Ramya Rajan's Pani Sinthum Sooriyan 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சோனாவுக்கு எதுக்கு இந்த
வேண்டாத வேலை,
ரம்யா டியர்?
ஸ்வர்ணா பெரியம்மாவின் மீது
பாசமாக இருப்பவள், அபர்ணா
அண்ணியாக வரணும்-னு
ஒருநாளும் நினைக்க மாட்டாள்

ராம் பிரகாஷுக்கு அபர்ணாவின்
மீது விருப்பம் இல்லை-ன்னா
ஒரு நஷ்டமுமில்லை
ரொம்பவே நல்லதாகப் போச்சு

பிரகாஷுக்கு, ஸ்வர்ணாவை
அகிலாண்டேஸ்வரி கல்யாணம்
செய்து வைத்ததில் என்ன
கெட்டுப் போச்சு, ரம்யா டியர்?
ராம் பிரகாஷ், அம்மு-ன்னு
இரண்டு குழந்தைகள் பிறந்த
பிறகு பிரகாஷுக்கு, புத்தி புல்
மேயப் போனால், அதுக்கு
அகிலாம்மா பொறுப்பா?
இரண்டு குழந்தைகள் இருக்கும்
ஒருவனை, தன் அழகைக் காட்டி
இரண்டாவது கல்யாணம் செஞ்சு
மனைவி, குழந்தைகளிடமிருந்து
பிரகாஷைப் பிரித்தது, பெரும்
பாவமாக நீலிமாவுக்குத்
தோணவே இல்லையாப்பா?
அழகான ஒரு குடும்பத்தில்
நல்ல பாம்பு மாதிரி புகுந்து
குடியைக் கெடுத்து விட்டாளே?
இதிலே வேற ரொம்பவே
நல்லவளாட்டம் நானா, உன்
பின்னாடி வந்தேன்-னு
பிரகாஷிடம் கேட்கிறாள்?
இந்த நீலிமாவுக்கெல்லாம்
மனசு-ன்னு ஒண்ணு இருக்கா,
ரம்யா ராஜன் டியர்?
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பகிர்வு இந்த பாட்டி அவசரப்பட்டு தப்பு செய்வதால் பிரச்சனைகள் தான் வரும்
 

chitra ganesan

Well-Known Member
என்ன காரணத்தினால் பிரகாஷ் மறுமணம் செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.எப்படி இருந்தாலும் பாதிக்கப்பட்டது ராம் ,அம்மு,அவர்களின் அம்மா.மீண்டும் ராம் அபர்ணாவை விரும்பினால் அந்த நீலிமா செய்தது சரி என்று விடாதா?அபர்ணாவின் அம்மாவிர்கு நீலிமாவை பிடிக்காது என்ற போதிலும் அதே குடும்பத்தில் இருந்து பெண் வந்தால் அது ஸ்வர்ணாவை பாதிக்க செய்யும்.ஆனால் இதில் அபர்ணாவின் தப்பு இல்லைதான்.ஹ்ம்ம்...பார்க்கலாம் என்ன தான் செய்ய போகிறான் ராம்.அவசரப்பட்டு பாட்டி சொல்லும் பெண்ணிற்கு ஓகே சொல்லிவிடுவானா இல்லை தள்ளி போடுவானா?
 

banumathi jayaraman

Well-Known Member
பிரகாஷ் மீதுதான் எனக்கு
கோபம் கோபமா வருது,
ரம்யா ராஜன் டியர்
இரண்டு குழந்தைங்க பிறக்கும்
வரை பிடிச்ச பொண்டாட்டியை
அப்புறம் பிடிக்கலை-ன்னா
என்ன அநியாயம்?
நாசமாப் போறவன், ஸ்வர்ணா
இருக்கும் இடத்துல கூட
இருக்காமல் வெளியேவே
இருக்கிறான்
இல்லை வராமலே இருந்து
விடுகிறான், இந்த பிரகாஷ்?
நீலிமாவிடம் இவனுக்கு
அவ்வளவு பயமா?
 

Sainandhu

Well-Known Member
சூரியனுக்கு இப்ப கோபம் வருது.
எப்படியும் ஒரு நாள் மெல்டாக
போகும் சூரியன். ...
நேகாவோடான திருமணத்திற்கு
சம்மதம் சொல்வானா. ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top