E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா.

Movie:
Aval varuvalaa
 

sindu

Well-Known Member
Good Morning friends:)
நடந்த கலவரத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியது ஒன்று தான். மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் இப்படியோர் ஆக்ரோஷத்தை வெளிடுத்தும் வர்ஷினி பிரச்சினை நடந்த காலகட்டத்தில் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பாள்?:eek: நினைத்து பார்க்க இயலவில்லை.

(கற்பனை செய்ய முயற்சித்தால் என் நியூரான், நெப்ரான் ரெண்டுமே செயலிழக்குது. அதாங்க Brain & Kidney)
உடன் இருந்திருந்தால், நிச்சயம் ஈஸ்வரை கொன்றிருப்பாள் என்றே எனக்கு தோன்றுகிறது.
கொலையும் செய்வாள் பத்தினி
அதனால் தான் உள்ளூரில் இருந்து கொண்டே விடுதி வாசம். அதன் பிறகும் அயல்நாட்டில் வனவாசம். ஈஸ்வரிடம் மணவிலக்கு கோருவது கூட அவனது நன்மையை உத்தேசித்து தானோ?

தன்னை விரும்பி (கட்டாயப்படுத்தி) மணந்தவன் தனக்கு முன்பே ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி இருக்கிறான் என்பதே இங்கு வர்ஷினியின் பிரதான குற்றச்சாட்டு. ஏன் இந்த விஷயத்தில் இத்தனை கோபம். எதனால் இப்படியோர் வலி. அவனால் தான் அனுபவித்த அத்தனை கஷ்டங்களிலும் இந்த விஷயம் முதலிடம் பிடித்தது எதனால்?? வர்ஷினியின் கடந்த கால வாழ்க்கை (அம்மா) சம்பந்தப்பட்ட நிகழ்வின் தாக்கமாக இருக்குமோ?

பார்த்த உடன் ஐஸ்வர்யாவின் கண்ணுக்கு கூட தென்படும் வர்ஷுவின் காதல் சம்மந்தப்பட்ட இருவர் கண்ணிலும் படாமல் கண்ணாமூச்சியாடுவது ஏன்?

ஈஸ்வரின் முன்னாள் காதலை அறிந்த வர்ஷிக்கு முன்னாள் காதலி யார் என்பது தெரியாதோ?? அவன் முன்னாள் காதலியாக எண்ணி இருந்தவள் இந்நாள் வரை திருமணமாகாமல் இருக்கிறாள் என தெரிந்தால் வர்ஷியின் நிலை??

ஐஸ்வர்யா இவள் எப்படிபட்டவள்? ஆனானப்பட்ட அஸ்வினே நல்லவனாகிட்டான். அவனோட தங்கை எப்படி...? ஈஸ்வர் தன் திருமணத்தன்று ஐஸ்வர்யாவிடம் பேசிய வார்த்தைகள்...

பெண் பாவம் பொல்லாதது. ஒரு பெண்ணின் கண்ணீர் ஏழுதலைமுறைக்கும் தொடரும் என்பார்கள். ஈஸ்வரோ இரு பெண்களின் கண்ணீருக்கு காரணமானவனாய் இருந்துவிட்டான்.

உப்பை திண்றவன் தண்ணீர் குடிக்கிறான்.

சண்டையில பிசாசுன்னு (ரத்தக்காட்டேரி) திட்டியதை அவன் ரத்தத்தை சுவைத்து நிருபித்துவிட்டாயே மை டியர் பால்கோவா.

என்னடா காதல் இது எவன் சொன்ன...
வர்ஷினி இந்த அவதாரம் பயமா தான் இருக்கு
இவ்வ்ளோ கோபம், ஆக்ரோஷம் .... அவள் நினைப்பது போல் அவளை கொண்டு psyco- stage kondu poi vidum
 

sindu

Well-Known Member
என்ன சொல்ல ... மல்லிகா ...
அறிவார்த்த கருத்துக்கள் , ஆழமான கருத்துக்கள், உணர்வுபூர்வமான கருத்துக்கள் , நகைசுவை கருத்துக்கள் , நக்கல் கருத்துக்கள் , சுய முயற்சி கவிதைகள் , சந்தர்ப்ப சினிமா பாடல்கள் என்று போட்டு ஏற்கனவே அரை பயித்தியமாக இங்கு சுற்றி கொண்டு இருந்தவர்களை ஒரே பதிவில் முழுபயித்திமாக்கிய பெருமை உங்களை தான் சாரும் .....
Hats off ...


1. எபிசொட் ஹயிலைட் ஒன்று .....வர்ஷினி.....ஒரு எரிமலை...எண்ணற்ற மனக்குமுறல்களை தன்னுள் உள்ளடக்கி இருக்கும் ஒரு எரிமலை .....சிறுவயதில் இருந்து தன எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த சரியான உறவுகள் , சந்தர்ப்பங்கள் என்று அமையாமல் தன்னுள் அடக்கியே பழக்க பட்டவள்......அவளுடைய தனிமை அவளுக்கு அவளே உருவாக்கி கொண்ட ஒரு பாதுகாப்பு கவசம்......ஒரு மாறுபட்ட பெண்ணாக , வித்தியாசமான பெண்ணாக வளர்ந்து விட்டாள்..... அவளுடைய மனா உளைச்சல்களுக்கு எல்லாம் ஈஸ்வர் மட்டும் கரணம் இல்லை ......அனால் அவனும் ஒரு பெரும் காரணம் அதற்கு ......அவனால் தான் அவன் கொடுத்த அனுபவத்தால் தான் அவளின் எண்ணங்கள் தான் சரியா தவற என்ற மனஅழுத்தத்தை பெரும் அளவில் அதிகமாக்கி போதையை நாடும் அளவிற்கு அவளை தள்ளி விட்டது...... இருந்தும் அவன் மீது உள்ள பிடிப்பு, அவனில்லாமல் எதுவும் முடியாது என்ற அவளின் தவிப்பு மற்றும் இஇயலாமை பெரும்
கோபமாக வெளிய்ப்படுகிறது ...... இன்னும் வெளி வர வேண்டியவை நிறைய இருக்கிறது என நினைக்கிறேன் .....


2.எபிசொட் ஹயிலைட் ரெண்டு ........ஒரு முழுமையான காதல் கணவனாக ஈஸ்வர் இந்த பதிவில் வெளி வந்து இருக்கிறான்......தன் கதை மனைவியின் மனா வலிகளை தன்னுடையாகி கொள்ள முடியாமல் அவள் கொடுக்கும் உடல் வலிகளை சகித்து , அவளை பாது காக்க என்னும் அவன் தீவிரம், உறுதி......அவளை புரிந்து கொள்ள வேண்டும், முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவனுடைய துடிப்பு, பரிதவிப்பு, ஏக்கம் என்ற எல்லா உணர்வுகளும் உங்கள் கைவண்ணத்தில் மிக அற்புதமாக வெளிவந்து இருக்கிறது ......
அவனுடைய கொஞ்சல், கெஞ்சல் , கோபம் மட்டுறும் அவன் யாசிப்பு ........இன்னும் சொல்லி கொன்டே போகலாம்....ஒரு கை தேர்ந்த சிற்பி செதுக்குவது போல நாயகன் நாயகி கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறீர்கள் .....again hats off


3.எபிசொட் ஹயிலைட் மூன்று .....ஐஸ்வர்யா.......பார்த்தவுடன் வர்ஷினி காதலை உணர்ந்து கொள்ளவது ......அவள் சிந்தைகளும் வெகு யதார்த்தமாக ஏமாற்ற பட்ட ஒரு பெண்..... அவள் எண்ண போக்குகளை அப்படியே கொடுத்துகிளீர்கள் .......ஈஸ்வற்கு வர்ஷினியின் மேல் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை, அவனுக்கு வர்ஷினி எவ்வளவு முக்கியமானவள் என்பதை அஸ்வின் நேரில் பார்த்து தெரிந்து கொண்டான்( ரஞ்சனி காணாமல் போன எபிசொட் ....பத்து , வர்ஷினி , ஈஸ்வர் அனைவரும் அஷ்வினை தேடி செல்லும் எபிசொட்) .
இப்போது ஐஸ்வர்யா, வர்ஷினி காதலை தெரிந்து கொண்டு உள்ளாள்.....இவ்வாறு நீங்கள் கொண்டு வந்தது எனக்கு மிகவும் பிடித்தது ......நிறைவாகவும் உள்ளது.....நான் முன்பே இருவரின் காதலையும் பிறர் உணர்வதாக வரும் காட்சி அமைப்பு கேட்டு இருந்தேன் .....
கொடுத்து விட்டீர்கள் ..


அடக்கி வைக்க பட்ட எரிமலை வெடித்து சிதறும் (ஆரம்ப சிதறல் ) அந்த காட்சி அழகாக ,
உணர்ச்சி பூர்வமாக , உணர்வு மயமானதாக வந்து உள்ளது .....
இதோடு நிறுத்தி கொள்கிறேன் ......ரொம்ப பெரிதாக போய் விட்டது கமெண்ட்......
இருந்தும் மனதின் தாக்கத்தை முழுவதும் என்னுடைய எழுத்தில் கொண்டு வர முடியவில்லை....
மல்லிகா ...நன்றி ...மிக்க நன்றி :):):)
well said.
 

Adhirith

Well-Known Member
வர்ஷினி இந்த அவதாரம் பயமா தான் இருக்கு
இவ்வ்ளோ கோபம், ஆக்ரோஷம் .... அவள் நினைப்பது போல் அவளை கொண்டு psyco- stage kondu poi vidum

Psycho எல்லாம் இல்லைப்பா...
அது ஒரு, extreme stage ல ,அவளின் அடைக்கப்பட்ட உணர்வுகளின்
வெளிப்பாடு...

எபி 3லே சொல்லியிருப்பார்கள்
அவளின் கோபத்தில் வெளிப்படும்
வார்த்தைகளுக்கும்,செயல்களும்
அவளின் கட்டுபாட்டில் இருக்காது என்று...

She is not a chocolate heroine....
definitely not a psycho...
அவளே அப்படி சொல்லிக்கொண்டாலும்...
 

Adhirith

Well-Known Member
ஐஸ் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமே
விரட்டி விரட்டி காதல் செய்து
காதல் சொல்லி
முடிவில் அது காதலே இல்லை என்று அவன் உணர்வதற்குள் அவள் மனதில் எத்தனை கற்பனைகளோ

இப்போ ஈஸ்வர் இருக்கும் நிலை அறிந்தால், ஒரு மருத்துவராக, ஒரு பெண்ணாக நிச்சயம் அவனுக்காக வருந்துவாள்
அவனின் நிலை அவளுக்கு அவன் மேல் உள்ள கோபம் போக்க வழி வகுக்குமா ??? அவனுக்காக பரிதாபபடுவாளா இல்லை அவர்கள் வாழ்வை சீர் செய்வாளா???

இப்போ வருவது ஈஸ்வர் - வார்ஸ் temporary trucenu Malli solli irrukanaga....
அதனால் eswar-வார்ஸ் உறவு முற்றிலும் மேம்பட ஐஸ் முழு காரணமாக இருக்க மாட்டாள் ... ஒரு வேலை முதல் படி ....

ஐஸ் - ஈஸ்வர் பற்றி வர்ஷினிக்கு சொன்னது யார் ??? இன்னும் இந்த சஸ்பென்ஸ் எப்ப உடையுமோ ?

நிச்சயமாக ,அவர்கள் இருவருக்கும் இடையில்
ஒரு பிரச்சனையாக அவளே வரமாட்டாள்...
That I m sure...
because we all know Malli,very well
 

ThangaMalar

Well-Known Member
இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே

தீயின் மனமும் நீரின் குணமும்
எடுத்துச் செய்தவள் நீ நீயா
தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா
நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா

வீட்டில் உனக்கு உணவில்லையா
இருவிழி உரசிட ரகசியம் பேசிட
இடிமழை மின்னல் ஆரம்பம்
பாதம் கேசம் நாபிக்கமலம்
பற்றிக்கொண்டதும் பேரின்பம்
தகதகவென எரிவது தீயா
சுடச்சுடவெனத் தொடுவது நீயா
தொடுதொடுவெனச் சொல்லடி மாயா
கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா

இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட
இன்னும் என்ன செய்வாயோ
செப்படிவித்தை செய்யும் பெண்ணே
சீக்கிரம் என்னைக் கொல்வாயோ
எந்தக் கயிறு உந்தன் நினைவை
இறுக்கிப் பிடித்து கட்டுமடி
என்னை எரித்தால் எலும்புக்கூடும்
உன்பேர் சொல்லி அடங்குமடி
படபடவென படர்வதும் நீயா
விடுவிடுவென உதிர்வதும்
நீயா தடதடவென அதிரவைப்பாயா
தனிமையிலே சிதறவைப்பாயா
 

Lalithaganesan

Well-Known Member
ஹாய் மக்களே,
எனக்கு ஒரு நாவலோட பெயர் அப்பறம் ஆதர் யாருன்னு தெரியனும் ப்ளீஸ் ஹெல்ப்.
ஹீரோயின் ஒரு ஆடிடர் கமிங் ப்ரம் ஹைதராபாத் டு கேரளா டு வொர்க் இன் ஹீரோஸ் கன்சர்ன் அன்ட் ஹி லவ்ஸ் ஹெர்.அப்பதான் ப்ளாஷ்பேக் தட் ஹீரோக்கு பைத்தியம் பிடிச்சிருக்கும் போது ஹீரோயினுக்கு அவன் தாலி கட்டியிருப்பான் அதனால அவளோட மாமியார் ஊர விட்டு அனுப்பிடராங்க.ஹீரோக்கு பழசு மறந்துடுது சோ ஹீ லவ் ஹெர் எகய்ன். இப்போ திரும்ப ஊர விட்டு மும்பை போரவள ஹீரோ கண்டு பிடிச்சு அம்மாவ எதிர்த்து கல்யாணம் பண்றார்.இதுக்கு இடையில விஷ்ணு கேரக்டருும் வருது. ஹீரோயின் ஒரு அனாதை.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்களே,
எனக்கு ஒரு நாவலோட பெயர் அப்பறம் ஆதர் யாருன்னு தெரியனும் ப்ளீஸ் ஹெல்ப்.
ஹீரோயின் ஒரு ஆடிடர் கமிங் ப்ரம் ஹைதராபாத் டு கேரளா டு வொர்க் இன் ஹீரோஸ் கன்சர்ன் அன்ட் ஹி லவ்ஸ் ஹெர்.அப்பதான் ப்ளாஷ்பேக் தட் ஹீரோக்கு பைத்தியம் பிடிச்சிருக்கும் போது ஹீரோயினுக்கு அவன் தாலி கட்டியிருப்பான் அதனால அவளோட மாமியார் ஊர விட்டு அனுப்பிடராங்க.ஹீரோக்கு பழசு மறந்துடுது சோ ஹீ லவ் ஹெர் எகய்ன். இப்போ திரும்ப ஊர விட்டு மும்பை போரவள ஹீரோ கண்டு பிடிச்சு அம்மாவ எதிர்த்து கல்யாணம் பண்றார்.இதுக்கு இடையில விஷ்ணு கேரக்டருும் வருது. ஹீரோயின் ஒரு அனாதை.
செண்பா கதை உன்னைக் கண்டு உயிர்த்தேன்
:)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top