நீ என் காதல் புன்னகை -19(pre final)

Advertisement

malar02

Well-Known Member
Thank you so much friends for your huge support.



:):):):):)


இந்த எபி படிச்சிட்டு இது படிங்க ஃப்ரெண்ட்ஸ்…

ஒரு நாள் ஒரு சோம்பேறியான மாலை பொழுதில் பொழுது போகாம fb பார்த்திட்டு இருந்தேன். கண்ல ஒரு போஸ்ட் பட்டது. அதை போட்ட சகோதரியின் பெயர் அந்த போஸ்ட்டோட முழு சாராம்சமும் மறந்து போயிட்டு. ஒரு விஷயம் மட்டும் அப்படியே மனசுல பதிஞ்சு போயிட்டு.

அது என்னன்னா…

ஆன்டி ஹீரோ அப்படினா கதையோட முதன்மை கதாபாத்திரம் கெட்டது செய்றவன் அப்படினு எடுத்துக் கொள்ள வேண்டாம். கதை வாசிக்கும் போது கெட்டவனா நமக்கு தெரியற முதன்மை கதாபாத்திரம் கதை முடியும் போது அவன் கெட்டவன் இல்லை, நல்லவன் அப்படினு தெரிய வந்தா அவன்தான் ஆன்டி ஹீரோ அப்படினு சொல்லியிருந்தாங்க.

இந்த போஸ்ட் தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன். பல மாதங்களுக்கு முன்னர் பார்த்த போஸ்ட் என்பதால் அந்த சகோதரியின் பெயர் நினைவில் இல்லை. பெயர் தெரியாத அந்த சகோதரிக்கு நன்றிகள்.:love:

உதாரணத்துக்கு, Harry potter படத்துல வர்ற severus snape காதபத்திரதையும் சொல்லியிருந்தாங்க. அவங்க விளக்கம் சரி தவறு அந்த விவாதத்துக்கு எல்லாம் நான் போகவே இல்லை. என்னால அதை ஏற்றுக் கொள்ள முடிந்தது. அதிலும் snape அந்த படத்தோட மெயின் வில்லனை விட அவரோட உடல்மொழி, பார்வை எல்லாம் பார்க்கிறவங்களை ஐயோ என்ன செய்ய போறானோ அப்படினு கிலி ஏற்படுத்துவார். (நாம ரொம்ப ஹாலிவுட் படம் பார்க்கிறது இல்லைங்க. என் மகனுக்காக தமிழ் டப்பிங் படம் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது).

ஏழு பார்ட் இருக்கிற படத்துல இறுதி பார்ட் லதான் snape நல்லவர், Potter க்கு பாதுகாப்பா இருந்திருக்கார் னு தெரிய வரும். அந்த படத்துல என்னை கவர்ந்த காதப்பாத்திரம் னும் சொல்லலாம்.

அந்த படம் பார்க்காதவங்களுக்கு என் அறிவுக்கு எட்டிய உதாரணம் அப்படினா… துள்ளாத மனமும் துள்ளும் படத்துல குட்டி ருக்குக்கு ஆன்டி ஹீரோ. ஆனா படம் பார்க்கிற நமக்கு குட்டி தப்பா தெரிய மாட்டார். இங்க பூவைக்கு மட்டுமில்லாமல் வாசகர்களுக்கும் உதய் தவறு செய்தவனா தெரியறான். (அதிக எதிர்மறை எண்ண ஓட்டத்தை தவிர்க்க உதய்யை முழுக்க கெட்டவனா உருவகம் செய்யாமல் அவன் நல்லவனா கெட்டவனா னு டவுட் வர்ற மாதிரிதான் எழுதியிருந்தேன்).

அப்படியும் கூட உதய் மேல தவறு இருக்காதுன்னு சிலர் சொன்னீங்க…:)

இப்படித்தாங்க உதயசரண் கதாபாத்திரத்தை நான் வடிவமைச்சேன். அவனை கோவக்காரனா அவசரக் காரனா நான் காட்டலைன்னா 11வது எபில நான் சொல்லியிருக்கிறதை நீங்க நம்பியிருக்க மாட்டீங்க.:)

லக்ஷ்மனுக்கு பணம் கொடுத்து பூவையை திருமணம் செய்தது தவறு என நினைத்தால் எனக்கு பெரிய தவறா தெரியவில்லை. ஒவ்வொருவர் பார்வை வேறுபடும்தானே. அவனை விரும்பாத பொண்ணை அப்படி செய்திருந்தால் கண்டிப்பா தவறுதான். பூவைக்கும் இவன் மேல விருப்பம் இருந்தது.

பூவை ஏன் இப்படி நடந்துகிட்டா அப்படினா… அவளை பொறுத்த வரை அவளோட பார்வைல உதய் தவறு செய்திருக்கிறான். அப்படியும் கமலா இறந்து போன போது புகுந்த வீட்டை தாங்கி நின்றாள். இருவரையுமே அவங்க இடத்திலேர்ந்து நியாயம் பிறழாமல் காட்டியதாகவே நினைக்கிறேன்.

யாருக்காகவும் யாரையும் நல்லவன் கெட்டவனா காட்டல. கதை எழுத தொடங்கும் போதே எல்லா கதாப்பாத்திரங்களோட தன்மைகள் நிர்ணயிச்சுட்டுத்தான் எழுத ஆரம்பித்தேன். ஜெயந்தனை திடீர்னு கெட்டவனா காட்டிட்டீங்கன்னும் சொல்லாதீங்க. அவன் ஆரம்பத்திலேர்ந்தே நல்லவன் கிடையாது.

அப்புறம் சிலர் கமெண்ட் ல சந்தேகங்கள் கேள்விகள் கேட்ட போது பதில் சொன்னால் கதை சுவாரஷ்யம் குறைந்து போகக் கூடும் என்பதால் நான் அமைதி காத்தேன். இன்னொரு எபி இருக்கிறது, உங்களுக்கு சந்தேகங்கள் ஏதாவது இருந்தா கமெண்ட் ல சொல்லுங்க. நான் பதில் சொல்றேன்.

இப்பொழுதும் இவர்கள் செய்தது ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால்… அதேதான்… ஒவ்வொருவர் பார்வையும் வித்தியாசமானது. ஒருத்தர் தவறு நினைக்கிறது இன்னொருவருக்கு சரி னு படும் அண்ட் viseversa.

எப்பொழுதும் போல் உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர் நோக்கியிருக்கிறேன்.
:love::love::love:
அன்புடன்
ரேணுகா முத்துக்குமார்.
:love:
 

RIYAA

Well-Known Member
முழு கெட்டவன்னு தோணல ஆனா என்ன கல்யாணத்துக்கு பிறகு அவ வேண்டாம் சொன்னது வச்சு எதாவது பேசுவான்னு நெனச்சேன்... ஆனா படிக்க படிக்க அவன் நல்லவன் ஆனா அவசரக்காரன்னு தெரிஞ்சது... இப்போ தான் பயபுள்ள முழுசா நல்லவன்னு தெரியுது :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top