E12 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..

உரிமை கோரினான்..
பாசம் வேண்டினான்..
உழைப்பில் பிரம்மித்தான்.
அவளின் தன்மையே
அவளிடம் ஈர்ப்பாய் மாறியது..

இன்னும் உறுதியாய்
காதலை உணரவில்லை..
அப்படியும் பிதற்றவில்லை.

கசந்தாலும் உண்மை
கூற தயங்கவில்லை..
கடினமாய் உழைக்க
எடுத்த முடிவு..
தொழிலுக்கு மட்டுமன்றி.
ஒரு நல்ல குடும்ப
அமைப்பை பெறவோ..

மீண்டும் ஒரு மறுப்பை
தாங்குமா மெல்லினம்..
அழகாய் அதை
தாங்குமா வல்லினம்..

அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்..
நான் அனைவரும் இடையினம்...
இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்று ஆவலுடன் இடையில் நின்று பார்ப்பதால்...

என்ன சொல்ல உன் கவிதை பற்றி....
நீ கொஞ்சம் பரவாயில்லாமல் எழுதேன்..
எனக்கும் ஒரு வரி மட்டும் பாராட்ட வசதியாக இருக்கும்...
இதற்கு எல்லாம் பக்கம் பக்கமாக பாராட்ட வேண்டும்...
 

fathima.ar

Well-Known Member
நான் அனைவரும் இடையினம்...
இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்று ஆவலுடன் இடையில் நின்று பார்ப்பதால்...

என்ன சொல்ல உன் கவிதை பற்றி....
நீ கொஞ்சம் பரவாயில்லாமல் எழுதேன்..
எனக்கும் ஒரு வரி மட்டும் பாராட்ட வசதியாக இருக்கும்...
இதற்கு எல்லாம் பக்கம் பக்கமாக பாராட்ட வேண்டும்...


;)
 

fathima.ar

Well-Known Member
சூப்பர் பாத்திமா
அருமை சகோதரி
அனைத்தும் உண்மை பாத்தி....
சிறப்பு...மிக சிறப்பு...
உன் திறமை அதிகம்..
தினமும் உன்னை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை.....
அதனால் லைக் மட்டும்....
இந்த லிஸ்டில் மீராவும் உண்டு.
புது வரவு லதா சிஸ் கவிதை கமண்ட்..போடுறாங்க...
எனக்கு வார்த்தை கிடைக்கலை...
வாழ்த்துக்கள் மூவருக்கும்..
சூப்பர், டூப்பரா, சொன்னீங்க, பாத்திமா டியர்
Sema da fathi..

Thank u alll..

Thanks hems and darlssss..
 

Manimegalai

Well-Known Member
இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..

உரிமை கோரினான்..
பாசம் வேண்டினான்..
உழைப்பில் பிரமித்தான்.
அவளின் தன்மையே
அவளிடம் ஈர்ப்பாய் மாறியது..
பருவத்தில் பிடிக்காத
பருவும் பிடிக்கிறது..
தலை கோத விரல் துடிக்கிறது..


இன்னும் உறுதியாய்
காதலை உணரவில்லை..
அப்படியும் பிதற்றவில்லை.
கசந்தாலும் உண்மை
கூற தயங்கவில்லை..

கடினமாய் உழைக்க
எடுத்த முடிவு..
தொழிலுக்கு மட்டுமன்றி.
ஒரு நல்ல குடும்ப
அமைப்பை பெறவோ..

மீண்டும் ஒரு மறுப்பை
தாங்குமா மெல்லினம்..
அழகாய் அதை
தாங்குமா வல்லினம்..

அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்..
உன் கவிதையில் ஹீரோ வாழ்கிறார்..:)
எப்பவுமே ஒரு விசயத்தை நாம் பார்க்கும் பார்வை ஒன்று இருக்கு...உன் பார்வை எப்பவுமே பாசிடிவ்..
தவறையே இயல்பாய் கொண்டவன் இல்லை..
உண்மை...மனைவி முகத்துக்கு நேரா அப்ப பிடிக்கலை...இப்ப பிடிச்சிருக்கு....சொல்லிட்டு சில லிஸ்ட் போட்டாறே ரியலி மிகவும் பிடித்தது....உண்மை எப்பவும் அழகு...
சூப்பர் பாத்தி.
முழு பதிவும் வந்துவிட்டது கவி நடையில்..
 

Sundaramuma

Well-Known Member
:)

அழகான அப்டேட்மச்சி..... :);):D

தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......
அழகு கவிதை லதா:):):)
 

Sundaramuma

Well-Known Member
அன்று
பெண் வண்ணமில்லை
அவள் மேல் எண்ணமில்லை
சென்றாய்


இன்று
கொண்டாய் எண்ணம்
உடன்சேரும் வண்ணம்
கூடிவாழும் திண்ணம்
வந்தாய் இங்கு


அவசரத்தால்
வந்த எண்ணமதை
ஏற்குமோ பெண்ணவளின் மனது
பெண்ணவளின் காயமது
படு ஆழம் அது
ஆறும் முன் அதை
ஆற்றும் முன்
கொண்ட எண்ணத்தை
செயல் படுத்தும் கண்ணனே
அவசர மன்னனே
இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க
இது நூடுல்ஸ் அல்ல
அவள் என்பது யாதெனில்
நீ வைத்திருக்கும் பொம்மையல்ல
பெண்மை அவள்
கனிய காத்திரு
Awesome...Meera :):):)
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் சிஸ்,:)
அழகான பதிவு...
சூப்பரா இருந்தது...
கண்ணன் உண்மை பேசுவது அழகா இருந்தது...
சந்தரியை கவனித்து கொள்வதும் அருமை...
மரு பிடிச்சிருக்கா இப்ப;) சுந்தரி இப்ப பிடிக்கும்
என்று கண்ணன் சொன்ன காரணங்கள் உண்மையாக இருந்தது...
கணவனா ஏத்துக்க சில காலங்கள் பிடிக்கலாம்.

ஆனால் சுந்தரிக்கு பிடிச்சு இருக்கு....எங்க மறுபடியும் போய்டுவாங்களோ என்ற பயம்
ஏற்றுக்கொள்ள முடியலை...
சூப்பர் பதிவு
நன்றி..
well said...Mani :):):)
 

aravin22

Well-Known Member
Hi mam

சுந்தரியின் நினைப்பில் தப்பேதும் இல்லை ,கல்யாண வாழ்வு தொடங்கி வெறும் 5 நாட்களில் காரணங்கள் சிலதெரிந்தும் சிலதெரியாமலும் முடிவுக்கு வந்தது ,அதேநேரம் தந்தையையும் இழந்து ,மகவை வயிற்றினில் சுமந்து கொண்டிருந்த மிகச்சிறிய பெண் வாழ்க்கையின் இன்ப துன்பத்தையே பகுத்தறிய முடியாத ஒரு இளம்குருத்து எதுவுமே அறியும் முன்னர் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதின் வலியின் சுவடுதான் இந்த மறுப்பு,வலி நிறைந்த போர்க்களமன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்பெண் ,உண்மையிலே கண்ணணனின் மனமாற்றம் சுந்தரிக்கு புரிந்துதான் இருக்கின்றது,ஆனால் இவ்வளவுக்கும் காரணமான கண்ணனை நம்புவது கடினம்தானே,மனக்காயம் மிக ஆழமாகவும் புரையோடிப்போயிருக்கின்றது,ஆறுவதற்கு அவகாசமும் அதை ஆற்றுவதற்கு கண்ணனும் ,கண்ணனுக்கு பொறுமையும் வேண்டும்,ஏனெனில் நோயும் மருந்தும் கண்ணனேதான்,மனசோ கண்ணனின் அருகாமையை விரும்புகின்றது,புத்தியோ கடந்தகால சுவடுகளை ஞாபகப்படுத்தி புத்தியோடு நட என்கின்றது,மனசுக்கும் புத்திக்கும் போராட்டம் நடக்கின்றது,என்னசெய்ய பேதைப்பெண்ணுக்கு இன்னும் போராட்டம் முடியவில்லைப்போல.

நன்றி
Aravin22
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top