Vijayalakshmi Jagan's Neerum Neruppum 48

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நீரும் நெருப்பும் _ விஜயலட்சுமி ஜெகன் _

சகோதரி சில நாட்களுக்கு முன் நீங்கள் கேட்ட கேள்வி “உடல் வலியை போக்க வலி நிவாரண மாத்திரை இருப்பது போல் மனவலியை போக்க ஏதாவது இருக்கா?”. அதற்கு என் பதில், “இந்த நாவலை நீங்கள் எழுதி இருக்காவிடின், இந்த நாவலை படியுங்கள் சகோதரி’ என்று தான் இருக்கும். அப்படி ஒரு இனிமை அனுபவம். மனதுக்கு பிடித்த செயலே மனவலியை போக்கவல்லது. இது போன்ற நாவல்களை படிப்பது மனதுக்கு பிடித்த செயல்கள் தானே சகோதரி. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நாவல், அந்தந்த சமயம் முக்கியமாக இருக்கும். என்னை பொருத்தவரை இந்த நாவல் உங்களின் மிக குறிப்பிடதகுந்த நாவல். அருமை சகோதரி.

இந்த காதல் நாவலில், எல்லாமே காதல் தான். சுயநலக்காதல் {சுபாஷ் – நிவேதா}, தவறிய காதல் {கெளதம் – கீதா}, ஒருதலைகாதல் {விக்ரம்}, முதிந்த காதல் (கிருஷ்ணமூர்த்தி – சுலேச்சனா}, கணவன் மேல் உள்ள காதலால் கடமை முடித்த காதல் {தாட்சாயிணி – ராஜேந்திரன்}, நட்பு காதல் {சுதா-பிரகாஷ்} என்று பல இருந்தாலும் அந்த எதிர் குணக்காதல் குருமூர்த்தி – இந்திரா {ஹீரோ – ஹீரோயின்] அருமை சகோதரி. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அந்த ஹைகூ காதல் Dr பாஸ்கர் – மாலதி அருமை சகோதரி. இந்த சின்ன காதலில் எவ்வளவு அருமை செய்தி. உருவ ஒற்றுமையை விட உள்ள ஒற்றுமையே சிறந்தது என்ற அந்த செய்தி அருமை சகோதரி.
நாவலில் இடம் பெறும் அனைத்து பாத்திரங்களில் வடிவமைப்பு கூட அருமை சகோதரி. அந்த ஜொள்ளர் கூட்டம் முதல் (சுமதி, பாத்திமா,மேரி,காயத்ரி}, அந்த நட்பு கூட்டம் {சுதா,பிரகாஷ்,வினோத்}, பாஸ்கரின் வேலைக்காரம்மா, சும்மா என்றே வரும் ராஜேஷ் முதல் அனைவரையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். அருமை சகோதரி.
திருமணத்தில் தத்தளிப்பில் இந்திராவுடன் ஆரம்பிக்கும் நாவல், அவளின் மனநிறைவுடன் முடிவது அருமை சகோ. நாவலில் பிடித்த பகுதிகள் என்று கேட்டால் முழு நாவலையும் சொல்லிவிடுவேன். வந்த அனைத்து பதிவும் எதாவது ஒரு உணர்வை கோபம், மகிழ்ச்சி, ஆச்சரியம், எதிர்பார்ப்பு என்று எகிற வைத்துக்கொண்டு இருந்தது சகோதரி. தனியாக என்னால் பிடித்த இடம் என்று சொல்வது கடினம். மொத்த நாவல் பகுதியும் பிடித்தது. இதில் இன்னொரு கொடுமை கடைசி சில பதிவுகள் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டியது.
நாவலில் அங்கங்கே வந்த வர்ணனைகள் ஆகட்டும், குபீர் சிரிப்பு கொள்ளும் உரையாடல் ஆகட்டும், சில கருத்துகள் ஆகட்டும் அருமை சகோதரி. எதையும் தனியாக சொல்லி சிறப்படைய வேண்டாம். நாவல் ஓட்டத்தில் சுகமாக பயணிக்கும் போது கிடைக்க பெறும் அனுபவம் அது.

இந்த நாவலை இரண்டாம் பாகம் தரலாம் என்பது என் ஆசை. எதோ கேட்டு கொண்டு இருந்த ஒரு சுகஅனுபவம், திடீர் என்று நின்றாது போல் ஒரு உணர்வு சகோதரி. நல்ல நாவலுக்கு வாழ்த்துகள் சகோதரி.
 
Ishwarya

Well-Known Member
Wow super story.. At a stretch padichu mudichen.. Guru intha namekey thani power.. Avanoda alumai, love panrapa vara change ellam super .. Subash mathri sila per namakuda life la neraya per aa pathu irukom...
 
Vijaya RS

Well-Known Member
Superb story. Guru and Indra are awesome and so are their mothers. Please consider writing part 2 to this story. Would like to know what happens in Guru and Indra's lives. Thanks and Regards.
 
Suvitha

Well-Known Member
நீரும் நெருப்பும் _ விஜயலட்சுமி ஜெகன் _

சகோதரி சில நாட்களுக்கு முன் நீங்கள் கேட்ட கேள்வி “உடல் வலியை போக்க வலி நிவாரண மாத்திரை இருப்பது போல் மனவலியை போக்க ஏதாவது இருக்கா?”. அதற்கு என் பதில், “இந்த நாவலை நீங்கள் எழுதி இருக்காவிடின், இந்த நாவலை படியுங்கள் சகோதரி’ என்று தான் இருக்கும். அப்படி ஒரு இனிமை அனுபவம். மனதுக்கு பிடித்த செயலே மனவலியை போக்கவல்லது. இது போன்ற நாவல்களை படிப்பது மனதுக்கு பிடித்த செயல்கள் தானே சகோதரி. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நாவல், அந்தந்த சமயம் முக்கியமாக இருக்கும். என்னை பொருத்தவரை இந்த நாவல் உங்களின் மிக குறிப்பிடதகுந்த நாவல். அருமை சகோதரி.

இந்த காதல் நாவலில், எல்லாமே காதல் தான். சுயநலக்காதல் {சுபாஷ் – நிவேதா}, தவறிய காதல் {கெளதம் – கீதா}, ஒருதலைகாதல் {விக்ரம்}, முதிந்த காதல் (கிருஷ்ணமூர்த்தி – சுலேச்சனா}, கணவன் மேல் உள்ள காதலால் கடமை முடித்த காதல் {தாட்சாயிணி – ராஜேந்திரன்}, நட்பு காதல் {சுதா-பிரகாஷ்} என்று பல இருந்தாலும் அந்த எதிர் குணக்காதல் குருமூர்த்தி – இந்திரா {ஹீரோ – ஹீரோயின்] அருமை சகோதரி. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அந்த ஹைகூ காதல் Dr பாஸ்கர் – மாலதி அருமை சகோதரி. இந்த சின்ன காதலில் எவ்வளவு அருமை செய்தி. உருவ ஒற்றுமையை விட உள்ள ஒற்றுமையே சிறந்தது என்ற அந்த செய்தி அருமை சகோதரி.
நாவலில் இடம் பெறும் அனைத்து பாத்திரங்களில் வடிவமைப்பு கூட அருமை சகோதரி. அந்த ஜொள்ளர் கூட்டம் முதல் (சுமதி, பாத்திமா,மேரி,காயத்ரி}, அந்த நட்பு கூட்டம் {சுதா,பிரகாஷ்,வினோத்}, பாஸ்கரின் வேலைக்காரம்மா, சும்மா என்றே வரும் ராஜேஷ் முதல் அனைவரையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். அருமை சகோதரி.
திருமணத்தில் தத்தளிப்பில் இந்திராவுடன் ஆரம்பிக்கும் நாவல், அவளின் மனநிறைவுடன் முடிவது அருமை சகோ. நாவலில் பிடித்த பகுதிகள் என்று கேட்டால் முழு நாவலையும் சொல்லிவிடுவேன். வந்த அனைத்து பதிவும் எதாவது ஒரு உணர்வை கோபம், மகிழ்ச்சி, ஆச்சரியம், எதிர்பார்ப்பு என்று எகிற வைத்துக்கொண்டு இருந்தது சகோதரி. தனியாக என்னால் பிடித்த இடம் என்று சொல்வது கடினம். மொத்த நாவல் பகுதியும் பிடித்தது. இதில் இன்னொரு கொடுமை கடைசி சில பதிவுகள் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டியது.
நாவலில் அங்கங்கே வந்த வர்ணனைகள் ஆகட்டும், குபீர் சிரிப்பு கொள்ளும் உரையாடல் ஆகட்டும், சில கருத்துகள் ஆகட்டும் அருமை சகோதரி. எதையும் தனியாக சொல்லி சிறப்படைய வேண்டாம். நாவல் ஓட்டத்தில் சுகமாக பயணிக்கும் போது கிடைக்க பெறும் அனுபவம் அது.

இந்த நாவலை இரண்டாம் பாகம் தரலாம் என்பது என் ஆசை. எதோ கேட்டு கொண்டு இருந்த ஒரு சுகஅனுபவம், திடீர் என்று நின்றாது போல் ஒரு உணர்வு சகோதரி. நல்ல நாவலுக்கு வாழ்த்துகள் சகோதரி.
அருமையான நாவலுக்கு அழகான comment சகோதரி
 
malarsuresh

Well-Known Member
என் இனிய நட்பூக்களே நான் இப்போ படிச்சு முடிச்ச எழுத்தாளர் விஜயலட்சுமி ஜெகன் அவரகளது நீரும் நெருப்பும் என்கிற நாவல் பத்தி சொல்லப்போறேன் .ஹீரோ குரு .நாயகி இந்திரா இவங்களோட உடன்பிறப்புகள் பெற்றோர் .அவரகளது கௌரவம் .வறட்டு பிடிவாதம் .இதுல அவங்க காதல் எப்படி வெற்றி யடைகிறாரகள் இதுதான் கதை .எப்பவுமே ஒரு பொருள் நம்ம கண்ணு முன்னாடி இருக்கும்போது அழகா தெரியாது அதுவே அடுத்தவர் பார்த்து அழகுன்னு சொல்லிட்டங்க மதிப்பே தனிதான் .குருவும் அப்படிதான் ரொம்ப perபெக்ட்... யாரும் தன்னை எந்தவிதத்திலயும் குறைவா சொல்லிடக்கூடாதுனு நினைக்கிற ஆளு .அப்படிப்பட்டவன் காதல்ல விழுந்தா என்ன ஆகும் அவங்க ரெண்டு பேரும் வாயால பேசிக்கிறது கம்மிப்பா கண்களாலே பேசிக்குவாங்கா பாருங்க .........அப்டி ஒரு அழகான உணர்வுபா .எவ்வளவுக்கெவ்வளவு அப்பா அம்மா தங்கச்சின்னு பாசம் அன்பு வைத்திருக்கிறானோ அதே அளவு தன்னவள் மேலையும் வைகிருக்கேங்கிறதா நிரூபிப்பதாகட்டும் .உன் காதலுக்கு என் காதல் சளைத்ததில்லன்னு கண்ண மூடிட்டு அவன் மேல வைக்கிற நம்பிக்கையாகட்டும் அருமை அருமை அருமை .படிச்சு பாருங்கப்பா ரொம்ப பிடிக்கும் .ஐயோ அதுக்குள்ள முடிஞ்சிருச்சேன்னு நான் நினைச்ச கதை .படிங்க ரசிங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top