உன் கண்ணில் என் விம்பம் teser 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser:geek:

Sana sis Nuwara Eliya photo ஏன் போடலைனு கேட்டிருந்தாங்க நிறைய இருக்கு so teser la கொஞ்சம் அடுத்த UD கொஞ்சம் போடலாம்னு வந்தேன்.:love:

download (2).jpgdownload (3).jpgdownload (4).jpgdownload (5).jpgdownload (6).jpg
download (10).jpgdownload (13).jpgimages (5).jpgimages (13).jpgimages (15).jpg


HAGKALA GARDEN AND NUWARA ELIYA:love:

today UD கு reply நாளை தரேன் கியூட்டிபாய்ஸ்.


யாழிசையின் அருகில் எல்லாவற்றையும் மறந்து சந்தோசமாக ரிஷி இருக்க, அவளை விட்டுச் செல்வதை கூட மறந்திருந்தான். அந்த அளவுக்கு அவனின் வார் பேபி அவனை ஆட்டிப் படைக்க அவள் என்ன சொன்னாலும் செய்ய காத்திருந்தவன் அவள் ரோஜா பூக்களை பார்வையிட ஹக்கல பூந்தோட்டத்துக்கு அழைத்து செல்லுமாறு சொல்லவும். மூணு நாட்களாக நாளை, நாளை என்று சொல்லிக் கொண்டு நாளை கடத்த, நாலாவது நாளே அவனிடம் கெஞ்சிக், கொஞ்சி அவனை கிளப்பி இருந்தாள் யாழிசை.


பூந்தோட்டத்தில் இருந்த வித விதமான பூக்களை கண்களை அகல விரித்து ரசித்தவள், புகைப்படமும் எடுத்துக் கொண்டு,





"என்னங்க இங்க இருக்குறவங்க கிட்ட கேட்டு இந்த மஞ்ச ரோஜா செடி ஒண்ணு மட்டும் கேட்டு தாங்க வீட்டுல நாட்டனும்" என்று சிணுங்க





"அதெல்லாம் தர மாட்டாங்க"





அப்போ யாராவது வாரங்களானு பாருங்க. ஒரு கிளையை மெதுவா ஒடச்சிக்கிறேன்" என்றவள் செடியிடம் நெருங்க





"தூக்கி உள்ள வச்சிடுவாங்கடி. நா வேற வாங்கித்தாரேன்"





"இல்ல, இல்ல எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. இதுதான் வேணும்" கண்களை சுருக்கி கெஞ்ச





"உங்க ஊர் காலநிலைக்கு வளராதுடி. செத்துடும்"





"பொய் சொல்லுறீங்க" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.





அவளின் சிறுபிள்ளை போன்ற செயல்களினாலையே! ரிஷியை கட்டிப்போட்டு வைத்திருக்க, சிரித்தவாறே "சத்தியமா. வேணும்னா அங்க ஒரு செக்யூரிட்டி இருக்காரே அவர் கிட்ட கேக்கலாமா?"





அவரிடம் போய் விசாரிக்க அவரும் செழுமையாக வளராததுக்கான காரணங்களை சொல்ல தலையசைத்தவாறே கேட்டுக் கொண்டாள் யாழிசை.


EID MUBARAK
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top