"வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!" - Final 2

Advertisement

gomathyraja

Well-Known Member
Hi ma :love: super ma, ella writer nalayum sequel story ezhutha muduyaruthu illai antha vagaiyil you are gifted athuvum swarasyam kuraiyama kondu pogurathu enpathu something more no words to say hats off to you keep up the good work waiting for Vishwa and Preethi eagerly come soon:whistle::whistle::whistle:(y)
 
Last edited:

keerthukutti

Well-Known Member
சில கதைகள் படிச்சிட்டு கடந்து போயிடுவோம் சில கதைகள் மட்டும் நிஜமா நம்ம பக்கத்துல யாருக்கோ நடக்கறதா உணருவோம் ... அப்படி ஒரு கதை என்ன சொல்லன்னு தெரியல சிஸ் ரொம்ப ரொம்ப ரசிச்சி வாசிச்சேன் கீர்த்தி ப்ரீத்தி சேரவே மாட்டாங்களோன்னு இருந்தது சரண் வேற லெவல்... செம கடைசியில காதல் மன்னனுக்கே போட்டியா களம் இறங்கி அதகலபடுத்திடாங்க...
 

Priyaasai

Active Member
'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !' - 39

View attachment 11062


வீடே எழில், நாதன், வளர்மதி, வைதேகி,கலைவாணி, வசுமதி, தீபிகா, வெண்மதி ,வான்மதி அவர்கள் பிள்ளைகள் என்று அனைவரின் வருகையில் கூச்சலும் கும்மாளமுமாக ஆர்பரித்து கொண்டிருந்தது.

முகம் கொள்ளா புன்னகையுடன் அமர்ந்திருந்த கீர்த்தியை சுற்றி கொண்ட பெண்மணிகள் அவளுக்கு ஆளுக்கு ஒருவராக ஜூஸ், பழம், சாலேட் என்று கொடுக்க அவர்களிடம் வாங்கிக்கொண்டு இருந்தவளை சுற்றி கொண்ட வாண்டுகள்,

"மாமி உங்க வயித்துல மூணு குட்டி பாப்பா இருக்கா" என்று வருண் கேட்க,

' ஆம் ' என்று அவள் தலையசைக்கவும்,

எப்படி மாமி..?? மூணு பேருக்கும் ஸ்பேஸ் இருக்குமா..?? சண்டை போட மாட்டாங்களா..?? எத்தனை கேர்ள்ஸ் எத்தனை பாய்ஸ் ...?? எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா..?? மூணு பேருல யாருக்கு பிடிச்ச ஜூஸ் பிடிக்கும், யாருக்கு பழம்..?? என்று அவர்கள் கேள்விகளை அடுக்கிகொண்டே போக கீர்த்தி அவர்களுக்கு பதில் சொல்லியே சோர்ந்து போனாள்.

"என்ன பேச்சு..?? என்ன கேள்வி..??" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்த வைதேகி "டேய் போதும் எல்லாரும் ஓடுங்க இது மாமியும் குட்டி பசங்களும் தூங்கற நேரம்" என்று அவர்களை அனுப்பி வைக்க,

அங்கு வந்த அவிரன் கீர்த்தியின் வயிற்றில் கை வைத்து,

"சித்தி பாட்டி உங்க வயித்துல மூணு பாப்பா இருக்குன்னு சொன்னாங்க நிஜமா..??" என்றிட,

'ஆமா தங்கம்'

"அப்போ ஏன் அம்மாக்கு மட்டும் வயித்துல ரெண்டு குட்டி பாப்பா தான் இருக்கு" என்று கேட்க கீர்த்திக்கு அது புது செய்தி வளர்மதியிடம்,

"நீங்க இங்க வந்துட்டேங்களே அப்போ அமுலுவை யார் பார்த்துக்குறா பெரிம்மா, தனியாவா விட்டுட்டு வந்தீங்க..??"

"இல்ல கீர்த்தி நீலாம்மாவை பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன் சுடரும் பக்கத்துல தானே அவங்க பத்திரமா பார்த்துப்பாங்க "

'சரி' என்று தலை அசைத்தவள் கைபேசியை தேடி எடுத்து உடனே அலருக்கு அழைத்து விட்டாள்.

மறுபுறம் தோட்டத்தில் "என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லலையேன்னு கோபத்துல உன் பக்க நியாயத்தை புரிஞ்சிக்காம போயிட்டேன் என்னை மன்னிச்சிடுடா " என்று இரண்டாம் முறையாக நாதன் சரணிடம் மன்னிப்பு கேட்க,

"அய்யோ மாமா என்ன இதெல்லாம் எனக்கு தெரியாதா உங்க முன் கோபத்தை பத்தி எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு முதல்ல நீங்க கையை இறக்குங்க" என்றவன் அருகே இருந்த எழிலிடம், "அண்ணா நீங்களாவது சொல்லுங்க" என்று கூற,

"மாமா போதும் அவனுக்கு உங்க மேல கோபம் தானே தவிர வெறுப்பு எல்லாம் இல்ல'

"இல்ல அகனா நீ, என் பொண்டாட்டி, பொண்ணு, புள்ள, மாமியார், மச்சான்ன்னு என்னை சுத்தி இருக்க எல்லாரும் எனக்காக யோசிச்சி இருக்கீங்க ஆனா நான் ஒரு நிமிஷம் கூட எனக்காக இருக்க யாருக்காகவும் யோசிக்கலையே..??" என்று வெறுமையாக சரணை பார்த்தவர்,

"ஒரு அய்யோக்கியனால உங்க எல்லாரையும் எவ்ளோ நோகடிச்சிட்டேன் அதுவும் இவனை..” என்று சரனை பார்த்தவர், “ப்ச் நான் மனுஷனே இல்லடா" என்ற மனிதரின் கண்களில் நீர் தேங்கிவிட்டது.

உடனே சரணும் எழிலும் ஆளுக்கு ஒரு புறமாக அவரை அணைத்து கொண்டு, 'மாமா டாக்டர் என்ன சொன்னாங்க நீங்க என்ன பண்றீங்க..??' என்று கடிய,

"அகனா எனக்கு மனசே ஆறலைடா..!! நம்ப கூடாதவனை எல்லாம் நம்பினேன் ஆனா நம்ப வேண்டிய உங்க ரெண்டு பேரையும் நம்பாம போயிட்டேன்... நீலா அக்கா சொன்னது சரி எனக்கு பேச மட்டும் இல்ல எதையும் சரியா புரிஞ்சிக்கவும் தெரியல.., பொண்ணு அங்க இருந்ததை மறைச்சிட்டானேன்னு கோபம் ஆனா நான் நம்பி இருந்திருக்கணும் கண்ணால் பார்க்கிற எல்லாமே உண்மை இல்லங்கிற தெளிவு எனக்கு இருந்திருக்கணும் " என்று கண்களை துடைத்து கொண்டவர்..,

“இவனை சின்ன வயசுல இருந்து பார்க்கிறேன்” என்று சரணை சுட்டிகாட்டியவர் “அத்தை மாமா ஏத்துகிட்டா கூட இவனை படிக்க வைக்கிறேன்னு சொன்ன என்கிட்டேயே கௌரவம் பார்த்தவன்டா அவன் எப்படி பணத்துக்காக என்னை தேடி வருவான்னு நான் யோசிச்சி இருக்கணும்” என்று சரணை கட்டிக்கொண்டவர் அவன் நெற்றியில் முத்தம் வைத்தவர் திரும்பி எழிலிடம்,

“அதை விட்டுட்டு ஏன் என்னை தேடி வரல அவ்ளோ பெரிய மனுஷன் ஆகிட்டானான்னு என் ஈகோ அவனை புரிஞ்சிக்க விடாம தடுத்துடுச்சி..”

"எனக்கு இருக்க சுயகௌரவம் இவனுக்கும் இருக்கிறது தப்பில்லையே..?? அதை புரிஞ்சிக்காம போனது தான் என் தப்பு..!!"

"மாமா எதுக்கு இப்போ இதெல்லாம் பேசிட்டு விடுங்க ஆபரேஷன் முடிஞ்சி இவ்ளோ சீக்கிரம் எதுக்காக நீங்க ட்ராவெல் பண்ணீங்க..?? ண்ணா நீங்களாவது சொல்லகூடாதா..??" என்று எழிலை கேட்க,

"எங்கடா நானும் சொல்லி பார்த்தேன் கேட்கவே இல்ல நேர்ல போய் மன்னிப்பு கேட்டே ஆகணும்ன்னு ஒரே பிடிவாதம்... இவருக்காகவே மூணு மணி நேரத்துல வர வேண்டிய இடத்துக்கு அஞ்சு மணி நேரமா ஓட்டிட்டு வந்திருக்கேன்"

அங்கு வந்த வளர்மதி, "என்னங்க கீர்த்தி வந்ததுல இருந்து உங்களை கேட்டுட்டே இருக்கா நீங்க இங்கயே நின்னுட்டீங்க...?? வாங்க " என்று அழைக்க மறுவார்த்தை பேசாமல் உடனே வளர்மதியுடன் சென்றார்.

அவர் செல்லவும் “அமுலு எங்கண்ணா ஆளே காணோம் ஏதாவது முக்கிய வேலையா..??”

“இல்லடா போன வாரம் தான் டாக்டர் கிட்ட போயிருந்தோம் ட்வின்ஸ்ன்னு கன்பார்ம் பண்ணாங்க மூணு மாசம் முடியற வரை ட்ராவல் பண்ணகூடாது அதான் கூட்டிட்டு வரலை” என்று கூற,

“கங்க்ராட்ஸ்ண்ணா” என்று எழிலை கட்டிக்கொள்ள அவனோ,

“உனக்கும் வாழ்த்துக்கள் சரண் ஆனா கீர்த்தியை ரொம்பவே பத்திரமா பார்த்துக்கோடா, எமோஷனல் ஆகவிடாத அவ கேட்டதை வாங்கி கொடு, பிடிக்காததை செய்யாத, முடிஞ்சா வீட்ல இருந்தே வேலை பாரு முக்கியமா இப்போதைக்கு ஊர் பக்கம் வரவேண்டாம்"

“கண்டிப்பாண்ணா ஏற்கனவே ஆபிஸ்ல பேசிட்டேன் அதே மாதிரி சரண்யா கல்யாணம் முடிஞ்சதுமே கீர்த்தியை அவ வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்”

‘என்னடா சொல்ற..?? அங்க அந்தாள் வீட்டுக்கு போனியா..??’

'ஆம்' என்று தலை அசைந்த்திருந்தான் சரண்.

அன்று சரண்யா திருமணம் முடிந்த மாலை கீர்த்தியை அழைத்து கொண்டு சென்ற சரணிடம் "எங்க மாமா போறோம்..??" என்று கேட்டவள் அதன்பின்னரே அவன் கூட்டி செல்லும் பாதை உணர்ந்து "வேண்டாம் மாமா" என்று கீர்த்தி மறுத்திருந்தாள்.

"அமைதியா வா பாப்பு" என்று அவளோடு அவள் வீட்டு முன் சென்று நிற்கவும் அவர்களை கண்ட தீபிகாவிற்கு கையும் காலும் ஓடவில்லை.

வா... வாங்க மாப்பிள்ளை வா.. என்று அவர் திணற,

'என்ன அத்தை ஆலம் சுத்தி கூப்பிட மாட்டீங்களா..??' என்று கேட்ட சரணிடம்,

"இதோ ஒரு நிமிஷம் மாப்பிள்ளை" என்று உள்ளே ஓடியவர் ஆரத்தி தட்டோடு வர கீர்த்தி கலங்கிய விழிகளோடு சரணை தான் பார்த்திருந்தாள்.

தனக்காக வீடு, சொத்து, பணம், படிப்பை தூக்கி எறிந்தாலும் கீர்த்தி தூர எறிய முடியா சொந்தங்கள் பிரகாசத்தின் மூலம் அவளுக்கு கிடைத்திருக்க சரணும் அதன்பின் வசுமதி, தீபிகாவை சென்னை அழைத்து கொண்டு வந்து கீர்த்தியுடன் சேர்த்து விட்டிருந்தான்.

இப்போது அவர்கள் இருவருமே கீர்த்தியை ஆளுக்கு ஒருபுறமிருந்து கவனமாக பார்த்து கொள்கின்றனர்.

பிறந்ததில் இருந்தே பாலூட்டி, சீராட்டி வளர்க்க முடியாத மகளை குறைந்த பட்சம் அவள் பேரு காலத்தில் தாங்குவதற்கு பாக்கியம் கிடைத்ததில் வசுமதியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. இதில் ஆச்சர்யமே தீபிகாவும் அவரை புரிந்து கொண்டு கீர்த்திக்கு செய்வதை எதிர்க்காமல் போனது தான்.

வசுமதி, தீபிகா இருவரையும் சரண் அவள் முன் நிறுத்திய போது கீர்த்தியின் முகத்தில் வந்து போன உணர்வுகளும் கண்ணீருடன் மலர்ந்த அவள் புன்னகையையும் பொக்கிஷமாக தன்னுள் நிறைத்து கொண்டான்.

சரண் பதிலளிக்காமல் யோசனையில் இருப்பதை கண்டவன், "மாமியும் இப்போ இங்க வர முடியாது அமுலுவை பார்த்துக்குறாங்க, உன்னோட அம்மாவால முடியாது நான் வேணும்ன்னா அன்னைக்கு சொன்ன அந்த அம்மாவை வர சொல்லுட்டா சரண் இல்ல உன் சின்ன அக்கா கூட இருப்பாங்களா..??” என்று கேட்க,

"அதுக்கெல்லாம் அவசியம் இல்லண்ணா, அத்தைங்க ரெண்டு பெரும் இப்போ கொஞ்ச நாளா இங்கதான் இருக்காங்க" என்று கூறவும் எழிலிடம் நிம்மதி மூச்சு வெளியானது.

பவித்ரா இருவருக்கும் தேநீர் கொடுக்க அதை எடுத்து பருகியவன் எழிலிடம்,

"அண்ணா நான் கூடிய சீக்கிரம் வேற வீடு பார்க்கலாம்ன்னு இருக்கேன்' என்று பேச்சை தொடங்க..,

'ஏன் சரண்..?? இங்க வசதியா தானே இருக்கு உனக்கும் ஆபிஸ்க்கு பக்கம் பிறகு ஏன் இந்த முடிவு..?'

'முன்ன நீங்க இங்க இருக்க சொன்னப்போ இருந்த நிலைமை வேற..' என்று நிறுத்திட எழிலுக்கும் சரண் கூற வருவது புரிந்தது...

ஆம் சில மாதங்களுக்கு முன் எழில் இங்கிருந்து ஆரணிக்கு இடமாற்றம் வாங்கி கொண்டு செல்லவும் அலருக்காக அவன் வாங்கிய வீட்டை யாருக்கும் வாடகைக்கு விடவும் பிடிக்காமல் அதே சமயம் பூட்டி வைக்கவும் விரும்பாமல் இருந்த எழில் இடம் மாற நினைத்த சரணை இங்கே இருக்குமாறு கூறி இருந்தான். ஆனால் இப்போது திருமணம் ஆனா பிறகு இங்கே தங்க அவன் யோசிப்பது ஏன் என்று புரியாமல் அவனை பார்க்க,

'இனி ஊர்ல இருந்தா நிச்சயமா... '

'புரியுது சரண் சென்னையில செட்டில் ஆகிறதுன்னு முடிவு பண்ணிட்ட குட் டிசிஷன் ஆனா அதுக்கும் வேற வீடு பார்க்கிறதுக்கும் என்ன சம்பந்தம் இது நம்ம வீடு தானே இங்கயே இருக்கலாமே'

'அப்பா தவறின பிறகு அம்மாவை இங்க கூட்டிட்டு வர சந்தர்ப்பம் அமையல ஆனா இப்போ குடும்பமா இங்கயேன்னு முடிவான பிறகு என்றவனுக்கு இன்னுமே பணம் குறித்து பிரகாசம் பேசியது மனதை விட்டு அகல மறுக்க குரலை செருமிகொண்டு ,

'ண்ணா இன்னைக்கு பல உறவுகளுக்கு நடுவுல சிக்கல் வரதுக்கு காரணமே பணம் தான், ஏற்கனவே நீங்க கொடுத்த பணத்தை நான் இன்னும் திருப்பி கொடுக்கலை'

'என்ன பேசுற சரண்'

'நிஜத்தை பேசுறேன்னா அன்னைக்கு நீங்க நான் அவசரம்ன்னு கேட்டதும் உடனே கொடுத்தீங்க ஆனா இந்தியா திரும்பின பிறகு திலக் அப்புறம் மத்தவங்க கிட்ட வாங்கின அமௌன்ட்டை செட்டில் பண்ணிட்டு உங்களோடதை கொடுக்க முடியாத அளவு சிக்கல் அதிகமாகிட்டே போயிடுச்சி'

"சரண் இப்போ எதுக்கு பணம் பத்தின பேச்சு..?? நான் உன்னை கேட்டேனா..??"

"ண்ணா நீங்க கேட்கிற அளவு நான் வச்சிக்கிட்டா அது நீங்க செஞ்ச உதவிக்கு மதிப்பும் இல்ல நான் வாங்கின பணத்துக்கு மரியாதையும் இல்லாம போயிடும்"

"அதான் ஏற்கனவே ரெண்டு லட்சம் கொடுத்திருக்கியே, இங்க பாரு சரண் கூட இருந்த பார்த்த எனக்கு பணத்தை விட இப்போ உன்னோட சந்தோசம் தான் முக்கியம் அதை விட குழந்தைங்க மீதி பணத்தையும் மெதுவா கொடு எனக்கு ஒன்னும் அவசரம் இல்லை"

"ண்ணா நீங்க கேட்கலைங்கிரதுகாக நான் அமைதியா இருந்திட முடியாது... கொடுக்கல் வாங்கல்ல நாணயம், நம்பிக்கை ரொம்ப முக்கியம். நீங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கையினால நான் மெத்தனமா இருந்து உங்க நம்பிக்கையை உடைச்சிட கூடாது... கொடுத்த உங்களை விட வாங்கின எனக்கு தான் பொறுப்பு அதிகம் யாருக்கு எப்போ எந்த நிர்பந்தம் வரும்ன்னு தெரியாது என்று இரண்டு நாள் இடைவெளியில் இருபது லட்சம் புரட்டியவனுக்கு அல்லவா அச்சூழலின் அழுத்தம் நன்கு தெரியும்"

'நான் உன்னை கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லலையேடா'

"ஆனா சொல்ல வேண்டியது என்னோட கடமை சொல்லிட்டேன் ஆனா இப்போ நான் பேச வந்தது வீடு பத்தி" என்று சரண் ஆரம்பிக்கவுமே,

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது எழிலுக்கு நன்கு புரிந்து போக, "எப்பா டேய் போதும்டா சாமி இப்போ உனக்கு என்ன நான் இந்த வீட்டுக்கு வாடகை வாங்க மாட்டேன்னு சந்தேகம் அதானே..?? " என்று கேட்கவும் 'ஆம்' என்பதாக சரணும் தலையசைத்தான்.

"உனக்கு அந்த சந்தேகமே வேண்டாம் ஹவுஸ் ஓனரா ரொம்ப ஸ்ட்ரிக்டா டான்னு ஒன்னாம் தேதி வந்து வாடகையை வசூல் பண்ணிக்குறேன் போதுமா..??" என்று அவன் தோளணைக்க இருவரும் புன்னகையுடன் வீட்டினுள் சென்றனர்.

****

'பேசு பாப்பு' என்று சரண் கூற,

'மாமா' என்றவளுக்கு நா தழுதழுக்க கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது,

'பேசு'

இதழ்களை அழுந்த மடித்து கேவலை கட்டுபடுத்தியவள் மறுபுறம் 'ஹலோ ஹலோ' என்ற ப்ரீத்தியின் குரலுக்கு பதிலளிக்க முடியாமல் கைபேசியை ஒரு கையால் பொத்தி கொண்டு சரணிடம்,

"இல்ல மாமா வேண்டாம் உங்.. உங்களக்கு உங்களை விட எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை" என்று கைபேசியை அணைத்து விட்டால்.

சரணோ அவள் கண்ணீரை துடைத்து தன் தோள் சாய்த்தவன், "ஆனா எனக்கு நீ முக்கியம் பாப்பு உன்னோட சின்ன சின்ன ஆசையும் எனக்கு முக்கியம் அப்படி இருக்கப்போ இந்த உறவு உன்னோட எத்தனை வருஷ ஏக்கம்ன்னு எனக்கு தெரியும்" என்று கண் மூடி திறந்தவன், "அன்னைக்கு நான் சொன்னேனே நியாபகம் இருக்கா..??" என்று அவள் முகத்தை கையில் ஏந்த,

அவளுக்கோ இப்போது அவனை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை அலைபாயும் விழிகளுடன் அவனை பார்த்தவளிடம்,

"பாப்பு நீ என் கூட இருந்தா சிலதை மறக்க, கடக்க மட்டுமில்லை மன்னிக்கவும் முடியும் அது உனக்கு மட்டுமில்ல ப்ரீத்திக்கும் பொருந்தும்" என்றிட,

'மாமா' என்று பெரும்கேவலுடன் அவனை கட்டிக்கொள்ள,

"ஷ்ஷ் பாப்பு இப்படி எமோஷனல் ஆகறது குழந்தைகளுக்கு நல்லதில்ல, முதல்ல அழுகையை நிறுத்து" என்று அவளை ஆசுவாசப்படுத்தியவனிடம்,

"நீங்க ... இல்ல மாமா வேண்டாம் நிஜமா எனக்கு இப்போ அப்படி எந்த ஏக்கமும் இல்ல நீங்க கூட இருக்கிறதே போதும் மாமா..., நீங்க, பாட்டி, நம்ம குழந்தைங்க, அம்மாங்க, பெரிப்பா, பெரி... " என்றவளை இடை நிறுத்தியவன்,

'ஆனா எனக்கு போதாதே..!!' என்றிட

கீர்த்தியின் விழிகளோ பெரிதாக விரிந்து போனது.

'உனக்காக வேண்டாம் எனக்காக கூட பேசமாட்டியா..??' என்றவன்

'ப்ரீத்தி டிசர்வ் எ பெட்டெர் லைப் பாப்பு' என்று கூறவும்,

'மாமா' என்றவளிடம் அதிர்ச்சி

"பிறக்கும் போதே யாரும் குற்றவாளியா பிறக்கிறது இல்லடி இப்போ யோசிச்சி பார்க்கிறப்போ ப்ரீத்தி நிலைமை புரியது எல்லாத்துக்கும் மூலகாரணம் அந்த ** " என்று ஆரம்பித்தவன் முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு,

"அவன்தான் ஆரம்ப புள்ளி என்னதான் உன்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ப்ரீத்தி சொல்லிட்டு வந்திருந்தாலும் அங்க வந்த போது என்னை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லைன்னு என்கிட்டையே சொன்னா..?? வந்ததுல இருந்தே குழந்தை குழந்தைன்னு தான் சொல்லிட்டு இருந்தா இதுலயே தெரியுதே அவ எந்த அளவு காயப்பட்டிருக்கான்னும் அவளோட நோக்கம் பழிவாங்குறதே தானே தவிர என்னை அடையறது இல்லனும்"

கீர்த்தி அமைதியாக அவனை பார்க்க,

நீ சொன்னியே பலநேரம் நம்மை மீறி அந்த சூழல் நம்மளை இழுத்துட்டு போகும் போது எல்லாரும் சூழ்நிலை கைதியா நிற்ப்போம்ன்னு ப்ரீத்தியும் ஒருவகையில சூழ்நிலை கைதி தான்..!! ப்ரீத்திக்கும் நம்மள மாதிரியே எத்தனையோ ஆசை கனவு இருந்திருக்கும் ஆனா அவனால எல்லாமே சிதைஞ்சிடுச்சி அதை தாங்கிக்க முடியாதவளோட கோபம் இலக்கில்லாம எல்லா திசையிலும் திரும்பி எல்லார் மேலயும் பாஞ்சுடிச்சி."

"உனக்கு தெரியுமா பாப்பு எல்லா குழந்தையும் தன்னோட கோபத்தை ஒரே மாதிரி வெளிப்படுத்தாது பாப்பு சிலது அமைதியா இருக்கும், சிலது கத்தி ஆர்பாட்டம் பண்ணும், சிலது சாப்பிட்டாம சண்டித்தனம் பண்ணும், சிலது யார் முன்னாடி இருக்கான்னே தெரியாம கண்மூடித்தனமா காயப்படுத்தும்... இதுல முதல் வகை நீன்னா கடைசி வகை ப்ரீத்தி..!! எந்த குழந்தையும் தப்பானவனா பிறக்கிறது இல்ல பல நேரம் சமூகம், சூழல், அதை மாத்திடுது அப்படி ஒரு சூழ்நிலை கைதி தான் ப்ரீத்தியும் என்ன ரொம்ப மூர்க்கத்தனமா இருந்தா அது தான் பிரச்சனையே..!! யார் சொல்லியும் கேட்க முடியாத நிலைக்கு அவளை தள்ளினதே அவன் தான் ஏதோ ஒரு வகையில அவ தப்புக்கு தண்டனை கிடைச்சிடும் நாமளும் தண்டிக்க வேண்டாமே..??"

"எனக்கு தெரியும் என்னதான் பிடிவாதம், கோபம் இருந்தாலும் அவளும் உன்ன மாதிரியே நமக்கு பண்ணின துரோகத்தை நினைச்சி குற்ற உணர்ச்சியில தவிச்சிட்டு இருப்பா இப்போ நீ பேசினா அது ஓரளவு குறைஞ்சு அவளுக்கு கிடைச்சி இருக்க வாழ்க்கையை ஏத்துக்க வாய்ப்பு உண்டு" என்று மீண்டும் ப்ரீத்திக்கு அழைத்து கொடுக்க,

"மா..மா.. நீங்க..??"
என்று இதழ்கள் துடிக்க அவனை பார்க்க,

சரணோ மெளனமாக அவள் சிகையை வருடி கொடுத்து கொண்டிருந்தான்,


கைபேசியை வாங்கியவள் கண்ணீரை துடைத்து கொண்டு,

சரணின் மார்பில் சாய்ந்து கொண்டு, 'ஹ.. ஹலோ ப்ரீத்தி' என்றிட

மறுபுறம் கீர்த்தியின் குரலை கேட்டவளுக்கு இன்ப அதிர்ச்சியில் பேச்சும் மூச்சும் ஒரு சேர தடைபட்டு போக கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளம் ஆனந்தமாக கரைபுரண்டு ஓடியது.


சுபம்

ஹாய் செல்லகுட்டீஸ்..

இதோ 'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே' இறுதி அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி பதித்துவிட்டேன். கதை முடிந்தது முடிவு உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.இது இவர்களுக்கு திருமணம் ஆகி கிட்டதட்ட நான்கு ஐந்து மாதங்களுக்கு பிறகான நிகழ்வு இதை வைத்து ப்ரீத்தி கதையை மதிப்பிட வேண்டாம். அங்கு இரண்டு மாதங்களே முடிந்துள்ளது. இதுநாள் வரை தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்த்த நன்றிகள்... கதை பிடித்திருந்தால் ஓரிரு வார்த்திகளில் உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

வெள்ளிகிழமை இரவு வரை கதை திரி இருக்கும் அதற்குள் படித்துவிடவும்..

நன்றிகள்..
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top