Vizhiye Kadhai Solvayo-1

Ksmanya

Writers Team
Tamil Novel Writer
#1
ஸ்ரீவாணி

அன்று காலை ஆபிஸின் உள்ளே நுழைந்த எனக்கு ஒருகணம் தவறான முகவரிக்கு வந்துவிட்டோமோ என தோன்றியது.அப்படி மாறி இருந்தது அது.கண்ணாடி கதவுகளும் டைல்ஸ் பளபளத்த தரையும் குஷன் நாற்காலிகளும் தேவலோகமென காட்சி அளித்தது.முதலில் தேவநாதன் அண்ட் சன்ஸ் ஆக இருந்த அது தனா எண்டர்பிரைசஸால் டேக் ஓவர் ஆன பின் அங்கு வேலை பார்த்தவர் அனைவருக்கும் ஆல்ட்ரேஷன் வேலைகளுக்காக ஒரு மாதம் சம்பளத்தோடு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அன்று விடுமுறை முடிந்து வந்த எனக்கு ஆபிஸ் புதிதாக கண்டதில் வியப்பேதுமில்லை.

நிதானமாக என் இடத்தை கண்டறிந்த நான் அங்கே சென்று என் இருப்பிடத்தில் அமர்ந்தேன்.காத்திருந்தார் போல என் தோழி சவிதா என்னருகில் வந்தாள்.

"ஸ்ரீ!பாத்தியா ஆபிஸ்ஸ! வெளிநாட்டு ஆபிஸ் தோத்துடும்.சூப்பரா இருக்குல்ல?!பழைய நாயர் கடை மாதிரி இருந்தது இப்போ ஃபைஸ்டார் ஹோட்டல் மாதிரி மாறிடுச்சு.எல்லா புது பாஸோட ஐடியா.இனிமே எல்லாத்துலயும் புதுமை தானாம்.எல்லாரும் பேசிக்கறாங்க"என்றாள் படபடவென பொறிந்தாள்.

அவள் பேச்சுக்கு மெலிதாக சிரித்த நான்,

"வேலைலயும் அவ்வளவே கண்டிப்பா இருப்பார் பார்...வேலை நேரத்துல இப்படி வம்படிச்சா சீட்ட கிழிச்சாலும் கிழிச்சிடுவார்.ஜாக்கிரதையா இரு!"என்றேன்.

"செஞ்சாலும் செய்வாறா இருக்கும்.நா போறேன் பா என் சீட்டுக்கு"என பயந்த குரலில் சொன்ன சவிதா தன் சீட்டுக்கு சென்றாள்.

புது பாஸ் எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன?நம் வேலையை நாம் சரியாக செய்தால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது என் எண்ணம்.

ஆபிஸ் கை மாறுவது நாளை என்பதால் அன்று முழுவதும் எல்லா பொருட்களையும் சரியான இடத்தில் வைப்பதிலேயே கழிந்தது.சாதாரணமாக நான்கு மணிக்கு முடியும் வேலை நேரம் இன்றைய அதிக வேலையால் ஐந்து வரைக்குதான் முடிந்தது.வேகமாக வெளியே வந்து பஸ் நிலையத்தை நோக்கி ஓடி கிடைத்த பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.அன்று ஏனோ அதுவும் ஒவ்வொரு நிலையத்திலும் நின்று நின்று சென்றது.கடைசியில் நான் இறங்கும் நிலையத்தில் அவசரமாக இறங்கி என் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றேன்.வளைவான கேட்டை திறந்து மூச்சு வாங்க உள்ளே நுழைந்த நான் எதற்கு அப்படி பயந்தேனோ அதே அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

என் கண்ணின் கருமணியான என் மகன் வம்சி கோபத்தில் குதித்துக் கொண்டிருந்தான்.அவனின் தாத்தா நீலகண்டன்(என் தந்தை) கையிலிருந்த அவனின் ரிமோட் கன்ட்ரோல் காரையும் அவன் பார்க்கவில்லை.அவன் பாட்டி சகுந்தலா (என் தாய்) அவர் கையிலிருந்த அவனுக்கு பிடித்த குலோப் ஜாமுனையும் அவன் தொட்டிருக்கவில்லை.அவன் செல்ல சித்தி ஸ்ரீலக்ஷ்மி(என் தங்கை) அவனுக்கென்று தந்த மில்கி பாரும் ஒரு மூலையில் கேட்பாரற்று கிடந்தது.நான் வந்ததைப் பார்த்த லச்சி ,

"இதோ அக்கா வந்துட்டாளே!"என்றாள்.அவர்கள் அனைவரும் அப்பாடா என பெருமூச்சு விட்டனர்.ஹேண்ட் பேக்கை ஓரமாக வைத்த நான் அவனருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தேன்.அவன் கைகளை இரண்டையும் பற்றியபடி,

"என் பட்டு செல்லம் ஏன் இப்படி கோவமா இருக்கான்? உன் கோவத்த பார்த்து எல்லாரும் பயந்துட்டாங்களே! என்னடா பட்டு எதுக்கு கோவம்?"என்றேன் கொஞ்சும் குரலில்.

அதில் சிறிது தணிந்த அவன்,

"இன்னிக்கி என்ன டே?"என்றான்.

"டே...டே...ஆ....இன்னிக்கு ட்யூஸ் டே... அதுக்கென்ன?"என்றேன் சாதாரணமாக.

அதில் கடுப்பான அவன்,

"என்னவா!!! இன்னிக்கி ஸ்கூல் முடிஞ்சதும் ஐஸ்கிரீம் பார்லர் போலாம்னு சொன்னீங்க தானே!"

ஆபிஸ் மாற்ற கலாட்டாவில் அதைப் பற்றி நான் மறந்தே விட்டேன்.அதை சொல்லாமல்,

"அதுகென்னடா பட்டு! அம்மா இப்பவே ஃபிரெஷ் ஆயிட்டு வரேன்.நா நீ லச்சி எல்லாரும் போலாம்.சரியா?"என்றவாறு பத்து நிமிடங்களில் கிளம்பி அவனுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அவனை சமாதானம் செய்தேன்.

இரவு வம்சியை தூங்க வைத்து நான் உடம்பு கழுவி நைட்டியில் கண்ணாடி முன்பு அமர்ந்து இதுவரை முள்ளாக குத்திய கொண்டையை நிதானமாக அவிழ்த்தேன்.என் இடைவரை நீண்ட கூந்தலை மென்மையாக தடவினேன்.நாள் முழுவதும் கட்டியே இருந்ததால் தலை லேசாக வலித்தது.மூக்கு கண்ணாடியும் இல்லாததால் பழைய ஸ்ரீவாணியாக தெரிந்தேன்.ஆம் இரவுதான் என் உண்மையான தோற்றத்தை பார்க்க முடியும்.பகல் முழுவதும் முகமூடியின் பின்னேயே மறைந்திருக்கும் விதியை நொந்தேன்.அதிகமான வேலையால் படுத்தவுடன் என் கண்கள் தாமாக மூடிக் கொண்டன.

காலை அனைவரும் புதிதாக வரும் எம்டியை வரவேற்க வெளியே நின்றிருந்தோம்.பத்து மணிக்கு சரியாக புத்தம் புதிதான வெளிநாட்டு கார் ஆபிஸ் வளாகத்தில் வந்து நின்றது.முதலில் இறங்கிய பாடி காட் காரின் பின் கதவை திறந்து விட்டான்.அதிலிருந்து விலையுயர்ந்த கோட் சூட்டில் முப்பது வயது மதிக்கத்தக்க கம்பீரமான ஒருவன் இறங்கினான்.அவன் கூர்மையான பார்வையே எல்லோரையும் பயப்பட வைத்தது.அவனுக்கு போட வந்த மாலையைத் தடுத்து அதை தன் பாடி காடிடம் கொடுத்தான்.வேகமாக பழைய எம்டியோடு பேசியபடி உள்ளே சென்று விட்டான்.

'இந்த புது எம்.டி யை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே! ரொம்ப தெரிஞ்ச மாறி தோணுதே! ஏன் இப்படி?!'என்றெண்ணிய போது யாரோ என் தோளை தட்டியதில் சுயநினைவுக்கு வந்த நான் அது யார் என்று திரும்பி பார்த்தேன்.அப்படி தட்டியது சவிதா தான்.

"என்ன ஸ்ரீ! அப்படி பிரம்மிச்சு போய் நிக்கறே?!"என்றாள் அவள்.

நான் எண்ணியதை சொல்ல முடியாமல்,

"ஒண்ணுமில்லயே!சும்மா ஏதோ யோசனை.அவ்ளோதான் வா உள்ளே போலாம்"என்றபடி அவளை அழைத்துக் கொண்டு போனேன்.
 
#3
:D :p :D
உங்களுடைய "விழியே
கதை சொல்வாயோ"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
Ksmanya டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement