E12 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
எப்பவும் முதலில் மல்லிகாக்கு என்னோட கருத்துக்கள் தெரிவித்து
விட்டு தான் எல்லாரோட கமெண்டும் படிப்பேன்..... இன்னைக்கு எல்லாரோட கமெண்டும்
முதலில் படிச்சுட்டதால எனக்கு தனியா போட ஒன்னும் இல்லை .....
அபி , அம்மாவை தேடவே இல்லை .......தாத்தா, பாட்டி, அத்தைகள் கூட ஒட்டி கிட்டான் போல இருக்கு ......
சுந்தரி, விமலா அம்மாவை தவிர்க்கிற மாதிரி இருக்கு..... முழு தவறும் அவரிடம் இல்லை ....
சந்திரன் தன்னோட மனைவி , மகனுடன் பேசி முடிவெடுக்காமல் விட்டது தான் எல்லவற்றுக்கும் காரணம்....
விமலா அந்த ஐந்து நாட்கள் சுந்தரியை வேலை காரியா நடத்தினார்.....இப்போ மகன் சுந்தரியிடம் வேலைக்காரனாக ......
well, what goes around comes around.....
அழகு பதிவு......
Thank you very much.Mallika :):):)
ஆம் நானும் நினைத்தேன் குழந்தை எல்லோரிடமும் ஒட்டி கொண்டது அதுவே அவள் இரங்கி இறங்கி வருவதற்கு ஒரு காரணமாயும் இருக்கும்
 

malar02

Well-Known Member
Hi Malli.....
Good Morning.....

உறவுகளின் வரவு ஓரே நாளில்....
அதுவும் கண்ணனை முன் நிறுத்தி
அவளுக்காகா இல்லை என்னும் பொழுது
படிக்கின்ற எனக்கே பதட்டமாக இருந்தது......:p
Poor Sundari....
அவளின் பதட்டம் புரிந்தது...

உள்ளது உள்ளபடியே உரைக்கும் அவனின் தன்னிலை விளக்கம்...
ஆனால் அதை ஏற்க மறுக்கும் அவள்.....
அவனோடு ஆன வாழ்க்கையையும் மறுக்கிறாள்....ஸ்திரமாக
போன எபியில் என் கேள்விக்கான பதில்.......இந்த பதிவில்....

ஆனால் முடியுமா,அவளால்.....????
மகனை கொடுக்க மாட்டேன் என்ற வைராக்கியம் தளர்ந்தது....
வீட்டினுள் விட மாட்டேன் என்ற உறுதி இருந்த போதும்
அவளின் இயலாமையால் அவன் வரும்படி ஆகியது...
இப்பொழுது அவனுடன் கூட சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை.....

மல்லி,உங்களின் கேள்விகளுக்கான பதில் எங்கே????
அந்த பதிலில் அவளின் விருப்பமின்மை மாறுமா?????
Me hope so....

Have a happpppppy Sunday....:):cool:
மனதினில் அடிபட்ட காயம் இன்னும் ஆறவில்லை போல்.......... அது ஒன்னும் லேசான காயமில்லையே.......... கால போக்கில் வலியின் தாக்கம் குறைந்தாலும்......... எப்படியும் அவள் இறக்கும் வரை அவளுடனே ஆழ்மனதில் பயணிக்க போகும் ஒரு வலியின் சுவடுதானே
 

Adhirith

Well-Known Member
மனதினில் அடிபட்ட காயம் இன்னும் ஆறவில்லை போல்.......... அது ஒன்னும் லேசான காயமில்லையே.......... கால போக்கில் வலியின் தாக்கம் குறைந்தாலும்......... எப்படியும் அவள் இறக்கும் வரை அவளுடனே ஆழ்மனதில் பயணிக்க போகும் ஒரு வலியின் சுவடுதானே

புது மணப்பெண் என்ற சுவடு அழியும் முன்பே
ஏற்பட்ட காயம்.....மிகக் குறைந்த இடைப்பட்ட
கால அளவில்....காயம் பசுமையானதாக தான் இருக்கும்....

உடனே அதிலிருந்து விடுபடுவது மிகவும் கஷ்டம் தான்...
ஆனால் ,அதை குணப் படுத்துவதற்கான
மருந்தாக அவன் இருப்பானா????
இல்லை தன்னத்தானே குணப்படுத்திக் கொள்வாளா????


Yes,அவளுடன் கூடப் பயணிக்கப்போகும்
தவிர்க்க முடியாத வலியின் சுவடு.....


 

banumathi jayaraman

Well-Known Member
அதானே... ரொம்ப சரியா சொன்னிங்க பானுக்கா.....

முதல்ல படிப்பாளி.... அப்புறம் தான் படைப்பாளி...... அதும் மல்லி ஸ்டோரீஸ்.... ம்ம்ம்.......:);):rolleyes:
கி........ கி........... கி.........
என்னை எப்பொழுதும், நினைப்பதற்கு ரொம்ப நன்றி,
லதா பைஜூ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
காதலி :- உங்களுக்கு ராணின்னு எற்கெனவே ஒரு மனைவி இருக்கிறதை ஏன் என் கிட்ட சொல்லல?
காதலன் :- சொல்லலையா? உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே |
நபர் 1 :- டாக்டர், பஸ்ல ஏறி உட்காந்ததும், ஒரே தூக்கமா வருதுங்க|
டாக்டர் :- தூக்கம் வந்தா..., தூங்க வேண்டியது தானாயா?
நபர் :- அப்புறம், பஸ்சை யார் ஒட்டுறது டாக்டர்...,
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
சிந்தனை சிறுகதை.{.முகநூலில்..வந்த சிறுகதை}
ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,
அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள், அவன் வாழ்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக்கொண்டிருந்தது.
எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது...
நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது
, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது.
கொல்லனுக்கோ ஊடலிலும்
, காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,, சோகமே உருவாகிவிட்டான்.
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து
நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான், மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது, அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்.
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில்
, கொல்லன் விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.
ஒருநாள் அளவளாவி இருந்த வேளையில் மனைவி கேட்டாள் "மாமோய்
, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?"
விறகுவெட்டியான நம்ம கொல்லன் சொன்னான் "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக்கொழம்புமாய் இருக்கும், இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதானடி மனசுக்கு என்னவோ போல இருக்கு,
இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலயே"
என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள் கலங்காதீக
, என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும" என்றாள்.
மீண்டும்
புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகுவெட்டியானவன் விறகுக்கடை முதலாளியானான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்.
ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன
, வந்தது கெட்ட நேரம், விறகு
கடையில் தீ விபத்து!
அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்
, கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து, எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.
மனைவி வந்தாள்
,கண்ணீர் துடைத்தாள்.
"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்டி இடிந்து உட்கார... விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும்
வாழ்வில் ஒளி தெரிந்தது.
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்...
தன்னம்பிக்கை ஸ்டோரி, மிகவும் அருமை, சகோதரரே
 

kayalmuthu

Well-Known Member
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி..இதை தான் கண்ணன் செய்கிறான்.சுந்தரிக்கு தான் அவள் டைந்த வலி புரியும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top