மலரே மன்னிப்பாயா டீசர் 4

Advertisement

ஓம் நமச்சிவாய..

மலரே மன்னிப்பாயா டீசர் 04


ஹலோ மிஸ்டர் உதய ராகவன். உங்களைத்தான் சார் காது கேட்காதா?.. என்ன நீங்க பாட்டுக்கு வந்தீங்க திட்டினீங்க அடிச்சீங்க அப்புறம் போயிட்டே இருக்கீங்க.. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?.. என்னை அடிக்கிறதுக்கு கை நீட்ட யார் சார் நீங்க?.. இல்லை தெரியாமத்தான் கேக்குறேன் யார் நீங்க?.. பெத்திங்களா? வளர்த்தீங்களா? படிக்க வச்சீங்களா? சாப்பாடு கொடுத்தீங்களா? நல்ல துணிமணி எடுத்து கொடுத்தீங்களா? இல்ல நண்பனா? அண்ணன் தம்பியா? சொந்தமா? பந்தமா? மாமனா? மச்சானா? இதுல யார் நீங்க?.. நான் அடுத்து மானங்கெட்டவனே என்று சொல்றதுக்கு முதல் நீங்க எனக்கு அடிச்சதுக்கு பதில் சொல்லியே ஆகணும்.. நீங்க ப்ரொபஸ்ரா இருங்க காலேஜ் கேட் வரைக்கும்தான் அதெல்லாம்.. நான் ஏதாவது தவறு செஞ்சிருந்தா ப்ரொபசர் என்ற முறையில் நீங்கள் தட்டி கேட்டு இருக்கலாம் அது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.. ஆனா நான் என்ன தவறு செய்தேன்?.. பொங்கல் கொஞ்சம் என் கை விரலில் ஒட்டி இருந்தது அதனால் அதை சப்பி சாப்பிட்டது உங்களுக்கு ஏன் சார் குத்துது?.. தெரியாத்தனமா வந்து உங்க மேல மோதிட்டேன். அதுக்கு நான் சாரி கேட்டு இருப்பேன்.. முதல் என்ன ஏதுன்னு நான் யோசிக்கும் முன்னவே நீங்க கை நீட்டி அடிச்சிட்டீங்க.. இப்ப எனக்கு நீங்க சரியான பதில் சொல்லாட்டி சம்பந்தமே இல்லாமல் நீங்க எனக்கு அடிச்சதுக்கு நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண போறேன்.. எப்படி வசதி இப்ப பதில் சொல்லுங்க.. வாய் திறக்காமல் இருக்கிறீங்க வாயில முட்டை எதுவும் அடைச்சு இருக்கா என்ன? " என்றாள் அடி வாங்கிய அவமானம் ஒரு பக்கம் அவனது திமிர் தனம் கொடுத்த கோவம் ஒரு பக்கம் என்று சம விகித உணர்வில் இடுப்பில் கை வைத்து அவளது துப்பட்டாவை கையில் வைத்து சுழற்றிக்கொண்டு நின்று கேள்வி கேட்டாள் பிறைநிலா..

அவனது பொறுமையும் பறந்ததோ என்னவோ.? " ஏய் என்னடி இப்ப குய்யோ முய்யோனு வந்ததிலிருந்து கத்திகிட்டே இருக்க. என்ன பிரச்சனை உனக்கு? ஆமா அடிச்சேன் தான் ஒரு வயசு பையன் மேல நாகரீகம் இல்லாமல் வந்து இடிக்கிற?. இதுவே நான் உன் மேல இடிச்சுட்டு தெரியாம இடிச்சிட்டேன் என்று சொல்லி சாரி கேட்டா நீ ஏற்றுக் கொள்ளுவியா? சொல்லுடி ஏற்றுக்கொள்ளுவியா? எனக்கு நீ தெரியாம தான் இடிச்சனு தெரியும் அதுவும் நீ ஒரு பொண்ணு அதனால ஒரு அடியோடு விட்டேன்னு சந்தோஷப்பட்டு இடத்தை காலி பண்ணு. வந்துட்டா மாமானா மச்சானானு உயிரை எடுக்க ஏன் புருஷனானு மட்டும் கேட்காம விட்டுட்ட. மானங்கெட்டவனே என்று சொன்னதுக்கே இன்னொன்னு சப்புனு வச்சிருப்பேன் கன்னத்துல ஏதோ பாவம் என்று விட்டுட்டு போறேன்.. நல்லவேளை நீ புருஷன் என்று கேட்கலை உன்னை மாதிரி ஒருத்தி எல்லாம் எனக்கு பொண்டாட்டியா வந்தா நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்ததுடுவேன்.. " இன்று சத்தம் போட்டுவிட்டு அவனது பைக்குக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எடுத்துவிட்டு நண்பனை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் ராகவ்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top