வீர வணக்கம்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"சொந்த நாட்டிலேயே
சோற்றுக்கு பாடுபட்டோம்
சுயமரியாதை இழந்தோம்"


"சோகம் தீர்க்க
தீபச்சுடரொளியாய் தியாகிகளின் வரவு"


"பாட்டாலே பலரை போராட வைத்தார்
அவர் பெயர் பாரதி
துணிவோடு எதிர்த்து நின்றதால்
தூக்கு மேடை சென்றார்
அவர் பெயர் கட்டபொம்மன்"


"கப்பலோட்டி என் மக்களை
கரை சேர்ப்பேன் என்றார் வ.உ.சி
வாள் ஏந்தி நின்றாள்
வீர தமிழன்னை வேலுநாச்சி"


"அரை நிர்வாணமாய்
நம் மானம் காக்க போராடினார் ஒரு தலைவர்
அவர் தான் காந்தி"


"விடுதலை வாங்கிடதான்
விரிந்து நின்றது ஒரு கூட்டம்
அதை விலக்கிடத்தான்
வெறியுடன் சுட்டு வீழ்த்தியது
மிருகக்கூட்டம்"


"விலகவில்லை அக்கூட்டம்
விடுதலை வாங்கும் வரை
வியந்து நின்றான் வெள்ளைக்காரன்
இந்தியனின் விடாப்பிடி செயல் கண்டு"


"காட்டாற்று வெள்ளமாய் ஓடிய இரத்தம் கண்டு
கலங்கினான் வெள்ளைக்காரன்"


"அறிவித்தான்
நம் அன்னை நாட்டின் விடுதலையை"


"இந்தியர்கள் அனைவரும் இன்பத்தோடு வாழ்ந்திட
இரவில் உதித்தது நம் சுதந்திரம்"


"இமயம் முதல் குமரிவரை
குளிர்ந்து போனாள் பாரத மாதா
தன் மக்களின் மகிழ்ச்சி கண்டு"


"கண்ணீர் கரைபுரண்டு
இரத்ததில் வெள்ளம் பாய்ந்து
நம் நாட்டை மீட்டெடுத்து
நல் வாழ்வு நமக்களித்த
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு
வீரவணக்கம்"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top