பிரியா பிரகாஷ் - மகேஸ்வரி

mallika

Administrator
#1
மகேஸ்வரி அவங்க இயற் பெயர், பிரியா பிரகாஷ் ன்றது அவங்க பசங்க பெயர் அதை சேர்த்து வெச்சு புனை பெயரா வெச்சு கதை எழுதினாங்க. இங்க நம்ம சைட் ல கூட மகேஸ்வரி ரவி ன்னு இருப்பாங்க

நீலா மணி மேம் ஒரு போஸ்ட் போட்டாங்க திங்கள் இரவு fb ல லைக் பிரியா பிரகாஷ் ரொம்ப முடியாம icu ல இருக்காங்க ஹெல்ப் பண்ண முடியுமா ன்னு ஒரு போஸ்ட் இருக்கு , பணம் கேட்கலை , நல்ல ட்ரீட்மென்ட்குடுக்கன்னு டாக்டர்ஸ் க்கு கேட்கறாங்கன்னு , சிவகங்கை ஹாஸ்பிடல் ன்னு
நான் அப்போ கூட அது உண்மையா இருக்காதுன்னு பிரியா வை உடனே கூப்பிட்டேன், அவங்க phone எடுத்தாங்க என்கிட்டே பேசினாங்க


ஆமாம் பா oxygen கம்மியா இருக்குன்னு அட்மிட் பண்ணினாங்க இப்போ நல்லா இருக்கேன்னு அவங்கே பேசினாங்க, நான் கூட யார் இருக்கா அங்கே ஹெல்ப் பன்னன்னு கேட்டேன் அம்மா இருக்காங்க இந்த ஊர்ல அதான் இங்கே அட்மிட் ஆனேன் சொன்னாங்க

பயப்படாதீங்க சரியாகிடும் சொல்லி தான் வெச்சேன்
இன்னைக்கு இந்த செய்தி ரொம்ப ஷாக்கிங்
நிஜமா பொய்யான்னு கூட தெரியலை , தப்பா எதுவும் இருக்கக் கூடாது அவங்க வீட்டுகாரர் நம்பர் வாங்கி பேசினேன்
அந்த அண்ணாவால் பேசவே முடியலை , இந்த செய்தி நிஜம் , மனசு தாங்கவே இல்லை


யாருக்கு என்ன எப்போ இந்த வாழ்க்கை வெச்சிருக்குன்னு தெரியலை , பத்திரமா இருங்க , சின்ன பிரச்சனைன்னாலும் உடனே பாருங்க , கவனமில்லாம இருக்காதீங்க ,
கடவுள் தான் நம்மை காக்கணும், ஏன் இப்படி செய்தார்னு தெரியலை...


பிரியா பிரகாஷ்.jpeg
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes