E12 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..

உரிமை கோரினான்..
பாசம் வேண்டினான்..
உழைப்பில் பிரமித்தான்.
அவளின் தன்மையே
அவளிடம் ஈர்ப்பாய் மாறியது..
பருவத்தில் பிடிக்காத
பருவும் பிடிக்கிறது..
தலை கோத விரல் துடிக்கிறது..

இன்னும் உறுதியாய்
காதலை உணரவில்லை..
அப்படியும் பிதற்றவில்லை.
கசந்தாலும் உண்மை
கூற தயங்கவில்லை..

கடினமாய் உழைக்க
எடுத்த முடிவு..
தொழிலுக்கு மட்டுமன்றி.
ஒரு நல்ல குடும்ப
அமைப்பை பெறவோ..

மீண்டும் ஒரு மறுப்பை
தாங்குமா மெல்லினம்..
அழகாய் அதை
தாங்குமா வல்லினம்..

அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்..

அழகாக வார்த்தைகளை கோர்ககிறாய்
உள்ளங்களை கொள்ளை அடிக்கிறாய்..
எளிமை,+
நேர்மை..+
அருமை....= பாத்திமா கவிதை
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
மகளை பெற்றாதாள் எனது உரையும் இதுவே
"இந்த உரையை 'எனது மகளின் புதிய குடும்பத்தினரே' என்று உங்களை வரவேற்று ஆரம்பிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால், அது பொருத்தமாக இருக்காது என்பதால் கடைசி நிமிடத்தில் அதை தவிர்த்துவிட்டேன். அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைந்தாளோ அப்பொழுதே உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகிவிட்டாள். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவள் உங்கள் குடும்பத்தினருக்கே எப்போதும், எதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
எங்கள் மகளை
திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை
மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்"
அவள் எப்போதுமே எனக்கு
பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டுமட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும். எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.
அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு
, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள். ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என
நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள். அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள். உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.
அவளது
பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதேவேளையில், 'நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்' என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவளை மாதக் கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை
, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்குரிய மருமகனே...இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு
புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
...
ஒவ்வொரு தகப்பனின் உரை
 
murugesanlaxmi

Well-Known Member
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.*
*தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.*
*”நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே”.*
என்னா கேள்வி ?
*ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?*
*(வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியைக்*
*கேட்டு விட்டு, விடை சொன்னால்தான், நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்).*
*தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை.*
*கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.*
*அவள் சொன்னாள்:*
*விடை சொல்கிறேன்.*
*அதனால்,*
*அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும் ;*
*உனக்கு உன் நாடு கிடைக்கும்.*
*ஆனால் எனக்கு*
*என்ன கிடைக்கும் ?*
*அவன் சொன்னான்,*
*"என்ன கேட்டாலும் தருகிறேன்”.*
*சூனியக்காரக்*
*கிழவி, விடையைச் சொன்னாள்,*
*♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே,*
*ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.*
*இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல,*
*அவர்கள் திருமணம் நடந்தது.*
*இவனுக்கு நாடும் கிடைத்தது.*
*அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.*
*வேண்டியதைக் கேள் என்றான்.*
*அவள் கேட்டாள்*
*"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”.*
*கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.*
*உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.*
*அவள் சொன்னாள்,*
*"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;*
*ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் போது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.*
*இதில் எது உன் விருப்பம் ?” என்றாள்.*
*அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்*
*"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம் ; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்என்று,*
*அவள் சொன்னாள்,*
*"முடிவை என்னிடம் விட்டு விட்டதால்,*
*நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!என்றாள்.*
*ஆம்!*
*பெண்,*
*அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள்.*
*முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.*
 
murugesanlaxmi

Well-Known Member
தொண்டன் 1 :- இன்னைக்கு, தலைவர் நாலுபேருக்கு தெரிச்சவரஇருக்கிறார்னா?
தொண்டன் 2 :- வெட்கம்,மானம்,சூடு,சொரணை, நாலையும்,விட்டதுனாலேனு சொல்லவர்றியா.
 
murugesanlaxmi

Well-Known Member
நீ பட்ட துன்பதைவிட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது { சுவாமி விவேகானத்தார்.}
சுவாமி சொன்னது எவ்வளவு சரி பார்ங்க, சுந்தரியும், துரைகண்ணனும் பெற்ற துன்பம் அவர்களுக்கு இனிய அனுபவமே
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மகளை பெற்றாதாள் எனது உரையும் இதுவே
"இந்த உரையை 'எனது மகளின் புதிய குடும்பத்தினரே' என்று உங்களை வரவேற்று ஆரம்பிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால், அது பொருத்தமாக இருக்காது என்பதால் கடைசி நிமிடத்தில் அதை தவிர்த்துவிட்டேன். அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைந்தாளோ அப்பொழுதே உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகிவிட்டாள். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவள் உங்கள் குடும்பத்தினருக்கே எப்போதும், எதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
எங்கள் மகளை
திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை
மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்"
அவள் எப்போதுமே எனக்கு
பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டுமட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும். எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.
அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு
, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள். ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என
நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள். அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள். உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.
அவளது
பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதேவேளையில், 'நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்' என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவளை மாதக் கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை
, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்குரிய மருமகனே...இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு
புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
...
ஒவ்வொரு தகப்பனின் உரை
hands-clapping-applause-smiley-emoticon.gif
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீ பட்ட துன்பதைவிட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது { சுவாமி வி

வேகானத்தார்.}
சுவாமி சொன்னது எவ்வளவு சரி பார்ங்க, சுந்தரியும், துரைகண்ணனும் பெற்ற துன்பம் அவர்களுக்கு இனிய அனுபவமே
ஹா..ஹா..சூப்பர்..எப்படி லிங் பண்றீங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top