்களைச் சொன்னீர்கள்,
சுந்தரம்உமா டியர்

நீளமான கமெண்ட் படிக்கவே போராயிருக்கும்...... ஆனால் உங்கள் தொகுப்பாய்வு மிக அருமை, உமா....
உண்மையாவே SJM addicts தான், நாம்...
இவ்வளவு அழகான ஆழமான நடுநிலையான விளக்கம்...ஆனாலும் மனதில் உள்ளதை முழுமையாக சொல்ல முடியவில்லை...
வாவ் ரொம்ப சூப்பர்...
இந்த மனநிலைதான் நிறைய வாசகியோட
கருத்துக்கள் சிஸ்.
ஆழமான அழுத்தமான கருத்துக்கள் உமா. .

Banuma comment quote panna mudila vera page la irukku...

Ivlo per sollathathaya naan solla poren..
Uma its awesome..
Yes we are mad abt sjm and malli..
animated-thank-you-image-0070.gif
 
Sundaramuma

Well-Known Member
No no no.. Mega..
நான் அப்படி சொல்லல..
அவன் காதல் அவளுக்கு எப்போதோ தெரியும்... உணரத்தான் இல்லை..

நான் சொல்வது ஐஸ், தன்மேல் விஸ்வா கொண்டது காதல் அல்ல என உணர வேண்டும்...
விஸ்வாவும், வர்ஷியும் உயிருக்குயிரானவர்கள் என புரிய வேண்டும்...

வர்ஷியும் ஐஸ் இன்னும் விஸ்வாவை நினைத்து கொண்டிருக்கவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்...
இருவரும் உண்மையில் காதலிக்கவில்லை என அறிய வேண்டும்...
okay-perfect-sign-emoji-emoticon-cartoon-character-giving-hand-gesture-74458357.jpg
 
Ansadoss

Well-Known Member
Good Morning friends:)
நடந்த கலவரத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியது ஒன்று தான். மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் இப்படியோர் ஆக்ரோஷத்தை வெளிடுத்தும் வர்ஷினி பிரச்சினை நடந்த காலகட்டத்தில் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பாள்?:eek: நினைத்து பார்க்க இயலவில்லை.

(கற்பனை செய்ய முயற்சித்தால் என் நியூரான், நெப்ரான் ரெண்டுமே செயலிழக்குது. அதாங்க Brain & Kidney)
உடன் இருந்திருந்தால், நிச்சயம் ஈஸ்வரை கொன்றிருப்பாள் என்றே எனக்கு தோன்றுகிறது.
கொலையும் செய்வாள் பத்தினி
அதனால் தான் உள்ளூரில் இருந்து கொண்டே விடுதி வாசம். அதன் பிறகும் அயல்நாட்டில் வனவாசம். ஈஸ்வரிடம் மணவிலக்கு கோருவது கூட அவனது நன்மையை உத்தேசித்து தானோ?

தன்னை விரும்பி (கட்டாயப்படுத்தி) மணந்தவன் தனக்கு முன்பே ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி இருக்கிறான் என்பதே இங்கு வர்ஷினியின் பிரதான குற்றச்சாட்டு. ஏன் இந்த விஷயத்தில் இத்தனை கோபம். எதனால் இப்படியோர் வலி. அவனால் தான் அனுபவித்த அத்தனை கஷ்டங்களிலும் இந்த விஷயம் முதலிடம் பிடித்தது எதனால்?? வர்ஷினியின் கடந்த கால வாழ்க்கை (அம்மா) சம்பந்தப்பட்ட நிகழ்வின் தாக்கமாக இருக்குமோ?

பார்த்த உடன் ஐஸ்வர்யாவின் கண்ணுக்கு கூட தென்படும் வர்ஷுவின் காதல் சம்மந்தப்பட்ட இருவர் கண்ணிலும் படாமல் கண்ணாமூச்சியாடுவது ஏன்?

ஈஸ்வரின் முன்னாள் காதலை அறிந்த வர்ஷிக்கு முன்னாள் காதலி யார் என்பது தெரியாதோ?? அவன் முன்னாள் காதலியாக எண்ணி இருந்தவள் இந்நாள் வரை திருமணமாகாமல் இருக்கிறாள் என தெரிந்தால் வர்ஷியின் நிலை??

ஐஸ்வர்யா இவள் எப்படிபட்டவள்?
(வரும் காலத்தில் மல்லியின் கதாநாயகியாக உலாவர முழுத் தகுதியுடையவள். ஈஸ்வரின் தங்கை என்பதாலேயே கொண்டாடடப்படும் ரஞ்சனியை காட்டிலும் பல மடங்கு உயர்ந்தவள். ஈஸ்வர் தனது திமிர்தனத்தை காட்டாமல் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து விளக்கி இருந்தால் அஸ்வினைவிடவும் அதிகமாக வர்ஷினியிடம் பாசம் வைத்திருப்பாள் - இது ஐஸ்வர்யா பற்றிய எனது நிலைப்பாடு)

ஆனானப்பட்ட அஸ்வினே நல்லவனாகிட்டான். அவனோட தங்கை எப்படி...? ஈஸ்வர் தன் திருமணத்தன்று ஐஸ்வர்யாவிடம் பேசிய வார்த்தைகள்...

பெண் பாவம் பொல்லாதது. ஒரு பெண்ணின் கண்ணீர் ஏழுதலைமுறைக்கும் தொடரும் என்பார்கள். ஈஸ்வரோ இரு பெண்களின் கண்ணீருக்கு காரணமானவனாய் இருந்துவிட்டான்.

உப்பை திண்றவன் தண்ணீர் குடிக்கிறான்.

சண்டையில பிசாசுன்னு (ரத்தக்காட்டேரி) திட்டியதை அவன் ரத்தத்தை சுவைத்து நிருபித்துவிட்டாயே மை டியர் பால்கோவா.

என்னடா காதல் இது எவன் சொன்ன...
 
Last edited:

Adhirith

Well-Known Member
Good Morning friends:)
நடந்த கலவரத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியது ஒன்று தான். மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் இப்படியோர் ஆக்ரோஷத்தை வெளிடுத்தும் வர்ஷினி பிரச்சினை நடந்த காலகட்டத்தில் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பாள்?:eek: நினைத்து பார்க்க இயலவில்லை. உடன் இருந்திருந்தால், நிச்சயம் ஈஸ்வரை கொன்றிருப்பாள் என்றே எனக்கு தோன்றுகிறது.

கொலையும் செய்வாள் பத்தினி
அதனால் தான் உள்ளூரில் இருந்து கொண்டே விடுதி வாசம். அதன் பிறகும் அயல்நாட்டில் வனவாசம். ஈஸ்வரிடம் மணவிலக்கு கோருவது கூட அவனது நன்மையை உத்தேசித்து தானோ?

தன்னை விரும்பி (கட்டாயப்படுத்தி) மணந்தவன் தனக்கு முன்பே ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி இருக்கிறான் என்பதே இங்கு வர்ஷினியின் பிரதான குற்றச்சாட்டு. ஏன் இந்த விஷயத்தில் இத்தனை கோபம். எதனால் இப்படியோர் வலி. அவனால் தான் அனுபவித்த அத்தனை கஷ்டங்களிலும் இந்த விஷயம் முதலிடம் பிடித்தது எதனால்?? வர்ஷினியின் கடந்த கால வாழ்க்கை (அம்மா) சம்பந்தப்பட்ட நிகழ்வின் தாக்கமாக இருக்குமோ?

பார்த்த உடன் ஐஸ்வர்யாவின் கண்ணுக்கு கூட தென்படும் வர்ஷுவின் காதல் சம்மந்தப்பட்ட இருவர் கண்ணிலும் படாமல் கண்ணாமூச்சியாடுவது ஏன்?

ஈஸ்வரின் முன்னாள் காதலை அறிந்த வர்ஷிக்கு முன்னாள் காதலி யார் என்பது தெரியாதோ?? அவன் முன்னாள் காதலியாக எண்ணி இருந்தவள் இந்நாள் வரை திருமணமாகாமல் இருக்கிறாள் என தெரிந்தால் வர்ஷியின் நிலை??

ஐஸ்வர்யா இவள் எப்படிபட்டவள்? ஆனானப்பட்ட அஸ்வினே நல்லவனாகிட்டேன். அவனோட தங்கை எப்படி...? ஈஸ்வர் தன் திருமணத்தன்று ஐஸ்வர்யாவிடம் பேசிய வார்த்தைகள்...

பெண் பாவம் பொல்லாதது. ஒரு பெண்ணின் கண்ணீர் ஏழுதலைமுறைக்கும் தொடரும் என்பார்கள். ஈஸ்வரோ இரு பெண்களின் கண்ணீருக்கு காரணமானவனாய் இருந்துவிட்டான்.

உப்பை திண்றவன் தண்ணீர் குடிக்கிறான்.

சண்டையில பிசாசுன்னு திட்டியதை அவன் ரத்தத்தை சுவைத்து நிருபித்துவிட்டாயே மை டியர் பால்கோவா.

என்னடா காதல் இது எவன் சொன்ன...

good morning annu....

nice analysis .....you bring out
the finer points or essence of the episode
(para 1,2)

ஐஸூக்கு மட்டும் இல்லை,படிப்பவர் அனிவரின்
மனதிலும் அந்த பிம்பம் பதிந்துள்ளது....
மல்லியின் கண்ணாமூச்சி விளையாட்டில்
நிழல் நிஜமாகுமா????

Parting sceneல்,அவளை சுய மரியாதை உள்ள
பெண்ணாகத்தான்,ஐஷூவை காண்பித்து இருப்பார்கள்...
காதல் சொன்னேன்,உண்மையில் அது காதல் இல்லை
என்று சொல்லி,தன்னை ,அவன்
நியாயப் படுத்திக் கொள்ளலாம்..
அது அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம்...
பாதிக்கப்பட்ட ஐஷின் நியாயம் என்ன?
மல்லி இன்னும் சொல்லவில்லை....

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு அல்லவா?????
ஒரு பக்க நியாயத்தை கொண்டு நாம் தீர்ப்பு
கூற முடியாது...

அஸ்வின் செய்தது நம்பிக்கை துரோகம் ...
அப்படி பட்டவனையே,நல்லவனாக மாற்றி விட்டார்கள்...

ஐஷ்,நம்பிக்கை துரோகத்தால் ,
மனதில் அடி வாங்கிய பெண்....
மல்லி அவளுக்கும், நியாயம் செய்வார்கள் ...
என்று நம்புகிறேன்....

பிசாசு என்று கூறியது,ஐஷை...
ரத்த காட்டேரி,என்று தன்னை கூறியதாக
அஷ்வினிடம் சொல்வாள்,நம்ம பால்கோவா...

காதலே இல்லையா !!!!!!?????
அதையும் தாண்டி...............!!!!!!!!??????

மறந்துட்டேன் ராணிமா. படிச்சி ரொம்ப நாள் ஆகிடிச்சி. முன்பெல்லாம் திரும்ப திரும்ப படிப்பேன். இப்போ வேலை பளுவின் காரணமாக திரும்ப படிக்கவில்லை. பேய் பிசாசுன்னு ஏதோ திட்டினான் என்பது மட்டும் ஞாபகம்.
:D:D அதனால் தான் ரத்தம் குடிக்க முயற்சி பண்ணியிருக்கா;)
 
Last edited:

sindu

Well-Known Member
ஐஸ் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமே
விரட்டி விரட்டி காதல் செய்து
காதல் சொல்லி
முடிவில் அது காதலே இல்லை என்று அவன் உணர்வதற்குள் அவள் மனதில் எத்தனை கற்பனைகளோ

இப்போ ஈஸ்வர் இருக்கும் நிலை அறிந்தால், ஒரு மருத்துவராக, ஒரு பெண்ணாக நிச்சயம் அவனுக்காக வருந்துவாள்
அவனின் நிலை அவளுக்கு அவன் மேல் உள்ள கோபம் போக்க வழி வகுக்குமா ??? அவனுக்காக பரிதாபபடுவாளா இல்லை அவர்கள் வாழ்வை சீர் செய்வாளா???

இப்போ வருவது ஈஸ்வர் - வார்ஸ் temporary trucenu Malli solli irrukanaga....
அதனால் eswar-வார்ஸ் உறவு முற்றிலும் மேம்பட ஐஸ் முழு காரணமாக இருக்க மாட்டாள் ... ஒரு வேலை முதல் படி ....

ஐஸ் - ஈஸ்வர் பற்றி வர்ஷினிக்கு சொன்னது யார் ??? இன்னும் இந்த சஸ்பென்ஸ் எப்ப உடையுமோ ?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top