E12 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
hi friend MM
ஹா ஹா கண்ணன் அந்தர்பலடி அடிக்கிறான் உண்மையை சொல்றேன்னு அவ் மனசையும் பல்டி அடிக்க வைக்கிறான் வேலையை செய்றேன்னு விவாதத்திற்கு இழுக்காறான் ஐடியாவா அவளை மடக்க


சுந்தரி உள்ளே பொங்கிடும் உணர்வை எவ்வளவு நேரம் தாக்கு பிடிப்பாளோ பிடிவாதம் பிடிக்க நினைக்கிறாளாஅல்லது ஈகோவா இருந்தும் மனது ஏங்குகிறது அவனுக்கான தேடல் ஆரம்பம்

சிந்தா டைலாக் அருமை கிராமத்துக்காரி அல்லவா
நானும் சுந்தரியின் மன உணர்வுகள் வெளிவர தான் காத்து இருக்கிறேன்.....
ஒரே நாளில் ரொம்ப எதிர் பார்க்கிறான் கண்ணன்.....
 

Sundaramuma

Well-Known Member
ஒரு கதையின் ஜனனம்
சில நாட்களே

அது நூல்களில் அச்சேறுவது
சில மணி நேரங்களே..

ரணங்களையும் வேதனைகளையும்
உணர்வு குவியலாய் படைக்கிறாய்..

பெண்மை பேசுகிறாயோ
இல்லை உண்மை பேசுகிறாயோ..

தவறிபோவதில்லை...
தவறை ஒப்புகொள்ள மறுப்பதில்லை.

அன்பையும் பண்பையுமே
நிலையானதாக சொல்கிறாய்...

என்ன விந்தை படிக்கும் நேரம் குறைவு..
அது விட்டு செல்லும் தாக்கம் நிறைவு..

Small dedication to u malli dear..what I quoted is very less..

Awesome...Fathima :):):)
 

Sundaramuma

Well-Known Member
இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..


உரிமை கோரினான்..
பாசம் வேண்டினான்..
உழைப்பில் பிரமித்தான்.
அவளின் தன்மையே
அவளிடம் ஈர்ப்பாய் மாறியது..
பருவத்தில் பிடிக்காத
பருவும் பிடிக்கிறது..
தலை கோத விரல் துடிக்கிறது..


இன்னும் உறுதியாய்
காதலை உணரவில்லை..
அப்படியும் பிதற்றவில்லை.
கசந்தாலும் உண்மை
கூற தயங்கவில்லை..

கடினமாய் உழைக்க
எடுத்த முடிவு..
தொழிலுக்கு மட்டுமன்றி.
ஒரு நல்ல குடும்ப
அமைப்பை பெறவோ..

மீண்டும் ஒரு மறுப்பை
தாங்குமா மெல்லினம்..
அழகாய் அதை
தாங்குமா வல்லினம்..


அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்..

Super....super......:):):)
 

Sundaramuma

Well-Known Member
நான் அனைவரும் இடையினம்...
இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்று ஆவலுடன் இடையில் நின்று பார்ப்பதால்...


என்ன சொல்ல உன் கவிதை பற்றி....
நீ கொஞ்சம் பரவாயில்லாமல் எழுதேன்..
எனக்கும் ஒரு வரி மட்டும் பாராட்ட வசதியாக இருக்கும்...
இதற்கு எல்லாம் பக்கம் பக்கமாக பாராட்ட வேண்டும்...

arumai ... Malar :):):)
 

Sundaramuma

Well-Known Member
Hi mam

சுந்தரியின் நினைப்பில் தப்பேதும் இல்லை ,கல்யாண வாழ்வு தொடங்கி வெறும் 5 நாட்களில் காரணங்கள் சிலதெரிந்தும் சிலதெரியாமலும் முடிவுக்கு வந்தது ,அதேநேரம் தந்தையையும் இழந்து ,மகவை வயிற்றினில் சுமந்து கொண்டிருந்த மிகச்சிறிய பெண் வாழ்க்கையின் இன்ப துன்பத்தையே பகுத்தறிய முடியாத ஒரு இளம்குருத்து எதுவுமே அறியும் முன்னர் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதின் வலியின் சுவடுதான் இந்த மறுப்பு,வலி நிறைந்த போர்க்களமன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்பெண் ,உண்மையிலே கண்ணணனின் மனமாற்றம் சுந்தரிக்கு புரிந்துதான் இருக்கின்றது,ஆனால் இவ்வளவுக்கும் காரணமான கண்ணனை நம்புவது கடினம்தானே,மனக்காயம் மிக ஆழமாகவும் புரையோடிப்போயிருக்கின்றது,ஆறுவதற்கு அவகாசமும் அதை ஆற்றுவதற்கு கண்ணனும் ,கண்ணனுக்கு பொறுமையும் வேண்டும்,ஏனெனில் நோயும் மருந்தும் கண்ணனேதான்,மனசோ கண்ணனின் அருகாமையை விரும்புகின்றது,புத்தியோ கடந்தகால சுவடுகளை ஞாபகப்படுத்தி புத்தியோடு நட என்கின்றது,மனசுக்கும் புத்திக்கும் போராட்டம் நடக்கின்றது,என்னசெய்ய பேதைப்பெண்ணுக்கு இன்னும் போராட்டம் முடியவில்லைப்போல.

நன்றி
Aravin22
முற்றிலும் சரி......Aravin22:):):)
 

Sundaramuma

Well-Known Member
எப்பவும் முதலில் மல்லிகாக்கு என்னோட கருத்துக்கள் தெரிவித்து
விட்டு தான் எல்லாரோட கமெண்டும் படிப்பேன்..... இன்னைக்கு எல்லாரோட கமெண்டும்
முதலில் படிச்சுட்டதால எனக்கு தனியா போட ஒன்னும் இல்லை .....
அபி , அம்மாவை தேடவே இல்லை .......தாத்தா, பாட்டி, அத்தைகள் கூட ஒட்டி கிட்டான் போல இருக்கு ......
சுந்தரி, விமலா அம்மாவை தவிர்க்கிற மாதிரி இருக்கு..... முழு தவறும் அவரிடம் இல்லை ....

சந்திரன் தன்னோட மனைவி , மகனுடன் பேசி முடிவெடுக்காமல் விட்டது தான் எல்லவற்றுக்கும் காரணம்....
விமலா அந்த ஐந்து நாட்கள் சுந்தரியை வேலை காரியா நடத்தினார்.....இப்போ மகன் சுந்தரியிடம் வேலைக்காரனாக ......
well, what goes around comes around.....
அழகு பதிவு......
Thank you very much.Mallika :):):)
 

Adhirith

Well-Known Member
Here comes the 12th episode of Nee Enbathu Yaathenil

EPISODE 12

:)

Hi Malli.....
Good Morning.....

உறவுகளின் வரவு ஓரே நாளில்....
அதுவும் கண்ணனை முன் நிறுத்தி
அவளுக்காகா இல்லை என்னும் பொழுது
படிக்கின்ற எனக்கே பதட்டமாக இருந்தது......:p
Poor Sundari....
அவளின் பதட்டம் புரிந்தது...

உள்ளது உள்ளபடியே உரைக்கும் அவனின் தன்னிலை விளக்கம்...
ஆனால் அதை ஏற்க மறுக்கும் அவள்.....
அவனோடு ஆன வாழ்க்கையையும் மறுக்கிறாள்....ஸ்திரமாக
போன எபியில் என் கேள்விக்கான பதில்.......இந்த பதிவில்....

ஆனால் முடியுமா,அவளால்.....????
மகனை கொடுக்க மாட்டேன் என்ற வைராக்கியம் தளர்ந்தது....
வீட்டினுள் விட மாட்டேன் என்ற உறுதி இருந்த போதும்
அவளின் இயலாமையால் அவன் வரும்படி ஆகியது...
இப்பொழுது அவனுடன் கூட சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை.....

மல்லி,உங்களின் கேள்விகளுக்கான பதில் எங்கே????
அந்த பதிலில் அவளின் விருப்பமின்மை மாறுமா?????
Me hope so....

Have a happpppppy Sunday....:):cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top