Saththamindri Muththamidu 16

Advertisement

Sundaramuma

Well-Known Member
உரிமை இருக்கிற இடத்தில தான் எப்பவுமே கோபப்படவும் முடியும் சண்டை போடவும் முடியும். திரு அந்த angle ல தான் வர்றான்.
அதுக்காக எப்பவும் கோவம் சண்டைனு இருந்தா எப்படி.... ஏன் சாரதா அத்தையிடம் இனி ஏய் -னு கூப்பிடாதீங்க ...பேரு சொல்லி கூப்பிடுங்க -னு அவங்க கிட்ட பேசி இருக்கலாமே .....துளசியை பேச அவசியமே இல்லை இங்க .... வீட்டுக்கு வந்தவங்க தண்ணி கேட்டா கொடுக்க தான் போவாங்க ....
 

Sundaramuma

Well-Known Member
yes......... தனிமையிலும் அவனிடம் மனதை திறக்க மாட்டேன்னு இருந்தால் எப்படி......

இப்போதைக்கு அவனோட ஒரே எண்ணம் துளசியா திருகிட்ட வரணும் எல்லாவற்றுக்குமே......
மனம் திறக்க எங்க விட்டான் ....அவசர குடுக்கை
 

Sundaramuma

Well-Known Member
படிக்கிறப்போ புரியுறது ஒன்னு தான்.......

துளசி வாழ வந்த வீட்டில் சம்பளமில்லாத நம்பிக்கையான பொறுப்பான வேலைக்காரி........

வீட்டுக்காரனுக்கு அவனோட பொண்டாட்டியின் நிலைமை இத்தனை வருஷமா தெரியலையா?????
இல்லை அவனுக்கு மரியாதைன்னு ஒன்னு இதுவரை இருந்ததே இல்லையா..........

இப்போ புதுசா உன் மரியாதை தான் பார்க்கிறதில்லை......... என் மரியாதை கூடவா?????

போடா........... வாழ வந்த பொண்டாட்டியை வச்சி ஒழுங்கா வாழ துப்பில்லை........
மரியாதையும் மரியாதை..........
அதே தான் ...இங்க அவனுக்கு மரியாதை குறைவுனு எப்படி வந்தது .... இவன் அத்தையை திருத்தி இருந்தா பாராட்டலாம் ......
 

Sundaramuma

Well-Known Member
துளசியின் தவறு.........

அத்தை இன்னைக்கு இங்கேயே நான் படுத்துகிறேன்....... மீனாட்சி என்னை தேடுவா....... இங்கே கொஞ்சம் தள்ளி பெட் போட்டு படுத்துகிறேன்...........

நீ இனிமே எனக்கு சாப்பாடே போடக்கூடாது........ என்னவோ என்னை கல்யாணம் பண்ணினதே அதுக்கு தான்ற மாதிரி நீ அதை செஞ்சுட்டே இருக்க வேண்டாம்........

அவளுக்கு பொண்ணு முக்கியம்........
அவனுக்கு பொண்டாட்டிக்கு நான் முக்கியம் இல்லை......

உன்னை சொல்லி குற்றமில்லை..... என்னை சொல்லி குற்றமில்லை........
காலம் செய்த கோலமடிகடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி......

அதான் ரெண்டு பேரையும் இணைத்தது.........
உன்னை சொல்லி குற்றமில்லை..... எனக்கு சொல்லியும் அறிவில்லை ...........
காலம் செய்த கோலமடி..... திருநீர்வண்ணன் செய்த குற்றமடி.....
திருநீர்வண்ணன் செய்த குற்றமடி......:p:mad::mad:
 

Sundaramuma

Well-Known Member
அவதான் தன் விருப்பத்தை சொல்கிறாளே சீக்கிரம் வீட்டுக்கு வாங்கனு பேசறா அவனுடன் செல்லமாய் கண்டித்துவிட்டு கூட போறா
நான் வரும் வரை இருகனும் சொல்லமல் போகூடாது என்றும் பேசுகிறாள்
அவன் முகம் பார்த்து என்ன பிரச்னை என்றும் கேட்கிறாள்
அவனின் முன் முகம் சிவக்கிறாள் வெட்கப்படுகிறாள் இதிலெல்லாம் புரியாதவனுக்கு எதுவுமே புரியாது எப்பவும் இப்படித்தான் பேச போறான்
இவன் முருங்கை மரத்தில எறிகிட்டு நீயும் ஏறக்கூடாது கண்டிஷன் போட்டுட்டு எனக்கு சர்வ் பண்ணு சர்வ் பண்ணும் என்றால் எப்படி ??
சரி பொண்டாட்டிகிட்டதான் இப்படின்னா பொண்ணை நின்று பார்ப்பானாம்
அவள் பேசியதை கேட்டவுடன் ஓடி போயி அணைக்க மனசில்லை பதறி என்னடா அப்பாவை விட்டுவியான்னு இதெல்லாம் ஒண்ணுமில்லைடா நாங்க பார்த்துகிறோம் ஆறுதல் சொல்லமாட்டான் என்ன அப்பா இவன்
அடிக்கமட்டும் உரிமை மனைவியிடமும் பெண்ணிடமும்
மேலும் அடுத்தநாளும் நின்று மட்டுமே பார்ப்பானாம் அம்மாகிட்டத்தான் இப்படின்னா பெண்ணகிட்டயும் இப்படியா முறைச்சிகிட்டு..... மனசில ஒன்னு வச்சிக்கிட்டு
அவ் பாவம் புள்ளத்தாச்சி இரவும் பகலும் வேலைசெய்து கவலைகள் சுமந்து பெண்ணிடம் சமாதானம் பேசி கொண்டிருக்கிறாள் உனக்காக
நான் இதை தான் எதிர் பார்த்தேன் அவனிடம் .....எல்லாத்துக்கும் கோவம் தான் வருது ......ஏன் இப்படினு யோசிக்க தெரியலை .....பொறுமை வேணும் அவனுக்கு ...நினைச்சதெல்லாம் அப்போதே நடக்கணும்னா எப்படி.....
 

Sundaramuma

Well-Known Member
எப்படி பேசினாலும் கோபம்.......
எதுவும் புரிந்து கொள்ளவும் இல்லை......

அவனோட ஒரே எதிர்பார்ப்பு கட்டில் தான்......
அதுவும் துளசியா அவனிடம் போகும்வரை இது தொடரும்.........

எதற்குமே அவனை தேடுவதே இல்லை...... அப்போ நான் அவளுக்கு தேவையே இல்லையா என்கிற உணர்வும்........
கட்டில் பட்டும் இல்லை .....அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இருக்கிற அன்னியோனியம் தனக்கும் வேணும் என்ற எதிர் பரப்பு.....அதுவும் ஒரே நாளில் வேணும்..... நமக்கு நெருக்கமா யாரும் இல்லையே ... நம்ம பொண்டாட்டியை நல்லா தானே பார்த்துக்கிட்டோம் .....ஏன் அம்மாவும் பொண்ணும் நம்ம கிட்ட ஓட்ட மாட்டேங்கறாங்க ...பொண்ணு அதுக்கும் மேல ஓடி போய்டலாம்னு சொல்லறா...... இங்க இளிச்சவாய் யாரு ....பிடி அவளை தாக்கு .....முட்டாள் ....
 

Sundaramuma

Well-Known Member
முதல் முதலா bikeல் கணவனோடு......:cool:

ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி அய்யாவோட bikeல்.....
தோளை தொட்டு புடிக்கையிலே என்ன சுகம் கண்ணம்மா.....
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம் போவாமா.....
இது ஒண்ணு தான் குறைச்சல் ......:mad::mad:
 

Sundaramuma

Well-Known Member
என்ன சொல்ல?
ஏது சொல்ல-ன்னு ஒண்ணுமே
புரியலைப்பா, மல்லிகா டியர்
யாரோ? எவரோ?
கதைதானே-ன்னு
விட முடியாமல், இதெல்லாம்
நம் சொந்தக்காரப் பையனுக்கு
நடப்பது போல ஒரு உணர்வு,
ஒரு சொந்தம்,
ஒரு ஆற்றாமை
ஐயோ? நம்ம திருப் பையன்
இப்படி இருக்கிறானே-ன்னு
நேற்றிலிருந்து ஒரே கவலையா
இருக்குப்பா
மீனாக்ஷியை விட,
குழந்தையாக திரு,
இருக்கிறானேப்பா?
துளசியே தன்னை வந்து
பார்த்துக்கணும்,
தன்னைத் தேடி வரணும்-ன்னு
அதென்ன, அப்படி
ஒரு பிடிவாதம்,
திருநீர்வண்ணனுக்கு?
இவன் மகளும், இவனைப்
போலவே பிடிவாதம்
துளசி-தான் பாவம்
இவங்க இரண்டு பேருக்கும்
நடுவிலே மாட்டிக்கிட்டு
முழிக்கிறாள்
இதுக்கு நடுவிலே,
மசக்கை வேற?
வீட்டிலே அத்தனையையும்
பொறுப்பா பார்க்கிறதாலே
அவளுக்கு உறக்கம்,
வேற, வந்திடுது
இவன், திருநீர்வண்ணன்
சாமக்கோழி மாதிரி,
ஊரடங்கின பின்னே வந்தால் புள்ளைத்தாச்சி துளசி,
கண்ணு முழிச்சிருந்து
இவனைக் கொஞ்சமாச்சும்
கொஞ்சணும்-னு எக்ஸ்பெக்ட்டு
பண்ணுறான்
அதை, அந்த எக்ஸூபெக்ட்ட, பொஞ்சாதியிடம்,
இந்த திருப் பையன்
கொஞ்சூண்டு தன்மையா
சொல்லப்படாதோ?
அடிக்க வர்ற மாதிரி
பேசினால்,
புள்ளையாண்டிருக்கிற
பொண்ணு பயந்துட
மாட்டாளோ,
மல்லிகா டியர்?
அதான் நாங்களும் சொல்லறோம் பானு ...
கொஞ்சூண்டு தன்மையா....:D
 

Sundaramuma

Well-Known Member
எல்லாரும் எதிர்பார்த்த துளசியின் தங்கை மீரா,மீனாட்சி function க்கு வந்தாச்சு.
நமக்கு இவங்களை பார்க்கறதுக்கே சரியாய் இருக்கு.... பிரசன்னா மீரா இப்போ வராங்க ..ஏதேனும் சைடு ஸ்டோரி டெவெலப் ஆகுமா .... ஆமா, யாரு பிரசன்னா -கு தகவல் கொடுத்தது.....any clue ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top