ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
HI, HI, HI குட்டி டீசேரோட ஓடி வந்துட்டேன்.:geek:படிச்சிட்டு சொல்லுங்க

images (23).jpg

செல்வியை பார்த்த போதும் சரி, தாலி கட்டிய போதும் சரி வேற யாரோ என்ற எண்ணம் கொஞ்சமேனும் தோன்றவில்லை. தங்களுக்கு நடந்தது திடீர் திருமணம் என்பதையே செல்வியின் அருகாமையில் மறந்து தான் போனான்.



எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும், சிரித்தவாறே கடந்து செல்பவனுக்கு செல்வியின் மேல் வைத்த காதலும், அருகாமையும் இன்னும் பலம் சேர்க்க தனது எல்லா பிரச்சினைகளும் அவள் அருகில் ஒரு புள்ளியாய் கூட மனதில் இல்லாது மனசு முழுவதும் செல்வியே நிறைந்திருக்க இனி எல்லாம் அவளே என்ற எண்ணத்தோடு இருந்தவனுக்கு எங்கே தவறு நேர்ந்தது என்று கொஞ்சமேனும் புரியவில்லை.



செல்வியின் தம்பிகளும் தன்னுடைய பொறுப்பு என்று நினைத்தவனை, “என் தம்பிகளுக்கு பிறகு தான் நீ” என்பது போல் செல்வி கருத்தடை மாத்திரைகளை உபயோகித்தாள் என்றால்?



அவள் தன்னை நம்பவில்லையா? அவள் என்னிடம் காட்டிய அன்பு பொய்யா? அவள் மனசில் கொஞ்சமேனும் என் மீது காதல் இல்லையா? அவளை நான் கொஞ்சமாலும் பாதிக்கவில்லையா? ஊரிலிருந்து வரும் போதே இதை கொண்டு வந்தாளா? என்று சத்யாவின் எண்ணம் போக மாத்திரை பாட்டிலை வெறித்தவன்



மொழி தெரியா குழைந்தை போல் முழிக்கும் செல்வியிடம் என்ன கேட்பது? ஏன் இதை பாவிக்கிறாய்? என்றா? அல்லது கடந்த மாதங்களாகாக நமக்குள் எந்த உறவும் இல்லையே! வாங்கியது வீண் என்று அந்த பெண்மணியிடம் கொடுத்து விட்டாயா? என்றா?



தங்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு மற்றவர்களுக்கு காட்ட பிடிக்காமல் சத்யா செல்வியிடம் எந்த கேள்வியும் கேக்காது மௌனம் காக்க

Screenshot_20190331-212921_Instagram.jpg

கிராமத்தில் பிறந்து வளந்த கள்ளம் கபடமற்ற செல்விக்கு கோமளவள்ளியின் நடிப்பு புரிய சில கணங்கள் எடுத்தது. கண்கள் கலங்க சத்யாவை பார்க்க அவனின் வெறித்த பார்வையே தன்னை நம்பவில்லை என்று சொல்ல அழுகை முட்டிக்கு கொண்டு வந்தது.



சத்யதேவ் வள்ளி சொன்னது போல் கன்னம் பழுக்க அடித்திருந்தாலோ? நாக்கை புடுங்குறதை போல நல்லாக நாலு கேள்வி கேட்டிருந்தாலோ? இவ்வளவு வலித்திருக்குமா என்பது சந்தேகம் தான்.



ஒரே ஒரு நாள் நடந்த கூடலில் குழந்தை பிறக்கும் என்று தான் கொண்ட ஆவல் என்ன? குழந்தையே வேணாம் என்பது போல் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லும் குற்றச்சாட்டு தான் என்ன?



வள்ளியின் மேல் கொலை வெறியே வர இப்போது எது பேசினாலும் தன்மேல் வந்து விடியும் என்று தோன்ற, கணவனே தன்னை நம்பாத போது என்ன செய்வது, என்ன பேசினாலும் எடுபடாது என்று நன்றாகவே செல்விக்கு புரிந்தது. இவ்வளவு நாளும் ஒருத்தரை ஒருத்தர் சரியாக பார்க்க கூட இல்லாமல் பிரிவிலும் சுகமாய் இருந்தது தான் என்ன? ஏன் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வரை எவ்வளவு சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்த அழகான தருணம் தான் என்ன?



"மாமாக்கு என் மனசு புரியலையா? ஒரு வேல ரோஜாவை விரும்பி இருப்பாங்களோ? மாமா ரொம்ப நல்லவர், திடீரென நம்ம கல்யாணம் நடந்ததால என்ன ஏத்துக்க கிட்டாங்களோ?" என்று செல்வி தனக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் போது தான் ரோஜாவும் மரகதவள்ளியும் உள்ளே வந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
ஐ, ரொம்ப நாளைக்கு அப்புறம்
நான் முதல் ஆளா வந்துட்டேன்-னு
பார்த்தால் என்னோட செல்வி
செல்லாக்குட்டிய இப்படிக்கா
சத்யதேவ்விடம் மாட்டி
விட்டுட்டீங்களே?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், பஸ்மிலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் இவங்களுக்குள்ள
ஒரு ஜில் ஜங் ஜக்கும் நடக்கலை
அதுக்குள்ளே கோமளவள்ளியின்
கோலாட்டத்துல செல்விக்குட்டியைச்
சிக்க வைச்சு செல்வியின் அழகான
வாழ்வில் இப்படி கும்மி அடிக்க
வைச்சுட்டீங்களே, பஸ்மிலா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏங்கண்ணு, தமிழ்ச்செல்வி?
''உங்கொக்காக்காரிதான் இந்த
மாத்திரையை வைட்டமின்
மாத்திரை-ன்னு வாங்கிக்
கொடுத்தாள்

இந்த சூது, வாதெல்லாம்
எனக்குத் தெரியாது
நான் கிராமத்துக்காரி
எனக்கு ஒண்ணும் தெரியாது
சத்து மாத்திரை-ன்னு உங்க அக்கா
சொன்னதால உங்கொம்மாளுக்கும்
கொடுத்தேன்னு நீயி சொல்ல
வேண்டியதுதானே, செல்வி?

''யாமறியேன் பராபரமே''-ன்னு
உங்கூட்டுக்காரன்கிட்ட நீயி
சொல்ல வேண்டியதுதானே
செல்விக் கண்ணு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவ்விய பேசி முடிக்கறத்துக்குள்ள
அந்த ஆலகால விஷம், ஆட்டக்காரி
கோமளா எதுக்கு மவளையும்
கூட்டிக்கிட்டு வர்றாள்?
இன்னும் சத்யனின் வாழ்க்கையில்
குட்டையைக் குழப்பவா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top