முயன்றால் முடியும்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"எதையும் முயற்ச்சிக்காமல்
மூலையில் முடங்காதே"


"உன் மூளைக்கு வேலை கொடு
உன் முயற்சிக்கு பலன் கிட்டும்"


"இன்பம் மட்டும் என்றும் இருந்தால்
அதில் நிறைவு இருக்காது
ஒவ்வொரு துன்பத்திற்க்கும்
பின்னால் வரும் இன்பத்தின்
வரவுதான் மறக்க முடியாத வரவாய் இருக்கும்"


"நீ எண்ணிய காரியம் வெற்றியடைய
பல நூறு முறை தோற்றாலும் தவறில்லை"


"உன் முயற்சி உண்மையாய் இருந்தால்
உன் உழைப்பு நேர்மையாய் இருந்தால்
இந்த உலகமும் உன் முன் மண்டியிடும்
உன் முயற்சி வெற்றி அடையும் அன்று"


"ஒவ்வொரு வெற்றி கதைகளின் பின்னும்
விடா முயற்சி இருக்கும்"


"இன்றைய உன் முயற்சி
உன் வெற்றி வாழ்க்கைக்கு நீ எடுக்கும் பயிற்சி"


"இன்றைக்கு நீ சிந்தும் வேர்வை
நாளைய உன் வாழ்வின் செழுமை"


"உன் விடா முயற்சி
விண்ணை முட்டும் புகழைத்தரும்"


"இன்னும் கொஞ்சம் என்று முயற்சித்துப்பார்
இமயமலையும் உனக்கு
சிறு குன்றாய் தான் தெரியும்"


"நீ தோற்றபோது உன்னை தூற்றிய உறவுகள் தான்
உன் வெற்றி வாழ்க்கையின் போது
உன் வீட்டு வாசலில் தவம் கிடப்பார்கள்"



"முயற்சியை மட்டும் மறவாதே"

"முயன்றால் முடியும்
நல்ல பொழுது நம் வாழ்விலும் விடியும்"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top