E3 Nee Enbathu Yaathenil

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்

அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..

அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..

குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..

பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்

குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..

குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிண்ட்டுவும் (தீக்ஷ்)

அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்

நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)

அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..

மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..

அவளும் நானும்
அழகும் தமிழும் ..

அவளும் நானும்
நட்பும் அன்பும்...

அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..

Spl thanks to all wishing hearts who wished us....

Fathi super kalakureenga...
 

Sundaramuma

Well-Known Member
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...

கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??

கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..

மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
Beautiful.....Fathima:):):)
 

Sundaramuma

Well-Known Member
Hi. Malli....
ஒரு ஸ்மைலியோட ஒரு பதிவு....
முதல் முறையாக.....
So happy....

பட்டை தீட்டப் படாத வைரத்தின்
வைர நெஞ்சம் வைராக்கியம்
உடையதாக இருக்குமா?????

ஈரப் புடவையில் நடக்க முடியாமல்
தடுமாறும் விமலா அம்மாவுக்கு
ஈரத்தை பிழிந்து ,உதவி செய்யும்
சுந்தரி தான் எனக்கு அழகாக தெரிகிறாள்...
ஒரு ஒரு சின்ன விஷயத்துக்கும்
நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்....
I hope I understand the
working of your mind veryyyyyyyy well..
Am I??????...:cool:


கண்ணனின் அப்பா ஒரு யதார்த்தவாதியாக
தான் எனக்கு தெரிகிறார்....


எந்த நேரத்திலும் பணி நீக்கத்திற்கு
வாய்புள்ள IT துறையில் வேலை பார்க்கும்
தன் மகனுக்கு அப்படி ஒரு நிலை வந்தால்,
அவனுடைய financial securityஐ
மனதில் கொண்டு சொத்துப் பற்றி பேசுவதில்
எந்த தவறும் இல்லை என்று தான்
தோன்றுகிறது....


கண்ணனின் சாயல் சின்ன கண்ணனிடம்...
காணும் சுந்தரியின் மனநிலை அறிய
ஆவலுடன் காத்திருக்கிறேன்
அடுத்தப் பதிவிற்கு.....

இந்த பதிவு,as usual,மேஜிக்.....
அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் .......
ஆனாலும் கண்ணனின் அப்பா விமலா அம்மாவை ரொம்ப தான் திட்டிட்டார் .....
சூப்பர் ராணி.....:):):)
 

Sundaramuma

Well-Known Member
உண்மைதான் பாத்தி....
இப்போ ஓடி போனவன் கல்யாணத்திற்கு முன்னாடி ஓடி போயிருக்கலாம் ல....

ஓ... தேர்வு இருந்ததோ....

இல்லாவிட்டாலும் கைய கால கட்டியா மணமேடையில் போட்டுருப்பாரு, அவன் அப்பா.....
தேர்வுக்கு தன் ஒரு மாசம் இருந்ததே..... ஓடி போய்ட்டு அப்புறம் வந்து இருக்கலாம்.....
கை கட்டிட தாலி கட்ட முடியாது .....
 

Sundaramuma

Well-Known Member
dedicated to sundari my babe

தனித்து வாழ்தல் அழகு
அதில்
வீரம் சேர்தல் மிக அழகு

தன்னம்பிக்கை கொள்ளல் அழகு
அதை
கைவிடாமல் இருத்தல் மிக அழகு

உழைத்து வாழல் அழகு
அதில்
உறுதி கொள்ளல் மிக அழகு

மனத்திடம் கொள்ளல் அழகு
அதில்
நிலைத்து நிற்பது மிக அழகு


சுயமரியாதை கொள்ளல் அழகு
அதே
பற்றாய் கொண்டு எழுந்திடல் மிக அழகு


சுந்தரியின் சுந்தரங்கள் தான் எத்தனை
சொல்லாமல் விட்டது எத்தனை
இத்தனை அகஅழகுகள் உள்ள உனக்கு எதற்கு புறஅழகு


சுந்தரனுக்கு தேவை சுந்தரம்
என்ன மாயமா மந்திரமா இந்த சுந்தரம்
அகஅழகு பட்டை தீட்டபட புற அழகு மின்னும்


அக கண்ணிருப்போருக்கு தேவை இல்லை புறம்

அஃதிலாருக்கு என்றுமே இல்லை வரம்
ஆம் வரமான வாழ்வு
கவிதை அழகோ அழகு:):):)
 

Sundaramuma

Well-Known Member
அவ தைரியத்தை பார்த்து 'பிராவோ' னு துரை இங்கிலீஷ்லாம் பேசுது....

திரும்பவும் சுந்தரியிடம் பேச வருகிறானே.... என்ன தைரியம்...

கொடுமை படுத்திட்டோம், துரத்திட்டோம் என அவன் அம்மாவையும் தப்புக்கு கூட்டு சேர்த்துக்குறான்....

தங்கைகளின் வாழ்வு பற்றி கவலைப்படுறானே,
சுந்தரி வாழ்வு பாழாக்கிவிட்டு? .....
நல்ல நியாயம்தான்...
thumbsup.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top