E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

arunavijayan

Well-Known Member
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..

இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..

அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..

கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..


நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..

இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..

Beautifully expressed emotions
images (8).jpg
 

murugesanlaxmi

Well-Known Member
மூன்று கவிதைகள்


முட்டி முட்டிப்
பால் குடிக்கின்றன

நீலக் குழல் விளக்கில்

விட்டில் பூச்சிகள்


உள்ளே


மழைக்குப் பயந்து

அறைக்குள் ஆட்டம்

போட்டன துவைத்த துணிகள்


விடலைகள்


துள்ளித் துவண்டு

தென்றல் கடக்க

விஸில் அடித்தன

மூங்கில் மரங்கள்


-
 

arunavijayan

Well-Known Member
ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா

என் வாரத்தையை அன்பே
சிறையில் நான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் மருகினேன்

நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில் உனை மயக்க ஏங்கினேனே

தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிடச் சென்றேன்
பிறகும் தாகத்தில் நின்றேன்

பேசும் பொழுதே சில வாரத்தை தடுமாறும்
அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அடங்குவதில்லை
 

ThangaMalar

Well-Known Member
நீங்க முடிவே பண்ணிட்டீங்களா...
எவ்வளவு அவமானம் கடி வாங்கி காய்ச்சல் வருவது....அது அவனை விரும்பிய பெண்ணுக்கு தெரியவருவது:(
அவள் அதை அன்புக்கடி என்று தவறாக புரிந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கு, இல்லையா...
 

arunavijayan

Well-Known Member
Awesome episode Malli mam...
அவங்க வாழ்க்கையின் காதலில் அடி எடுத்து வைக்க இந்த அடி கண்டிப்பாக தேவை... :p

This is for eswar...

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி...


This is for varshu...

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே...
உயிரிலே நினைவுகள் தளும்புதே...
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே...
முத்தமிட்ட உதடுகள் உளறுதே...
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்...
என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்...
காதல் சிறகானது இன்று சருகானது... என் உள் நெஞ்சம் உடைகின்றது..
உன் பாதை எது என் பயணம் அது,பனித்திரை ஒன்று மறைக்கின்றது...
images (9).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே

கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்
மிக அருமையான கவிதை, மீரா டியர்
 

arunavijayan

Well-Known Member
வேம்பயர் ஆனாலும் பரவாயில்லை பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்னு கேட்டீயே... அங்கே தான் மாப்ள நீ பெவிகால் போட்டு நிக்கற. ..:D:D:D
இருந்தாலும் உன் தியாகத்துக்கு எல்லை இல்லயா?
சித்தி சீரியல் ராதிகாவையே மிஞ்சிட்டே மாப்ள...கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணறது தான் பாக்கி...:D:D:D

நீ தோசை சுட்ட..அவ சாப்பிட்ட அதே வாயால சுட்டா...:(:(
உப்பிட்டவரை உள்ளளவும் நினைச்ச வர்ஷ் தி கிரேட். :pஅப்படியாவது கோபம் அடங்கினா போதும் செல்லம்...:cool:
நல்ல காலம் மல்லி பேவரைட் காரசட்னி இல்ல..அதே எச்சில் கையில் தோள தொட்டும் இருந்தா உச்சிமண்ட முடி நட்டுட்டு இருக்கும். ..:p:D:D

இத்தனை வருட மன பாரம் இப்ப தான் வர்ஷ்க்கு வெளி வந்தது. ..ரணகளம் கவுண்டவுன் ஸ்டார்ட். ..:(

ஏன் மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு க்கு தானே படீச்சீங்க..பின்ன அந்த வேல பாக்காம பிஎச்டி பண்ணீறீங்க...:mad::mad:
ஹாஸ்டல் ஏன் போனா..டைவர்ஸ் எதுக்கு.
ஏன்தேவையில்லாத ஆராய்ச்சி. .
ஏன் இந்த வெட்டி வேலை. .
மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு.. நோ டாக்டரேட் ஓகே...:oops::mad:
images (7).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top