தித்திக்கும் முத்தங்கள் 32- final

Advertisement

vijiramesh

Active Member
கார்த்திக்கு வாழ்க்கை கட்டாயமாக ஆரம்பித்தாலும் குமரன் நல்லவன்தான் . சூஸ் தி பெஸ்ட் என்று சாய்ஸ் சொல்ல முடியாது . தான் அவசரத்தில் செய்த தப்பைதான் உணர்ந்து அவளிடம், பெத்தவங்களிடமும் சொல்லி விடுகிறானே. அப்புறம் என்ன ? நடைமுறை வாழக்கையை உணர்ந்து கார்த்தி அவனுடன் இணைந்ததே நல்லது. அப்பா தேர்வு செய்த வசந்த் தை விட, இவளை படிக்க வைத்து முன்னேற்ற நினைத்த குமரனே நல்லவன் . எல்லோருமே அவன் செய்த தப்பை மட்டும் பேசினார்களே தவிர அவன் மனதை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.
 

Vatsalaramamoorthy

Well-Known Member
ஒருஅடித்தட்டு மக்களின் வாழ்வாக ஆரம்பித்த கதை சிறிது சிறிதாக குமரன் என்ற உழைப்பாளி அவனின் முன்னேற்றம் என்றும், கார்த்திகா என்ற பெண்ணை முறையற்று மணந்திருந்தாலும் அவளின் படிப்பை முன்னிருத்தி மென்மேலும் அவளை படிக்க தூண்டிவிட்டு அழகாக ஒரு மகனையும் பெற்றுக்கொண்டு வாழ்க்கையை அழகாகிக்கொண்ட ஒரு மனிதனின் கதையை மிக மிக நன்றாக எழுதியிருக்கீங்க கவி....வாழ்த்துக்கள்.
 

vijiramesh

Active Member
கதாசிரியர்தான் ஒரு அத்தியாயத்தில் அழகா சொல்லி இருப்பாங்க .... அன்பும், அனுசரணையும் கிடைக்காத இரு உள்ளங்கள் இணைந்தன.ஒருவர் மற்றவரிடம் அடைக்கலம் கொண்டனர்..என்று. குமரன் ஆரம்பித்த விதம் வேண்டுமானால் தப்பாக இருக்கலாம். ஆனால் அதன் பின் அவன் உண்மையான நேசத்துடன்தானே அவளிடம் பழகினான். எனவே அவனை குற்றம் சொல்வது கூடாது என்பது என் கருத்து. வஸந்தை கல்யாணம் செய்து இருந்தாலுமே கார்த்தி அவள் குணத்தால் நன்கு பொருந்தி இருப்பாள் என்று சொல்ல கூடாது. குமரன் கொடுத்த சுதந்திரம் நிச்சயம் அங்கு அவளுக்கு கிடைத்து இருக்காது. மகாவிடம் பயந்து வாழ்ந்தது போலத்தான் சுயம் மறைத்து அங்கும் இருந்திருக்க வேண்டும்.
 

P.Barathi

Well-Known Member
Kumaran and Karthi has embraced each other and created a good life themselves by their hard work and determination. Nice story and very good narration.:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top