Viral Theendidu Uyirae - intro

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்டி இருக்கீங்க?அடுத்த நாவலுடன் வந்துவிட்டேன்.

விரல் தீண்டிடு உயிரே

நேரா இன்ட்ரோவுக்கே போய்டலாம். :)


“இப்ப எதுக்கு இவங்கள இங்க கூட்டிட்டு வந்த அழகரு?...” கோபமாய் முனீஸ்வரன் கேட்க,

“இங்க பாருங்கத்தான். எங்களுக்கு நீங்களும் முக்கியம். பெரியத்தானும் முக்கியம் ஒருத்தர தள்ளி இன்னொருத்தர விசேஷத்துக்கு கூப்பிட்டா நல்லாவா இருக்கும்? நீங்களே சொல்லுங்க. ரெண்டு பேருமே நம்ம குடும்பத்துக்கு பெரியமனுஷங்க. முன்ன நின்னு நடத்திக்குடுக்கவேண்டிய பொறுப்புல இருந்துட்டு சின்னபிள்ளைங்க மாதிரி...”

“ராதா பேசாம இரு, நான் அண்ணன்கிட்ட பேசிக்கறேன். வார்த்தைகளை விடாத...” கம்பன் தன் மனைவியை எச்சரிக்க,

“வார்த்தைகளை விடலைங்க. சின்னத்தானுக்கு புரியிற மாதிரி எடுத்து சொல்றேன். அவருக்கு தெரியாதா என்ன?...” என ராதா முனீஸ்வரனை பார்க்க,

“என்ன ராதா என்னையே மடக்க பார்க்கறியா?...” ராதாவின் எண்ணத்தை கண்டுகொண்டவராக கேட்க ராதாவும் அவரை பார்த்து சிரித்தார்.

“உங்களை மடக்க முடியுமா? எல்லாம் தெரிஞ்சவருக்கு சொந்த தம்பி மக கல்யாணத்துக்கு வராம இருந்தா இந்த ஊர் என்ன பேசும்னு தெரியாதா என்ன?...”

சொந்த தம்பி மகள் இல்லை. முனீஸ்வரனின் சித்தப்பா மகன் கம்பனின் மகள். ஆனாலும் சொந்த மகளை போலத்தான் அன்பும்,பாசமும் அப்பெண்ணிடத்தில்.

முனீஸ்வரன் என்ன சொல்லுவார் என்று முகம் பார்த்து அவர்கள் அமர்ந்திருக்க பார்கவி கெஞ்சலாய் கணவனை பார்த்தார்

----------------------------------------------------------------------------------------

“திமிர்டா. ஒரு மனுஷனுக்கு இத்தனை திமிர், அகம்பாவம் இருக்க கூடாது. உனக்கு பேர்ல தான் வசியம் இருக்கே தவிர வேற எந்த பிரயோஜனமும் இல்லை...” சலிப்பாய் அம்பிகா சொல்ல,

“இங்க யாரையாச்சும் வசியம் செய்யனுமா சொல்லுங்க செஞ்சிருவோம்...” குறும்பாய் பேசினான் மகன். அவன் வசீகரன்.

“செஞ்சிட்டாலும். ஏழு கழுதை வயசாகுது. கல்யாணம் பன்ற மாதிரி தெரியலை. உனக்கு என்னைக்கு கல்யாணம் செஞ்சு பேரன் பேத்தி வந்து நாங்க அறுவதாம் கல்யாணம் செய்யறது?...” என்றவரின் அலுப்பில் அட்டகாசமாய் சிரித்தான்.

“என்ன பன்றது எந்த பொண்ணும் என்னை வசீகரிக்கலை. அப்படி ஒரு பொண்ணு இருந்தா சொல்லுங்க உடனே பொண்டாட்டி போஸ்ட் குடுத்திடலாம். உங்க செகெண்ட் மேரேஜ்க்காக நான் மேரேஜ் பண்ணிக்கனும்னு நினைக்கிறது பேராசை...”

தாயிடம் சத்தமின்றி வாதம் புரிந்துகொண்டிருந்தவன் அந்த திருமண மண்டபத்தை பார்வையால் அளந்துகொண்டிருந்தான்.

சுற்றி வந்துகொண்டிருந்தவனின் பார்வை ஓரிடத்தில் நிற்க பச்சை பட்டுடுத்திய தாவணி பெண் அவனின் கண்களை கவர்ந்தாள். பார்வையை சுவாரசியமாக்கியவன் அவளையே பார்வையால் தொடர அவள் மணமேடை பக்கத்தில் குடும்பத்துடன் சென்று நின்றாள்.

-----------------------------------------------------------------------

“உங்கப்பனுக்கு கொஞ்சமாவது அறிவிருந்தா இப்படி வயசுப்பொண்ண பரிகாரம் பண்ணவைக்கிறேன்னு ஊர் ஊரா கூட்டிட்டு சுத்துவாரா? இடியட்...” என்ற வசீகரனின் கத்தலில் முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது சந்தியாவின் விழிகளில் இருந்து.

“எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசாதீங்க. இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க மட்டும் பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா எங்கக்காவுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?...” அவனிடம் மெல்லிய குரலில் சண்டைக்கு பாய்பவள் போல பேசினால் சந்நிதி.

அவளின் விழிகளிலுமே நீர்ப்படலம் தான். ஆனாலும் வசீகரனை அப்படியே விட மனமில்லை. அவளின் கேள்வியில் உதட்டை கடித்தபடி இருவரையும் பார்த்தான்.

சந்தியா அத்தனை அழகு வாய்த்த பெண். இப்படி ஒரு தகப்பனின் மகளாக பிறந்து இத்தனை துன்பங்களை சுமக்கிறாள்.

“இங்க பாரு சந்தியா மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் செஞ்சுக்கறது தப்பில்லை. அதை ஏன் உங்கப்பா கொலை குற்றமா பார்க்கறார்? அப்போ உன் மேல நம்பிக்கை இல்லைன்னு தானே அர்த்தம்?...” கவலையுடன் அவளிடம் பேச,

“போற இடமெல்லாம் கூட கூட எங்க பின்னால நீங்க வராம இருந்தாலே போதும். ப்ளீஸ் விட்ருங்க எங்க குடும்பத்தை...” என சொல்லியவள்,,

“ப்ச், நிதி வாடா போகலாம்...” வார்த்தைக்கு வலிக்குமோ என்பதை போல அவள் பேசிவிட்டு வசீகரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்துவிட அவனுக்கு தான் ஆயாசமாக இருந்தது.

----------------------------------------------------------

“தயவு செஞ்சு விட்டுடுங்க என்னை. நான் என்ன பொம்மையா? என்னோட உணர்வுகளை தூண்டிவிட்டு ஏன் அதில் குளிர்காய பார்க்கறீங்க? என்னை வச்சு நீங்க உங்க ஆசையை நிறைவேத்த நினைக்கறீங்க. என்னோட மனசு என்னன்னு நீங்களும் நினைக்கலை. என் அப்பாவும் நினைக்கலை...”

“உங்க ரெண்டு பேரோட ஈகோவுக்கு நான் பலியா? உங்களுக்கு பிடிச்சதுன்னு கேட்டீங்க. இல்லைன்னதும் வேண்டாம்னு தூக்கி போட்டீங்க. இப்ப திரும்பவும் வந்து...” முகத்தை மூடிக்கொண்டு அழுதவள்,

“இப்ப இந்த தாலி எதுக்கு கட்டினீங்க? உங்க சவால்ல ஜெயிச்சதுக்காகவா? இல்லை உங்க ஈகோ எந்த விதத்துலையும் பாதிக்கபடலைன்னதும் போனா போகுதுன்னு கட்டினதா? என்ன மனுஷன் நீங்க?...” கோபத்திலும் ஆத்திரத்திலும் வசீகரனை அந்த வாங்கு வாங்க,

“நீ இவ்வளவு பேசுவியா? நைஸ். ஐ லைக் இட். ஹ்ம்ம், உன்னோட ஒபீனியனை நான் மாத்த விரும்பலை. அப்படியே வச்சுக்கோ. நோ பிராப்ளம். என்ன வேணும்னாலும் பேசிக்கோ. ஆனா இந்த வீட்டுக்குள்ள இந்த நாலு சுவத்துக்குள்ள மட்டும்...”

“வெளில பேசினா? என்ன பண்ணிட முடியும் உங்களால?...” ஆவேசமாய் கேட்டவளை நெருங்கியவன் அவளின் இதழ்களை பார்வையால் முற்றுகையிட முகம் திருப்பிக்கொண்டாள்.

“பேசித்தான் பாரேன். என்ன செய்வேன்னு சொல்லவெல்லாம் மாட்டேன். செஞ்சு காட்டுவேன். நான் சொல்லி செஞ்சது உன் விஷயத்துல மட்டும் தான்...” என பேசியவனின் குரலில் கொஞ்சமும் இளக்கம் இல்லை.

--------------------------------------------------

கதையின் பதிவுகள் திங்கள், புதன் வெள்ளி என வாரம் மூன்று நாட்கள் பதிவிடுகிறேன்.

முந்தய கதைகளுக்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்புகிறேன். உங்களோட கருத்துக்கள் தான் எனக்கான பூஸ்ட். கண்டிப்பா கிடைக்கும் தானே? :)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "ஓர்
மெய் தீண்டல்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top