Saththamindri Muththamidu 3

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

இந்த திருவிற்க்கு இருக்கும் திமிர் சொல்லி மாளாது ,கையில் ஒரு பெண்ணையும் பெற்று வைத்துக்கொண்டு அப்பா தன்வாழ்கையை முடித்துவைத்துவிட்டாரா,சரி அப்பா முடித்த வைத்த வாழ்கைதான்,அப்படி என்றால் எதற்காக பிள்ளையை பெற்று வைத்திருக்கவேண்டும்,இந்த வீட்டில் நீ ஒரு தீவு நானொரு தீவு என்று இருந்திருக்கவேண்டியதுதானே,திருமணம் திருமண வாழ்க்கை குழந்தை என்று எல்லாமே பிடிக்கின்றதோ இல்லையோ எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு ,அப்பா வாழ்க்கையை முடித்துவைத்துவிட்டாராம்,துளசி சாதரண பெண்ணாகத்தான் தெரிகின்றார், எல்லா உணர்வுகளும் இருக்கின்றது அப்படியிருந்தும் எதற்காக இந்த மௌனம்,மேகநாதனாவது மருமகளை புரிந்து வைத்திருக்கின்றாரே,கூட்டுக்குடுபங்களில் இப்படி சலசலப்பு ஏற்படுவது இயல்புதான்,அதற்காக இல்லாத வீட்டிலிருந்து வந்த பெண்ணென்பதற்காக இப்படி மட்டம் தட்டக்கூடாது,அது சரி புருசனே மதிக்கலையாம் இதில் மற்றவர்கள் மதித்துவிட்டாலும்.

நன்றி

பி.கு:-திருவுக்கு எனது வன்மையான கண்டனைத்தை தெரிவித்துவிடுங்கள்.
 

Suvitha

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ?
நான் என்னன்னு சொல்வேன்?
ஏது-ன்னு சொல்வேன்?
இந்த "சத்தமின்றி முத்தமிடு"
நாவல், ரொம்ப ரொம்பவே,
சூப்பர் சூப்பரா இருக்கே
இரண்டு பார்ட் கொடுத்தும்
பத்தலையே?
இன்னும் வேணும்,
இன்னும் படிக்கணும்னு
ஆசை, ஆசையா இருக்கே?
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
எனக்கு கையும் ஓடல,
காலும் ஓடல,
மனசெல்லாம் ரொம்பவே
சந்தோஷமாக இருக்கே
நான் மட்டும் இப்போ
ஷெண்பகப்பாண்டியனா,
இருந்திருந்தா,
என்னோட மல்லிகா
செல்லத்துக்கு, என்ன
பரிசுகளை வேணும்னாலும்
வாரி, வாரி கொடுத்திருப்பேனே?
(தருமி ஸ்டைலில் படிக்கவும்)
ஹா...ஹா...ஹா
 
S

semao

Guest
Wow super nice

Ellorum score pantranga as a charecter ah
Kan munnadi appadiye oru family fight kondu vanthinga malli

Nice

எப்போதும் துளசிகளுக்கு எங்குமே கிடைப்பதில்லை மரியாதை
சோபனாக்களே பெறுகிறார்கள்
 

Adhirith

Well-Known Member

ஜே .....ஜே....என்று இருக்கும் குடும்பம்.......
கூட்டுக் குடும்பம்.....
காயம் பட்ட குழந்தையைப் பற்றிக் கவலைப்பட
வேண்டிய நேரத்தில் ஒரு சின்ன விஷயத்துக்காக
பிரச்சனை செய்யும் குடும்பத்தினர்...
அதை விட , தன் பொண்ணு ,தன் பொண்ணு
என்று சொல்லும் திரு, தன் ஆளுமையை
மட்டும் நிருப்பிக்கிறான்....
disgusting people.....Thiru too....:mad:


பெண்ணைப் பற்றிய கவலை துளசிக்கு மட்டுமே...
தனி ஆளாக.......


துளசியின் நிமிர்வு இந்த பாடல் வரிகளை ஞாபகப் படுத்துகிறது...

“ ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது
காற்றடித்தால் சாய்வதில்லை,கணிந்த மனம் வீழ்வதில்லை...
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது....”


Wish and Hope to see a COOL and COMPOSED Thulasi
till the end of the story.....:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top