இதயத்தில் காதல் பூத்தது உன்னால் intro & teaser

mila

Writers Team
Tamil Novel Writer
#1
புதுக்கதையோட வந்துட்டேன். வாசனின் வாசுகி முடிஞ்சா பிறகுதான் ஆரம்பிக்க போறேன். today mam Birthday so intro கொடுக்கலாம்னு வந்தேன்.:love::love:

download (1).jpg கிருஷ்ணா


download (2).jpg அர்ஜுன்


Nikhila-Vimal-Stills-At-Meda-Meeda-Abbayi-Movie-Pre-Release-Event-07.jpg அகல்விழி


download.jpg மாலினி

கதைல ரெண்டு ஜோடி. ஒரு ஜோடி சேர போறாங்க ஒரு ஜோடி பிரிய போறாங்க. அது எந்த ஜோடின்னு கதையை படிச்சிட்டுதான் தெரிஞ்சிக்கணும்

பப்ஜிய தூக்கிட்டாங்க, எனக்கு candy crush தவிர வேற எந்த game மும் தெரியாது. சோ அட்ஜெஸ்ட் கரோ...
ஹாய் மாலினி ஐம் கிருஷ்ணன்

நான் இதை சொல்லியே ஆகணும்

நீ அவ்வளவு அழகு

இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு

இவ்வளவு அழகை பார்த்திருக்கமாட்டாங்கஐம் இன் லவ் வித் யுமுன்தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக

நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக

உன்னை நான் பாராமல்

எங்கு தான் போனேனோ

நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா

ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன

ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன

ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்னயாரோ ஒருவன் அவளை நெருங்கி வந்து முத்தமிடுவதை போல் கனவு. திடுக்கிட்டு விழிக்கவும். அலாரம் அடிக்கவும் சரியாக இருந்தது.கண்களை திறந்தவள் அதை அனைத்து விட்டு. முத்தமிட்டவனின் முகத்தை நியாபகப்படுத்த முயற்சிக்க அந்தோ பரிதாபம் அவன் முகம் கனவில் வரவே இல்லை. கனவில் கூட அவளுக்கு முதுகு காட்டி தானே! நின்றிருந்தான்.பெருமூச்சு விட்டுக்கொண்டவள் தான் திருமணம் செய்யப்போகும் க்ரிஷ்தான் கனவில் வந்தானா? என்று நினைக்க, கண்டிப்பாக, அவன் தனக்காக இவ்வாறெல்லாம் பாட மாட்டான் என்று நினைக்கும் பொழுது சிரிப்பாக இருந்தது.அந்த கிருஷ்ணனை மனதில் நிறுத்த இந்த மாலனி ஆல்வேஸ் கிருஷ்ணா புராணம் தான். ரிங் டோன்ல இருந்து, அலாரம் வரை, ஏன் கும்புடுற கடவுள் கூட க்ரிஷ்ணாதான் என்றால் பாருங்களேன்."ஹாய் என் பெயர் மாலனி. மாலனி கோத்தாண்டம். வயது எல்லாம் நல்ல வயசுதாங்க. பாக்குறதுக்கு தேவதை மாதிரி இருக்கேனு அப்பா சொல்வாரு. அவர் கண்ணுக்கு அப்படித்தான் தெரிவேன். ஏனென்றால் நான் அவருக்கு ஒரே பொண்ணு. அவர் நேசிச்ச மூணு பெண்கள்ல நானும் ஒருத்தி. அடுத்த ரெண்டு பேரும் யாருன்னு யோசிக்கிறீர்களா? ஒன்னு அவரை பெத்த ஆத்தா. அடுத்தது என்ன பெத்த அம்மா. நீங்க என்ன நெனச்சீங்க?

********************************************************************

"டேய் உனக்கு வெக்கமே இல்லையா டா? காலங்காத்தால பல்லு கூட விளக்காம போன்ல கேம் விளையாடி கிட்டு இருக்க?" அண்ணன் அருள் தம்பியை வசை பாட சாப்பாட்டு மேசைக்கு வந்துக்கொண்டிருந்த நம் முதல்வர் கனகவேல் ராஜாவின் காதில் விழுந்ததுதான் வினையாகிப்போனது."ஏழு கழுத வயசாகுது. இன்னும் குழந்தை மாதிரி கேம் விளையாடிகிட்டு. எல்லாம் உங்க அம்மாவ சொல்லணும்" சுப்பிரபாதம் போல் தினமும் காலையிலையே! இந்த வசனத்தை பேச வில்லையென்றால் அந்த நாளே விடியாததுபோல் இருக்கும்.தந்தை திட்ட ஆரம்பிக்கவும் தலையை தூக்காமல் "உங்களுக்கு பப்ஜிய பத்தி என்ன தெரியும்? சும்மா சைரன் வச்ச கார்ல ஏறி உக்காந்து போனோமா? வந்தோமான்னு நினைச்சீங்களா?"எதோ அவர் பார்க்கிக்கு செல்வது போல் கிருஷ்ணா கூற கடுப்பானவர் "ஏன் ப்ளூவேல் விளையாடேன்""நான் மேமோவ்வே விளையாடுவேன். அவ என் கூட ரூம் போட வருவாளா?" இவன் ஒரு அர்த்தத்தில் சொல்ல அவர் காதில் நரசமாக விழுந்தது."இவன்கிட்ட மனிசன் பேசுவானா?" முகம் கோபத்தை தத்தெடுக்க "ஒரு அப்பன்கிட்ட பேசுற பேச்சா இது" அவனை கண்ட மேனிக்கு வசை பாடியவாறே மனைவிக்கு அர்ச்சனை செய்ய தேடிச் சென்றார்."அப்படி என்ன நான் தப்பா பேசிட்டேனு இவர் கோபமா போறாரு? லுடோல ரூம் போடுறதுல என்ன தப்பு" என்று அண்ணனை கேட்க, தலையில் அடித்துக் கொண்டான் அவன்.
 
Last edited:
#3
:D :p :D
உங்களுடைய "இதயத்தில்
காதல் பூத்தது உன்னால்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Gomathianand

Well-Known Member
#10
அருமையான டீஸர் மிலா டியர்:love:
மிலா டியர்க்கு இன்னும் தமிழ் பிடிபடலை சில தவறுகள்
1 புதுக்கத்தையோட வந்துட்டேன்
2 பாப்ஜி
நீங்க எப்படி எழுதினாலும் நாங்க கரக்டா படிப்போம்(y)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement