E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM,
உங்களை வருந்த செய்ய முடியுமா ?? ஏன் ?எதற்கு?


புதுமை பேசும் உலகம் ........
பொய்யாய் முகமூடி அணியும் ..
பொற்கொல்லனாய் பெண்ணியம்
மாறாத விதிகள் எழுதி
விடை தெரியா வீதியில்
தள்ளப்பார்க்கும் ...
சீர்துக்கி பார்க்காது....
சிந்தனையும் வளர்க்காது ......
வெற்றிடமாய் ஆகிட்டவே
வெறியாய் உழைத்திடும்.....
அடுத்தவர் வாழ்வென்றால்
அடக்கமாய் விளக்கமளித்துடும்
இனமே இனத்திற்காக ..........
எதிரியின் பாசறைக்குள்
தள்ளப்பார்க்கும்
தன்னம்பிக்கையையும் தன்மானத்தையும்
விலை பேசி விற்றுவிடும்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
விருந்தோம்பல் கட்டயாமாகப்படும்
அரங்கேற்றம் முடிந்தாலும்
அனுசரணை இல்லாவிட்டாலும்
அனுமதி கிடையாது
அமைதிக்கு
 

fathima.ar

Well-Known Member
அருமையான வரிகள் மீரா:) அதுவும்
காந்தலாய் அவள்
காதலாய் அவன்
நிதர்சன வார்த்தைகள் :)


காந்தலாய் அவள்
காந்தமாய் மாறும் நேரம்..
நொருங்கிய காதலனின்
மனம் ஒட்டிவிடும்...:p
 

MythiliManivannan

Well-Known Member
எரிதனலாய் என்னுள் நீ
உன்னில் கரைந்து
உருகி வழிகிறேன் நான்....
நான் வைத்த புள்ளிகளை
தவறாக இழை கோர்கிறாய்
எங்கிருந்து சரிசெய்ய
புரியாமல் தவிக்கிறேன்.....
நீல நயனங்களில்
சமுத்திரம் படைக்கிறாய்
சிக்கிச் சிதறுகிறது
வாழ்கை படகு......
எதை செய்து உனை மீட்க
விலகும் விரல்களை
இறுக்கி பிடிக்கிறேன்
வழிகளை அலசியபடி...
கானலோ காட்சிப்பிழையோ
எதனிலும்
உன்னுடன் நான் ...
அருமை மதி:)
 

MythiliManivannan

Well-Known Member
பண்ணறதெல்லாம் நெஞ்ச கிழிக்கிற வேலை தான்..
அப்புறம் கடைசில என்ன ஒரு கேள்வி..
Did I hurt u?.. nu..

அதான் ஊருக்கே தெரியுமே...
நீங்க மட்டும் வர்ஷோட மாமியாரா இருந்தீங்க, அவ்வளவுதான். ஏதா ஈஷ்வரோட அம்மா மலரா இருக்கப்போய் அவ தப்பிச்சா;)
 

Hema27

Well-Known Member
மாயம் செய்து
மாய உலகம்
நுழையவில்லை..

அதன் பகட்டும்..
படாடோபமும் ஈர்க்கவில்லை.

வெற்றிகளெல்லாம்
மகிழ்விக்கவில்லை..

போதை கொள்ளும்
வரை அருந்தினாலும்..

பேதையின் விழி
தந்த மயக்கத்திற்கு
ஈடில்லை..


எனக்கானவள் என்று
ஆன பின்பும்..
அவளுக்கானவன்
என்ற நம்பிக்கை
கொடுக்கவில்லை...


பார்த்த நொடி முதல்
கொண்ட ஈர்ப்பு..
நெருப்பாய் அவளை
சுட்டுச் சென்றது..


கொண்ட பித்தம்
தீர மருந்தாய்
ஆனாள் அவள்...


மருந்துக்கும் பித்தம்
தலைக்கேற
மருந்தாகி போனது
போதை மாத்திரை..


மறக்கவும் மன்னிக்கவும
வேண்டாம்..
அவன் உள்ளம் வாழும் அரசியே..


வாழ்வை அதன் போக்கில்
வாழ்ந்திடு..
ஈஷ்வரின் அன்பாட்சி பெருகியே..
வர்ஷியின் மனம் மலரட்டும்....
Super fathee... Very nice
 

vidhya_sathya

Active Member
Really good ud, bore adikum na sollreenga, ithai vida oru ponnala thannai velipadutha mudiyathu, really ivalavu practical eluthee irrukeenga, SJM is really pokkisham, eppidi kathai varutho appidiye eluthunga athu engaluku pidichiruku, u r soooooo great and I am very that I got a chance to read ur writings, keep on rocking mam . No other words to express
 
C

Cynthu purushoth

Guest
Hi Malli
Superb...No words to say about this epi ... Varsh and eashwar the best ....
அதுவும் கடைசியில் எழுதி இருக்கும் வரி மோகம் நான் மோக முள் நீ... அருமை.... வர்ஷினி ஒவ்வரு முறை காயப்படுத்தும் போதும் அவள் மேல் வெறுப்பு வரவில்லை பதிலாக பரிதாபமாக இருக்கு... !!!
அவள் காயத்தின் மருந்து அவன் தான் எனின் கசப்பை யோசியாமல் குடிக்கலாம் அல்லவா !!!
Waiting eagerly for next episode...
 

ThangaMalar

Well-Known Member
நீங்க மட்டும் வர்ஷோட மாமியாரா இருந்தீங்க, அவ்வளவுதான். ஏதா ஈஷ்வரோட அம்மா மலரா இருக்கப்போய் அவ தப்பிச்சா;)
எனக்கு புரியலையே..
ஈஸ்வரோட அம்மா தானே வர்ஷிக்கு மாமியார்? :(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top