“உற்றத்துணை
என்
உயிர்த்தோழியுடன்
ஊடல்”
“செல்லக்கோபம்
சிலநேரம்
சின்னசண்டை
பலநேரம்
வாக்குவாதம்
வண்டிக்கணக்காய்
இருந்தும்
வருத்தம் தராது
எங்களுக்கு
எதுவும்”
பேசாமல்
அவளை பார்க்காமல்
சிறிய பொழுதுதான்
சென்றிருக்கும்
சிறு சிரிப்போடு
சேர்த்து வைப்பேன்
அவள்
தட்டில்
என் உணவை
சிரித்த முகத்தோடு
என் தோள்
சாய்ந்திடுவாள்
இமையோரம் இருக்கும்
ஈரத்தோடு”
“ஊடல்
அது
காலாவதி ஆகிவிடும்
கள்ளமற்ற
அன்பின் காரணத்தால்”
“கலையாத
ஓவியம்
எங்கள் நட்பு
அதில்
அலங்காரமாய்
அமையும் ஊடல்
ஒவ்வொரு
ஊடலின் பின்னும்
பெருகியது
எங்கள் பாசம்”
“நட்பில்
ஒரு ஊடல்
நாளும் தேவை
நாளொரு வண்ணம்
நெஞ்சில் நிலைத்திடும்
அது நினைவுகளாய்”
“நரை முடியை
தலை தாங்கி
தள்ளாடி
நடந்திடும்
கால்கள்
தடி தாங்கிடும்
போதிலும்
நட்பின் ஊடல்
அதை
நினைத்திடும் வேளையில்
இனிய நிறைவு
உள்ளத்தில்
உண்மை நட்பின்
ஊடலினால்”