kani

 1. SHANMUGALKSHMI

  உடன் பிறப்பே

  "உற்ற துணை ஒன்று எனக்கு உலகிலே உண்டெனில் என் உடன்பிறந்தவனே நீ மட்டும் தானே" "அன்பாய் சிலநேரம் என் ஆசை நிறைவேற்றினாய் உன்னுடன் நான் இடும் சண்டைகூட சந்தோஷம் தானே தருகிறது உன் சமாதானங்களினால்" "இன்பத்திலும் இமையோரம் ஈரம் கசிகிறது கணவன் கைபிடித்து உன் கரம்விலகி செல்லும் கவலை நினைத்து"...
 2. SHANMUGALKSHMI

  எழுந்து வா இளைஞனே

  "பட்டம் பெற்ற நீ படுத்திருக்கலாகுமோ?" "வேலையில்லை என வீதிமுனையில் வீற்றிருப்பாயோ?" "வீறுகொண்டு எழு என்னுடைய பூமியிலே என் மொழி கற்றவன் ஒதுங்கி நிற்க வேறொருவன் வந்து வீற்றிருக்கலாகுமோ வேலையிலே என" "வெட்டிக்களையெடு வேண்டாதவரையெல்லாம் வெற்றி தான் பெறு விடாமுயற்சினால்" "ஏசியின் குளுமையில் இடம்...
 3. SHANMUGALKSHMI

  நெஞ்சோரமாய்

  "நெஞ்சோரமாய் நெருஞ்சி முள் பாய்ந்ததோ நினைவில் நீங்காத இடம் பிடித்த நீ தான் யாரோ போல் என்னை கடந்து சென்றபோது" "நிம்மதி நீயே என்னைக்கண்டு நீ யார் எனக்கேட்டபோது கண்ணாடியாய் நான் நொறுங்குகையில் நெஞ்சோரமாய் நெருஞ்சி முள் நெருக்கமாய் தைத்தது" "வலி தந்த உறவே நீ மறுமுறை வாசல் வந்த போதும் நூறுமுறை...
 4. SHANMUGALKSHMI

  அசைந்தாடும் தேரே

  "காற்றில் அசைந்தாடும் உன் கருநிற கூந்தல் அதை கண்டவுடன் அறிவில் உதித்தது பெண்ணே அசைந்தாடும் தேரே என" "தெருவில் நீ நடந்திடத் தான் தென்றல் தீண்டும் போது திசையின்றி பறக்கிறது உன் கரு நிறக்கூந்தல் காற்றில் அது கவிபடைக்க கண்டேனடி அசைந்தாடும் தேரே உன் கருநிறகூந்தலதை"
 5. SHANMUGALKSHMI

  குளிர் நிலவே

  "குளிர் நிலவே குறையற்ற உன் அழகில் குற்றவாளியாய் மாறிடத்தான் ஆசை வந்தடி உன் கொள்ளை அழகை கொள்ளை கொண்டிட" "சிரித்திடும் உன் இதழில் சில்லென்ற பனிதான் சித்திரையிலும் பொழியுதடி" "பிறை நெற்றியின் நடுவில் இருக்கும் சந்தன பொட்டு அது நானாக இருந்திடத்தான் சாமியிடம் வேண்டினேனடி" "சந்நியாசி என்னையும்...
 6. SHANMUGALKSHMI

  எனது உயிரே

  "ஊர் முன் உன்னோடு ஊர்வலம் செல்கையில் காண்பவர் கண்ணெல்லாம் காந்தம் போல நம் மீது" "நெரிசல் நிறைந்த சாலையில் கூட உன்னோடு செல்வது நிறைவான பயணம் எனக்கு" "காலம் முழுதும் உன் கரம் கோர்த்து காற்று வீசும் சாலையிலும் மழை வீசும் மாலையிலும் மண் வாசம் அதனோடு இளந்தென்றல் தீண்ட தேர் மேல் பவனியாய் ஊர்வலம்...
 7. SHANMUGALKSHMI

  மைவிழியில் மயக்கம்

  "மான் போல் மருண்ட பார்வை மகிழ்வான திருமண பொழுததில் மறைந்திருந்து கண்டேன்" "மருளும் விழியதில் மாயம் கண்டேன் அவள் மைவிழியில் மயக்கம் கொண்டேன்" "மைவிழியின் மயக்கத்தில் மறந்தேன் மற்றதை" "மைவிழியே என்ன மந்திரம் போட்டாயோ மன்னன் நான் மயங்கிடத் தான் மைவிழியில் மயங்கினேன் நானடி"
 8. SHANMUGALKSHMI

  தனிமை

  "என் வாழ்வின் இரகசிய பள்ளத்தாக்கு" "புதைக்கப்பட்ட ஆசைகள் ஆயிரம் சிந்திட்ட கண்ணீர் துளிகள் தான் பெரு வெள்ளம்" "தனிமையும் இனிமை தான் நினைவுகளில் நீங்காத காட்சியினை நினைத்து மகிழும் போது" "தனிமையும் வறுமை தான் அன்பின் ஏழ்மையில் நான் இருக்கும் போது"
 9. SHANMUGALKSHMI

  தொலைக்காட்சி

  "தொலைக்காட்சியே நீ தொல்லைக்காட்சியாய் மாறியது ஏனோ" "ஒலியும் ஒளியுமாய் இருந்த உன்னைக்கண்டு இன்று ஒளியும் நிலை வந்துவிட்டது உன்னை ஒழிக்கும் நிலையும் வந்துவிட்டது" "உன் தொடர்கதைகளில் தொலைத்தனர் பலர் தங்கள் குடும்பத்தின் மகிழ்வான பொழுதுகளை" "உன் விளம்பரங்களை விட்டு விலகாமல் இருக்கின்றனர் விவரம்...
 10. SHANMUGALKSHMI

  கருமை நிறம்

  "உலகம் எல்லாம் சுற்றினேன் ஓராயிரம் நிறம் கண்டேன்" "ஒன்றைவிட ஒன்று அழகாய்த் தான் நின்றது மனதில்" "ஓரிடத்தில் ஓட்டம் நின்றது அங்கே கருவறையில் இறைவன் வீற்றிருக்க கண்களை கவ்வி கொண்டது அக்காட்சி வெறுமை எல்லாம் விலகியது விழியதில் விழுந்த கருமை நிற கற்சிலையில் கருமையாய் இருப்பதால் தானே கடவுளும்...
 11. SHANMUGALKSHMI

  மழலையின் சிரிப்பில்

  "மயங்கினேன் என்னை மறந்தேன் மாய உலகில் சிறகின்றி பறந்தேன் சிறு மழலையின் சிரிப்பில்" "பொக்கை வாய் சிரிப்பதனில் பொசுங்கியது என் நெஞ்சம்" "இதழ்கடையோரம் உதிர்க்கும் சிரிப்பிற்கு உலகை கூட தந்திட தான் உள்ளம் எண்ணுகிறது" "மழலையின் சிரிப்பதில் மாற்றங்கள் கொண்டது என் உள்ளம்" "உலை கலனாய் கொதிக்கும்...
 12. SHANMUGALKSHMI

  இரவின் மடியில்

  "பௌர்ணமி முழு நிலவு மொட்டைமாடியில் தென்றல் வரவு இனிமையான இசையில் இரம்மியமான பொழுது" "சலசலக்கும் மரங்களின் சத்தம் அது சங்கீதம் மேனி தழுவிடும் தென்றல் அது பரம சந்தோஷம்" "இறக்கை கட்டி பறந்த பகல் பொழுதின் நினைவுகளோடு படுத்திருந்தேன் மொட்டை மாடியில் இரவின் மடியில்" "எல்லையற்ற நிம்மதி என்னுள்...
 13. SHANMUGALKSHMI

  புத்தக புதுமையே

  "உலகிற்கு உறுதுணையாய் வார்த்தையில் வடித்த சிற்பமாய் நீ வந்திட வாசிக்கும் வரம் கொண்டேன் உன்னை" "கதையாய் நீ வந்தாய் கற்பனை பொழுதிலே கவிதையாய் நீ வந்தாய் காதல் பொழுதிலே" "உன்னால் உறக்கம் கொள்கிறேன் சிலநேரம் உள்ளம் மயங்குகிறேன் பல நேரம்" "பகுத்தறிவு நீ சொல்ல உன் பரிணாமங்களில் சிக்கி...
 14. SHANMUGALKSHMI

  மீன் விழியே

  "மீள முடியாத உன் மீன்விழி பள்ளத்தாக்கில் இருந்து பரிதவிக்கிறேனடி" "மீண்டும் நான் மீண்டு எழும் பாதைதான் உன் மீன் விழியில் இல்லையே" "ஒரு வழி பாதையை விழியதில் கொண்டவளே வழி அது சொல்லடி நான் மீண்டு எழ" "மீன் விழியால் என்னை மீள முடியாமல் செய்தவளே மெய் அது சொல்லடி உன் விழி விடு தூதில் காதல்...
 15. SHANMUGALKSHMI

  ஜன்னலோர இருக்கை

  "உறவுகளோடு சண்டையிட்டு உரிமை பெற்றேன் உன்னிடத்தில் அமர்வதற்கு" "உன் கைகளான கம்பிகளை பற்றிகொண்டு கடந்து செல்லும் காட்சிகளையெல்லாம் கண்களிலே நிரப்பினேன்" "எதிர்க்காற்று முகத்தில் மோத முழுவதும் தொலைந்தேன்" "இதமான தென்றல் இமை மூட வைக்க சொர்கத்திலே இருப்பது போல் சுகமாய் உறங்கினேன்" "சிறு சாரல்...
 16. SHANMUGALKSHMI

  வலி தந்த வார்த்தைகள்

  "சொல்லால் சொற்றொடர் அமைத்து நாவை சுழற்றி நயவஞ்சகமாய் ஒரு வார்த்தை வலி தந்த வார்த்தை" "கை ஓங்கி கன்னம் வலிக்க வாங்கிய அடியை விட வஞ்சம் நிறைந்து வாய் வழி வந்த வார்த்தை நெஞ்சம் தொடும் போது வரும் வலி பெரிதல்லவா" "ஈட்டியால் எறிந்தாலும் எழுந்திடுவேன் தீட்டிய சொல் அது தீக்கங்காய் சுட்டது...
 17. SHANMUGALKSHMI

  தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட தமிகழம்

  "சுங்க சாவடி போட்டு சுகமாய் சாலையிலே வசூல் செய்கிறான் கோடிகளில் தனியார் அவனிடம் தாரைவார்க்கப்பட்ட தமிழத்தால்" "குடிக்கும் நீர் குறையின்றி கிடைக்க காத்து கிடக்கும் நிலை காரணம் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட தமிழகத்தால்" "அரசின் ஆளுகையில் செயல்பட வேண்டியன் ஆரவாரமாய் செயல்படுகிறான் அவனிடம் தாரை...
 18. SHANMUGALKSHMI

  உறவுகள்

  "உதிரத்தின் பிணைப்பில் வரவில்லை உள்ளம் கொண்ட உன்னத அன்பில் கிடைத்த அரிய பொக்கிஷம்" "அன்னையாய் அரவணைக்க அழகான ஒரு அன்னை" "ஆறுதல் கூறி தேற்றிட தான் தேவதையாய் அக்கா" "ஆசி வழங்கிட ஆனந்தம் தந்திட அன்பான அப்பா" "தயக்கங்கள் ஏதும் இன்றி தங்கையாய் ஏற்றுக்கொண்ட தங்கமான அண்ணங்கள்" "இவையெல்லாம்...
 19. SHANMUGALKSHMI

  கண்டேன் ஒரு கடிதம்

  "காதல் பாடல் கேட்கையிலே கடிதப் பாடல் ஒன்று கேட்டேன் ஒலிபெருக்கியிலே உள்ளம் நெகிழ்ந்தது அதில் ஒளிந்திருந்த வார்த்தைகளிலே" "வேதனையை வார்த்தையில் வடித்து வாய் மொழி திறந்து பாடிய பாடல் செவி வந்து அடைகையிலே சிலிர்த்து போனேனே சின்னப்பொன்னின் குரலில்" "வறுமை வாட்டிடத்தான் கொடுமை பட்டிடத்தான்...
 20. SHANMUGALKSHMI

  புது வரவு

  "பத்து மாதம் பத்திரமாய் இருந்த இடம் விட்டு பாய்ந்து ஓடி வருகிறது பச்சிளம் குழந்தை பாசம் நிறைந்த சொந்தம் பார்க்க" "இளவேனில் வெயில் பட்டால் கூட ஏதேனும் ஆகிடுமோ என அஞ்சும் அன்னையவள் கையில் அழகிய பொம்மையாய் சிரிக்கையில் ஜெயித்துவிட்ட உணர்வு வாழ்வில்" "புது வரவு அதை கரங்களில் அள்ளுகையில் ஆசைதான்...