Final episode of VK-22

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Superb daaarluuu


Ponga moni ma..
ippadi posukkunnu oru varila mudichiputteengalae... naan kovamaa poren ungaluku no
blow-a-kiss-smiley-emoticon.gif

idhudhaan
angry-stare.gif
 

murugesanlaxmi

Well-Known Member
அருமையான வரிகள் கொண்டு அழமான விமர்சனம் அண்ணா.... :)

உழவரைப் பற்றிய உங்கள் பாடல் வரிகள் மிக அருமை!!


சாண்டில்யன் கதைகள் நான் படித்ததில்லை! இப்போது படிக்க வேண்டும் என்று ஆர்வம் எழுகிறது... நான் கதை படித்த காலகட்டம் வெகு சொற்பமே! இப்போதும் மிக மிக குறைவாகவே படிக்க முடிகிறது என் கண்ணில் உள்ள குறைபாடால்.

உங்களை எல்லாம் பார்க்கும் போது சற்றே பொறமை கூட எழுகிறது. என்னால் உங்கள் அனைவரையும் போல் படிக்க முடியவில்லையே என்று!! தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அண்ணா...:)

நிறைகளை சந்தோஷமாக ஏற்றது போல் நீங்கள் சுட்டிக் காட்டிய சிறு குறைகளையும் அவ்வாறே ஏற்றுக் கொண்டேன்.

கிராமிய மொழி: அது இந்த நாவலில் மட்டுமே நான் பயன்படுத்தி உள்ளேன் அண்ணா... எனது மற்ற நாவல்களில் சாதாரண தமிழ் நடைதான்.

பின் கதைக் கரு : உண்மையில் நான் எடுத்துக் கொண்ட கதைக் கருவில் ஐம்பது சதவிகிதம் மட்டுமே இக்கதையில் கொடுக்க முடிந்தது! அதனால் எனக்குமே அந்தக் குறை மனதில் உள்ளது!

ஆனால் இதனை அடுத்து எழுதிய கதைகளின் கருவில், ஓரளவு நான் நினைத்ததில், எழுபது சதவிகிதம் கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

அதற்க்கு நீங்கள் எனது மற்ற நாவல்களை படித்து சொன்னால்தான் எனக்குத் தெரியும். என் எழுத்தில் முன்னேற்றம் இருக்கிறதா என்று! முடிந்தால் படித்துச் சொல்லுங்கள் அண்ணா...

கண்ணீர் குறைத்து நகைச் சுவை: நகைச் சுவையைக் கூட்டிக் கொள்கிறேன். கண்ணீர் மிக அதிகமாக என்றால், அது சூர்யோதயத்தில் மட்டும்தான். கதைக்களம் அப்படி அண்ணா நான் என்ன செய்ய???!!!

இறுதியாக செண்டிமெண்ட்: செண்டிமெண்ட் இல்லாத நம்மவர்கள் இருக்கிறார்களா என்ன?! ஆனால் இப்போதைய காலகட்டத்தில், அது சற்று குறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை!

இருந்தாலும், உறவுகள் மீதும் நட்புகள் மீதும் நாம் வைத்திருக்கும் பாசமும் செண்டிமெண்டும் இன்றளவும் இருக்கத்தானே செய்கிறது அண்ணா?!

நான் கூட அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நாம் அதிகமாக செண்டிமெண்ட் கொடுப்பதால்தான் வாசக வட்டம் நமக்குச் சற்றுக் குறைவோ என்று?!

ஆனாலும் அதனை மாற்றிக் கொள்ள மனம் வரவில்லை! காரணம் செண்டிமெண்ட் என்பது அன்பைச் சார்ந்தது! அன்பு இக்காலத்தில் சற்றே குறைந்து போனாலும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றே நம்புகிறேன்!

இல்லையெனில், இணையதளத்தில் கூட சில நல்ல நட்புக்களையும், சகோதர, சகோதரிகளையும் உறவாகப் பெற்றிருக்க முடியாதல்லவா?!

தங்கள் வேலைகளுக்கு கிடையில் பல மணித்துளிகள் செலவிட்டு இவ்வளவு நிறைவான விமர்சனத்தைக் கொடுத்ததற்கு மிக்க மிக்க மிக்க நன்றிங்க அண்ணா...

தங்களின் கருத்துக்களை பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டு வரவேற்கிறேன்... என்றென்றும் என் கதையின் நிறை, குறைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். நன்றி....:)
அருமை சகோதரி , உங்கள் அன்பால் அனைவரையும் வென்றுவிடுவீர் சகோதரி.வாழ்த்துகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top