E11 Nee Enbathu Yaathenil

Advertisement

Adhirith

Well-Known Member
Legally they are separated
So they need to go for Registered marriage

சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அவுளுக்கு எதிரா இருக்கும் போது கண்ணன் வந்து அவளுக்கு ஆபத்பாண்டவனா கை கொடுக்கிறான்...
அவளுக்கு சிந்தா மற்றும் உறவுகள் கை கொடுக்க முடியாத dramatic situation

மாத நாவல் என வரும் போது, சிறிது சிறிதா மனதில் இடம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக்கி, அதன் மூலம் அவள் மனதில் புகுவதற்கு no of pages கூட தடை ஆகி விடுகிறது...
எனினும் கண்ணன் அவளுக்காக வேலை விட்டது என்பது அவன் யோசித்து எடுத்த முடிவு

விமலா தான் தவற விட்டதை தானே சரி செய்யணும் என நினைக்கிறார்....
waiting for epilogue

சிந்து உங்களுக்கு the end epi
வேண்டாமா

Epilogue கேட்கிறீங்க
 

fathima.ar

Well-Known Member
பூவா தலையா போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது தலையிலே
காயா பழமா கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது கனவி

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஓ.. நெனப்புக்கு அளவில்லே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
ஹோ.. கனவுக்கு விலயில்லே
என் மனதில் பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எந்த திசை அடையும்
என் இதயம் மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம் எண்ணி கரக்கும்
வினா கேட்டேன் விடை வருமே தா

Movie song..
 

sindu

Well-Known Member
Very very superb ud, Malli chellam
மிகவும் அருமையான, ஒரு பதிவை தந்திருக்கீங்க,
மல்லி டியர்
அதிலும் இரண்டு பார்ட், சூப்பரோ சூப்பர், மல்லி
செல்லம்
வரும் திங்கள் முதல், SJM சங்கீத ஜாதி முல்லை,
தர்றேன்=ன்னு, நீங்க சொன்னது, இன்னும், சூப்பரோ
சூப்பர்தான், மல்லி டியர்
hmm................ நம்ம துரைக்கண்ணன் 2 மாதமாக
வராததை நினைத்து, நம்ம சுந்தரி டியர் வருந்துவது,
நன்றாக இருந்தது பா
ஹா, ஹா, முன்பு ஒரேயடியாக விட்டுப்போனவன்,
திரும்ப வந்து ஆசையை மூட்டிவிட்டு,
போய்ட்டானே-ன்னு இவளுக்கு வந்த நிறத்தால்
தன்னிலை இழப்பது சகஜம்தான்,
பாவம் வடிவுப்பாட்டி, இவளைப் பற்றி
கவலைப்பட்டே உடம்புக்கு இழுத்து
விட்டுக்கொண்டார் போல்
ஐயோ பாவம், சுந்தரி வேறு காலில் சுடுநீரைக்
கொட்டிக் காலைப் புண்ணாக்கி கொண்டாளே
நல்ல வேளையாக நம்ம துரைக்கண்ணன் டியர்,
சிந்தா போய்ச் சொல்லி அப்பா முதலான
பெரியவர்களை வர வைத்து விட்டானே
அட நம்ம விமலாவா பாட்டியை பார்த்துக்
கொள்ளுறேன்னது
ஆனால் நம்ம துரையோட வீட்டில் ஐந்து நாட்கள் இருந்ததுக்கு
ஐந்து ஜென்மத்துக்கும் நம்ம சுந்தரி துன்பப்பட்டிருப்பாள் போலவே
என்னா பா இது புதுசா திருமணமாகி வந்தப் புதுப்பொண்ணுக்கு சோறு கூடவா வேளா
வேலைக்குக் கொடுக்க மாட்டாங்க
ஐயோ நம்ம சுந்தரி எவ்வளவு அவமானப்பட்டிருக்காள் இவளை இவ்வளவுப் பாடுபடுத்திட்டு எப்பிடிப்ப
ஒண்ணுமே நடக்காததைப் போல் கூலா சுந்தரி கிட்ட
திரும்ப வராங்க
நம்ம கண்ணன் டியரையும் சேர்த்துத்தான் சொல்லுறேன் இவளுக்கு இருக்கிற வசதிக்கு சுந்தரி டியர் பத்து
பவுனில் கூட தாலியைப் போட்டிருக்கலாம்
தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலி தானே
என்று அலட்சியமாக ஒரு சன்ன மெல்லிய சங்கிலியில் தாலியைப் போட்டிருக்கிறாள்
ஆனால் விவாகத்தைத் தான் ரத்து பண்ண முடியும் விவாகரத்தை என்ன செய்வது
நீங்கள் தான் சொல்ல வேண்டும் மல்லி செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, மல்லி டியர்

நியாயமான கேள்விகள்
இந்த இரண்டு வருடம் கஷ்டப்பட்டது இப்போ உதவி செய்ய வந்தவுடன் மாறும் வலி இல்லை

எனினும், இந்த சூழ்நிலையில் அவளால் அவனது உதவியை மறுக்க முடியாது....
 

sindu

Well-Known Member
சிந்து உங்களுக்கு the end epi
வேண்டாமா

Epilogue கேட்கிறீங்க
end epi will be like epilogue nu expect pannuraen...
after 2-3 yrs nu epi varalam....
ஒரு நாளில் அவன் மற்றும் அவன் குடும்பத்து உதவியை ஏற்று கொண்டாலும்.... ஒரு நாளில் அவனை ஏற்க முடியாது
அவன் இந்த ரெண்டு வருடம் தந்த வலி ஆழமானது

இப்போ கூட அவள் அவசரத்தில் வெந்நீர் தன் காலில் படவில்லை எனில் அழகாக situation handle பண்ணி இருப்பா
சிந்தா இருந்து இருந்தால் கூட உதவியா இருக்கும்
அவளுக்குரிய எல்லா வழியும் அடைச்சு போச்சு
so she need to accept his help...

but அதே வேகத்தில் அவனை மனம் தேடினாலும் ஏற்க முடியாது...
so expecting something similar to epilogue
பார்ப்போம் again halwa from Malli or not :)
 

Adhirith

Well-Known Member
Even in VTM there is no thali, but their love persists...
Thali irunthum emathura niraiya aangal samoogalithil irukanga....
thani manitha ozhukkam enbathu, parents eppadi valarkiranga and friends too play a major role....

VTM ல அக்ஷ்ஷரா இத்தியா
வரும் போதே தாலியுடன்
தான் வருவாள், சிந்து....

NEY ல் சுந்தரி அதற்குரிய மதிப்பு
கொடுக்கிறாள்
அவனுக்கு அதைப் பற்றிய எண்ணமே இல்லை
அதனால் தான் இப்ப அவளிடம்
பார்த்த உடன் திகைப்பு

வேறு பெண்ணை பார்ப்பதற்கும்
கட்டிய தாலிக்கும் எதாவது சம்பந்தம்
இருக்கா என்ன?
 

fathima.ar

Well-Known Member
அன்று அவசியமில்லாத அவசரம்..​
அவளை தாக்கியதோ பல சொற்கள்
தன்னை தாக்கியதோ
நெரிஞ்சி முள்ளாய் குற்ற உணர்வு..

இன்று அவசியமான அவசரம்..
இரண்டு மாதமாய் என்னை
தேடிய அவள் விழி..
என் வேலையை மறுத்து
அவளை சேரும் வழி..

ஆர்வமாய் காண வரும் முன்...
ஆதுரமாய் காண வேண்டிய நிலை..
அவளுடைய மன வேதனைக்கு
காரணமானவன் தான்...
அவளது உடல் வேதனையில்
துணை நிற்கிறேன்..

இது எங்களுக்கான நேரமெனில்..
இதயம் இனைய காத்திருக்கிறேன்..
 

malar02

Well-Known Member
முதல் திருமணம் வெறுப்பில் நடந்தது......
இப்போ அவன் விருப்பமா கோவில்ல வைச்சு தாலி கட்டி registration பண்ணனும்.....
தாலி மறுபடியும் கட்டலைனா கூட registration பண்ணனும்....
registration மறுபடியும் பண்ணினா தான் லீகல் marriage ....
ஆமாம் ஊருக்கு தெரிவிப்பது மிக அவசியமாகிறதே இல்லனா அத்துவிட்டவன் கூட சேர்ந்து வாழறா அப்படினு பேச்சு வரும் ஊருக்காக தன் டிரஸ் செய்து கொள்ளும் முறைமையையே கைவிட்டவள் திரும்பவும் சேரும் போது கண்டிப்பாக முறை பற்றி யோசிப்பாள் என்றே தோன்றுகிறது எல்லாத்தையும் விளக்கியவள் இதையும் அவனுக்கு விளக்குவாள் அவன்தான் கொஞ்சம் டியூப்லைடடா இருக்கானே
 

malar02

Well-Known Member
Hi mam

கதையை எங்களுக்கு நிறைய ஊகங்களுக்கு விட்டுவிட்டு,நாங்கள் என்னென்னவோ எழுதுகின்றோம் பேசுகின்றோமோ,அதற்கு நேர்மாறான நிகழ்வுகளை வெகு நேர்த்தியாக அடுத்து என்னவென்று ஆர்வத்தை தூண்டும்படியாக கொண்டு செல்கின்றீர்கள்,அன்று காலையில் சுந்தரிக்கு உடனடி உதவி செய்ய யாருமேயில்லை,பதட்டத்தில் கொதிநீரை தவறவிட்டு,அது காலில் பட்டு,வலியைக்கூட உணரமுடியாமல் ,அதேநேரம் அபராஜிதனை அந்தநீருக்குள் வராமல்தூக்கி,பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்கும் உதவுவதற்கு ஆளை அழைத்து,இப்படி ஒரே நேரத்தில் எவ்வளவு கஸ்ரம்,தனியொரு பெண்ணாக அழகாக சமாளித்தலும் அந்நேரம் தனிமையின் கொடுமையையும் அல்லவா அனுபவித்தனர்,அந்த நேரம் எவ்வளவு வலியோடும் பதட்டத்தோடும் இருந்திருப்பார்.இனி என்ன செய்வது என்ற பதட்டத்துடன் கூடிய தனிமை மிகக்கொடுமையானது ,அவ்வளவு பதட்டத்திலும் குழந்தையை சுடுதண்ணிக்குள் விடாமல், தான் அந்த தண்ணீருக்கு மேலால் நடந்துபோய் குழந்தையை அவ்விடத்திலிருந்து அகற்றினார்அதுதான் தாய்மை,தாய்மைக்கு நிகர் தாய்மைதான்,காலையில் சுந்தரிக்கு யாருமேயில்லை பின்னேரம் அவரைசுற்றி அவ்வளவு உறவுகளும் பதட்டத்தோடும் உதவும் மனப்பான்மையோடும்,வலியோடு தனிமை பயத்தோடும் இருந்த சுந்தரிக்கு இனிய அதிற்சி ,பட்டினியோடு இருந்தவன் முன்னால் அறுசுவை உணவு படைத்ததுபோலிருந்தது எல்லோரதும் வருகை,சுந்தரி இந்நிகழ்வு நடக்கும் முன்பே கண்ணனை தேடினார் அல்லவா,ஒவ்வோருகிழமையும் விடாது வந்த கண்ணன் எங்கேயென்று,இனிமேல் வரமாட்டாரோ என்றும்,ஒருவித தவிப்பு இருந்தது கண்ணன் வந்துவிடமாட்டாரோ என்று,ஒத்துக்கொள்ளத்தான் மனதும் கடந்தகால நிகழ்வும் விடவில்லை,கண்ணன் அடிக்கடி படையெடுத்து வந்தது அவருள் அவர் உணராமலே மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றது,அன்று காலைச்சம்பவமும் சுந்தரியை சற்று யோசிக்கச்செய்யுமென்று நினைக்கின்றேன் ,ஏனெனில் தனிமையில் இருக்கும் ஒருவருக்கு ஒரு துன்பம் வரும்போதுதான்,அந்த இக்கட்டான சூழ்நிலையில் மனம் தானாகவே உறவுகளைத்தேடும்,அன்றய சூழ்நிலை சுந்தரியை ரொம்பவே பயமுறுத்தியிருக்கும்,இனி சுந்தரியின் தனிமைவாழ்க்கையின் மீதான பார்வை மாறுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு,கண்ணன் சுந்தரிக்கு எவ்வளவு இதமாக பார்த்துப் பார்த்து செய்கின்றார்,விமாலா அவர்களுக்குள்ளும் நல்ல மாற்றம்,வேலையில்லாத கண்ணனுக்கு சுந்தரி வேலை கொடுப்பார்களா,எதற்காக கண்ணன் வேலையை விட்டார் என்பதை உணர்வார்களா,இன்றய நாள் ஆரம்பத்தில் வலியோடு தொடங்கி இதமான இனிய அதிற்சியோடு நிறைவடைந்தது.


நன்ற
Aravin22


ஆம் தனிமையில் ஏற்படும் இக்கட்டுகளும் சூழ்நிலைகளும் சில நேரம் மாற்றங்களை கொண்டுவரும் அவன் வேலையைவிட்டது ஒன்றும் பெரிசில்லை சொத்து பத்து உள்ளவன்தான் வேலையில் வெளிநாடும் பார்த்துவிடடான் நகரத்து வாழ்க்கையும் பார்த்துவிடடான் அதன் முரண்பாடுகள் அவனுக்கு புரிந்து இருக்கும் அடிப்படையில் அவனுள் கிராமத்தின் வேர் இருக்கும் அவனும் தனிமையில் அடிப்படையில் நல்லவன் அவன் செய்த குளறுபடிகள் அவனை யோசிக்கவைத்துவிட்ட்ன முன் பிரச்சனை கண்டு ஒடி ஒளிந்தவன் (வயதும் ஒரு காரணம் ) இப்பொது பிரச்சனை கையாள முடியும் என்ற முடிவு எடுத்து இருப்பான் ரத்த பாசம் வேறு இழுக்கிறது தண்ணியில் இறங்கி பார்த்தால் தானே தெரியும் எவ்வ்ளவு ஆழம் என்று பார்த்துவிட்டான் சமாளிக்க முடியும் என்று வந்துவிட்டான்
 
S

semao

Guest
அன்று அவசியமில்லாத அவசரம்..​
அவளை தாக்கியதோ பல சொற்கள்
தன்னை தாக்கியதோ
நெரிஞ்சி முள்ளாய் குற்ற உணர்வு..

இன்று அவசியமான அவசரம்..
இரண்டு மாதமாய் என்னை
தேடிய அவள் விழி..
என் வேலையை மறுத்து
அவளை சேரும் வழி..

ஆர்வமாய் காண வரும் முன்...
ஆதுரமாய் காண வேண்டிய நிலை..
அவளுடைய மன வேதனைக்கு
காரணமானவன் தான்...
அவளது உடல் வேதனையில்
துணை நிற்கிறேன்..

இது எங்களுக்கான நேரமெனில்..
இதயம் இனைய காத்திருக்கிறேன்..

Superb da
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top