E12 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
காதலி :- உங்களுக்கு ராணின்னு எற்கெனவே ஒரு மனைவி இருக்கிறதை ஏன் என் கிட்ட சொல்லல?
காதலன் :- சொல்லலையா? உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே |
 
murugesanlaxmi

Well-Known Member
நபர் 1 :- டாக்டர், பஸ்ல ஏறி உட்காந்ததும், ஒரே தூக்கமா வருதுங்க|
டாக்டர் :- தூக்கம் வந்தா..., தூங்க வேண்டியது தானாயா?
நபர் :- அப்புறம், பஸ்சை யார் ஒட்டுறது டாக்டர்...,
 
murugesanlaxmi

Well-Known Member
சிந்தனை சிறுகதை.{.முகநூலில்..வந்த சிறுகதை}
ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,
அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள், அவன் வாழ்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக்கொண்டிருந்தது.
எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது...
நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது
, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது.
கொல்லனுக்கோ ஊடலிலும்
, காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,, சோகமே உருவாகிவிட்டான்.
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான், மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது, அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்.
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில்
, கொல்லன் விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.
ஒருநாள் அளவளாவி இருந்த வேளையில் மனைவி கேட்டாள் "மாமோய்
, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?"
விறகுவெட்டியான நம்ம கொல்லன் சொன்னான் "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக்கொழம்புமாய் இருக்கும், இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதானடி மனசுக்கு என்னவோ போல இருக்கு,
இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலயே"
என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள் கலங்காதீக, என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும" என்றாள்.
மீண்டும்
புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகுவெட்டியானவன் விறகுக்கடை முதலாளியானான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்.
ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன
, வந்தது கெட்ட நேரம், விறகு
கடையில் தீ விபத்து!
அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்
, கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து, எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.
மனைவி வந்தாள்
,கண்ணீர் துடைத்தாள்.
"
இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்டி இடிந்து உட்கார... விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும்

வாழ்வில் ஒளி தெரிந்தது.
வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்...
 
murugesanlaxmi

Well-Known Member
படித்ததில் வலித்தது...
- துபாயில் தமிழ் ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கே வந்து "சாப்பிட என்ன இருக்கு" என கேட்டார்.
அவர்கள் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என்றனர்.
இவர் "எவ்வளவு" என கேட்டார். அவர்கள் "சிக்கன் 10 திர்ஹம் மட்டன் 12 திர்ஹம்" என்றனர்.
"சரி சரி அதெல்லாம் வேணாம். எனக்கு ஒரு டீயும், ரெண்டு பரோட்டா மட்டும் கொடு" என்று சொல்லி எனக்கு அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்.
உடனே ஹோட்டல் சர்வர் அவரிடம் "இதையெல்லாம் இங்கே உட்கார்ந்து
சாப்பிடக்கூடாது. பார்சல் வாங்கிட்டு போய் வெளியே சாப்பிடுங்க" என்று அனுப்பிவிட்டார்.
எனக்கோ மனசு ஒரு மாதிரி ஆயிடுச்சு. பாதி
சாப்பாட்டோடு வெளியே ஓடி அவரிடம் "அண்ணே உள்ளே வந்து என்கூட உட்கார்ந்து பிரியாணி சாப்பிட வாங்கண்ணே. நா காசு கொடுக்கறேன். பார்க்கவே மனசு கஷ்டமாயிருக்கு" என்று அவரிடம் பலமுறை கெஞ்சுகிறேன்.
ஆனால் அவரோ
"தப்பா நெனக்காதீங்க, எனக்கு அடுத்தவங்க காசுல வாங்கி சாப்பிட்டு பழக்கம் இல்லை. எனக்கு 700 திர்ஹம் (12,500 ரூபாய்) தான் சம்பளம் இதுலையே தான் சாப்பிட்டு செலவு பண்ணனும். இவ்வளவு காசு கொடுத்து இங்கே சாப்பிட்டா ஊருக்கு பணம் அனுப்ப முடியாது. இன்னைக்கு வெள்ளிக்கிழமை அசதில தூங்கிட்டதால சமைக்க நேரம் இல்லை. இருக்குற பசிக்கு இதுபோதும்" என்று திட்டவட்டமாக சொல்லிட்டார்.
என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீரோடு திரும்பி
ஓட்டல் முதலாளியிடம் இனி இதுபோன்ற செய்யாதீர்கள் என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
வெளிநாடு வெளிநாடு என்று பல கனவுகளோடு அலையும் இளைஞர்களே இதுதான்
#வெளிநாட்டு_வாழ்க்கை.
ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுபவனே #வெளிநாட்டுவாசி
படித்ததில் வலித்தது...{என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்}
 
Tharav

Well-Known Member
சிந்தனை சிறுகதை.{.முகநூலில்..வந்த சிறுகதை}
ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,
அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள், அவன் வாழ்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக்கொண்டிருந்தது.
எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது...
நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது
, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது.
கொல்லனுக்கோ ஊடலிலும்
, காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,, சோகமே உருவாகிவிட்டான்.
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து
நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான், மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது, அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்.
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில்
, கொல்லன் விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.
ஒருநாள் அளவளாவி இருந்த வேளையில் மனைவி கேட்டாள் "மாமோய்
, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?"
விறகுவெட்டியான நம்ம கொல்லன் சொன்னான் "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக்கொழம்புமாய் இருக்கும், இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதானடி மனசுக்கு என்னவோ போல இருக்கு,
இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலயே"
என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள் கலங்காதீக
, என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும" என்றாள்.
மீண்டும்
புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகுவெட்டியானவன் விறகுக்கடை முதலாளியானான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்.
ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன
, வந்தது கெட்ட நேரம், விறகு
கடையில் தீ விபத்து!
அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்
, கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து, எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.
மனைவி வந்தாள்
,கண்ணீர் துடைத்தாள்.
"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்டி இடிந்து உட்கார... விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும்
வாழ்வில் ஒளி தெரிந்தது.
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்...
Super
 
ThangaMalar

Well-Known Member
அன்று
பெண் வண்ணமில்லை
அவள் மேல் எண்ணமில்லை
சென்றாய்

இன்று
கொண்டாய் எண்ணம்
உடன்சேரும் வண்ணம்
கூடிவாழும் திண்ணம்
வந்தாய் இங்கு

அவசரத்தால்
வந்த எண்ணமதை
ஏற்குமோ பெண்ணவளின் மனது
பெண்ணவளின் காயமது
படு ஆழம் அது
ஆறும் முன் அதை
ஆற்றும் முன்
கொண்ட எண்ணத்தை
செயல் படுத்தும் கண்ணனே
அவசர மன்னனே
இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க
இது நூடுல்ஸ் அல்ல
அவள் என்பது யாதெனில்
நீ வைத்திருக்கும் பொம்மையல்ல
பெண்மை அவள்
கனிய காத்திரு
எங்க இருந்து வர்றீங்க பா நீங்கலாம்?..
பாராட்டு அகராதி தயார் பண்ணவுடன் உன்னை பாராட்டுறேன், மீரா..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top