Valentine's day special teaser CCA

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹலோ பிரெண்ட்ஸ்,

@Vijayasanthi viji கேட்டதால் இன்று காதலர் தின ஸ்பெஷல் டீசர். இது இன்னும் சில அத்தியாயங்களுக்குப் பிறகு வர வேண்டிய சம்பவங்கள். இப்போது உங்கள் பார்வைக்கு! அன்பு தின வாழ்த்துக்கள் பிரெண்ட்ஸ்:love::love:

teaser:

கல்யாணம் முடிந்து இந்த ஒரு வாரமாக விருந்து வரவேற்பு என்று வஞ்சுவுக்கும் ராம்குமாருக்கும் நேரம் பறந்தது.
ஏற்கனவே கல்யாணத்திற்கு முன் பத்து நாட்கள் லீவு எடுத்ததால் மேற்கொண்டு ஹனிமூனுக்கு தனியாக லீவு எடுக்க முடியாத நிலை.அதோடு அவர்கள் இருவரும் குடி போகவென்று புதிதாக பார்த்திருந்த வீட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் அடுக்க வேண்டிய வேலை இருப்பதால் பதால் சனி அன்றே பெங்களூர் வந்திருந்தனர்.
அந்த திங்கள் முதல் வேலைக்குப் போக வேண்டும். குடித்தனம் வைக்க வருவதாக பானு சொன்னதால் வஞ்சுவின் அம்மா எல்லாம் வாங்கிக் கொடுத்ததோடு ஒதுங்கிக் கொண்டார்.
காதல் திருமணம் அதுவும் தங்கள் எதிர்ப்பை மீறி என்பதால் இரு வீட்டிலும் இன்னும் முழுதாக சமாதானம் ஆகவில்லை.
எல்லாம் பார்சலில் வர ஏற்பாடு செய்து விட்டு ராம்குமாரும் வஞ்சுவும் வெள்ளி இரவே சென்னையில் இருந்து கிளம்பி விட்டனர்.
வோல்வோ பஸ்ஸில் ஸ்லீப்பர் டிக்கெட் எடுத்திருந்தான் ராம்குமார். வஞ்சு பயணத்திற்கு வசதியாக காட்டன் சுடி அணிந்திருந்தாள்.
ராம்குமார் ஷார்ட்ஸ் டீஷர்ட்டில் இருந்தான். இதற்கு முன்னும் இருவரும் பயணம் செய்திருந்தாலும் இப்போது இருக்கும் உரிமை அப்போது இல்லையே.
புதிய வாழ்க்கையின் தொடக்கம் இந்த பயணத்தில் ஆரம்பம். வீட்டிலேயே எல்லோரும் விடை கொடுத்து விட இருவரும் கேபில் வந்து தான் பஸ் ஏறினர்.
அதனால் இரு வீட்டிலும் காட்டிய ஒதுக்கம் கூட இருவரையும் அவ்வளவாக பாதிக்கவில்லை.
வஞ்சுவின் முக நூல் போஸ்ட் அன்று “என் காதலுடன் சொர்க்கத்துக்கு பயணம்..(Travelling to heaven with my love)” என்று இருந்தது.
ராம்குமார் அதற்கு லவ் ரியாக்ஷன் தந்து “waiting....” என்று பதில் போட நண்பர்கள் கூட்டம் எல்லாம் அவர்களை சேர்த்து கலாய்த்தது.
ரஞ்சித் “மச்சி! நீ நல்லவன்னு நினைச்சேன். ஆனா நீ காதல் மன்னன் னு இப்ப தான் புரியுதுடா. கடுமையா உழைச்சு லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இப்ப இப்படி ஸ்டேடஸ் போட்டு என்னை மாதிரி மொரட்டு சிங்கிள் ஸ்டமக் பர்ன் பண்ற. நல்லா இர்றா..” என்று போட அவர்கள் க்ரூப்பே ஒரே கலாட்டாவாக இருந்தது.
தங்கள் காதல் பெரிய போராட்டத்திற்குப் பிறகு நிறைவேறிய சந்தோஷத்தில் இருவரும் தனி உலகத்தில் இருந்தனர்.
கேபில் இனிமையான காதல் பாடல்களை டிரைவர் தனக்காக போட அவர்களுக்கோ அது தங்களுக்கானதாக தோன்றியது.
ராம்குமார் உரிமையாக வஞ்சுவின் தோளில் கை போட்டு அமர்ந்திருக்க வஞ்சு கிட்டத்தட்ட அவன் மேல் சாய்ந்திருந்தாள்.
இரவும் கேபில் இருந்த இருளும் மெலிதாக வெளியே இருந்து வந்த விளக்கு ஒளியும் வஞ்சுவிற்கு சுதந்திரம் தந்தது.
காதோடு பேசும் சாக்கில் ராம்குமாரின் உதடுகள் வஞ்சுவின் காதிலும் கன்னத்திலும் உரச வஞ்சுவிற்கு இருந்த குளிருக்கே குளிர் விட்டுப் போனது.
அப்படி ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்லை. தண்ணி பாட்டில் எடுத்தியா? வீட்டு சாவி எங்க இருக்கு என்று கணவன் மனைவி வழக்கமாக பேசும் பேச்சுக்கள் தான்.
பேசிய விதம் மட்டுமே வேறு.
பஸ்ஸில் மேல் பர்த் என்பதால் ராம்குமார் வஞ்சு இருவருக்கும் அவர்கள் எதிர்பார்த்த தனிமை கிடைத்தது.
தினமும் பேசிய பேச்சுக்கள் தான் என்றாலும் அந்த இரவில் ஓடும் பஸ்ஸில் காதோடு பேசி செல்ல சிணுங்கல் சின்ன சிரிப்போடு பேசியபடி போவது இருவருக்கும் சொர்க்கத்தை காட்டியது.
வஞ்சு இப்போது பழைய பயந்த வஞ்சு இல்லை. அதுவும் ராம்குமாரிடம் அதிக உரிமை வந்திருந்தது.
ராமோடு தனியாக இருக்கும் போது அவள் கூப்பிடும் பெயர் ரம். அவள் போதையில் கண்டெடுத்த லாட்டரி.
இருவரும் பெங்களூர் வந்து சேர விடிகாலை ஆக கேப் பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டில் இருவருமாக சேர்ந்து ஏற்கனவே தேவையான கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மெசின், பிரிஜ் போன்ற பொருட்களை வாங்கிப் போட்டிருந்தனர்.
வஞ்சு விடிய விடிய பேசியதில் களைத்து வந்ததுமே அவர்கள் ஏற்கனவே செட் செய்து வைத்திருந்த பெட்டில் விழுந்தவள் தான்.
ராம்குமார் சிறு புன்னகையோடு அதை பார்த்தவன் அவனே வழியில் வாங்கியிருந்த பாலைக் காய்ச்சி டீ போட்டு அவளுக்கும் ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்தான்.
அதற்குள் அவர்கள் சென்னையில் ஏற்றி அனுப்பி இருந்த பாத்திரங்கள் மற்ற சீர் பொருட்கள் வந்திருக்க ராம்குமார் வந்த ஆளோடு எல்லாம் இறக்கி வைத்தான்.
பிறகு தனக்குத் தெரிந்தவரை எல்லாம் எடுத்து வைத்தான்.
பிறகு சற்று ஓய்வு எடுத்து கொண்டவனுக்கு மணி பத்தாகி இருக்க பசித்தது.
வஞ்சுவை எட்டிப் பார்க்க அவள் இன்னும் லேசாகக் கூட அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“போச்சு! தினம் இவ ராத்திரி முழிச்சா காலைல தூங்கினா எப்படி பொழப்பு நடக்கும்...?” என்று சத்தமாக சொல்ல அதற்கும் வஞ்சுவிடம் எந்த அசைவும் இல்லை.
அவனே அருகே சென்று கன்னத்தில் லேசாக தன் மீசையை உரச வஞ்சு அதை தட்டி விட்டவள் அந்த பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
ராம்குமார் வசதியாக அவள் மறுபக்கம் படுத்து “ஒய் சின்ன பாக்கெட்! இப்படி இருந்தா நம்ம நிலைமை ரொம்ப கஷ்டம் டா! எழுந்து ஏதும் டிபன் செய்றியா? பசிக்கிது....” என்று அவள் உதடுகளில் கோலம் போட்டபடி அவளை பொறுமையாக எழுப்ப முயற்சி செய்தான்.
“ரம்! நைட் டூட்டி இல்ல பகல் டூட்டி ஏதாவது ஒண்ணு தான் முடியும். இதுக்கு மேல நா ஆபிஸ் வேலை வேற பாக்கணும்....ஏற்கனவே நைட் முழுக்க முழிச்சிட்டு இருந்து டூட்டி பார்த்தாச்சு. அதனால நீங்களே போய் டிபன் செஞ்சிட்டு என்னை எழுப்புங்க....”
தூக்கத்திலும் வஞ்சுவின் பேச்சு தெளிவாக இருந்தது.
--------------------------------------------------------------------------------------------------------------
அன்று அலுவலகம் முடித்து களைத்துப் போய் வந்த ராம்குமாருக்கு வஞ்சு எப்போதும் போல எதுவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருக்க செம கடுப்பாக இருந்தது.
“ஒய் சின்ன பாக்கெட்! ஒரு டிபன் கூட செய்யலியா?”
நிதானமாக கோபத்தை அடக்கிக்கொண்டு தான் கேட்டான். அவன் மூட் தெரியாமல் வஞ்சுவின் பதில் வழக்கம் போல் வந்தது.
“ரம்! இது என்ன புதுப்பழக்கம்? வழக்கம் போல் டின்னர் வேலை ஆரம்பிக்க வேண்டியது தானே?”
ராம்குமார் தான் வீட்டில் எல்லா வேலையும் செய்வது. சமையல் முதற்கொண்டு எதுவும் தெரியாது என்று வஞ்சு முதல்நாளே சொல்லி விட ராம்குமார் தான் எல்லா வேலையும் செய்தான்.
காய் நறுக்குவது, வீட்டை பெருக்குவது என்று சிறு வேலைகளை மட்டும் தன் கையில் எடுத்துக் கொண்டவள் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளக் கூட முயலவில்லை.
எப்போதும் பொறுத்துப் போனவனுக்கு அன்று பொறுமை போக “செய்ய நினைச்சா செய்யலாம். மனசு தான் வேணும்...நீ எப்பவும் சொகுசா வாழவே பழகிட்டே...”
சண்டை பெரிதாக இருவரும் பேசியே ஒரு நாள் ஆகி விட்டது. காலையில் ராம்குமார் எதுவும் சாப்பிடாமல் கிளம்பிவிட அவன் ஆபிசில் நுழையும் போதே வினய் வழி மறித்தான்.
“என்ன மச்சி! வாலண்டைன்ஸ் டேயும் அதுவுமா சிஸ்டர் கூட சண்டை போட்டே?”
தாங்கள் சண்டை போட்டது இவனுக்கு எப்படி தெரியும் என்று ராம்குமார் விழிக்க அவனிடம் எதோ சொல்லி சமாளித்து மேலே நடந்தான்.
அவன் காபின் போவதற்குள் ஏகப்பட்ட பேர் துக்கம் விசாரித்து அட்வைஸ் செய்து என்று ஒரு வழி செய்தனர்.
உனக்கெப்படி தெரியும் என்று கேட்டு தங்கள் சண்டையை எல்லோருக்கும் சொல்ல விரும்பாமல் ராம்குமார் பூசி மெழுகி சமாளித்தவனுக்கு ஆனால் தங்கள் சண்டை எப்படி ஊருக்கே தெரிந்தது என்று மண்டையை குடைந்தது.

மாலையில் வீட்டுக்கு போகு முன் ஒரு சிவப்பு ரோஜா போக்கே, ஒரு ஸ்விஸ் சாக்லேட் பாக்ஸ் வாங்கிக்கொண்டு இரவு டின்னருக்கு அவர்கள் முன்பு சென்ற ஸ்டார் ஹோட்டலில் டேபிள் புக் செய்து வீட்டுக்குப் போனான்.
வஞ்சு காலையில் அவன் பார்த்த அதே உடையில் அதே கோலத்தில் சோர்ந்து படுத்திருக்க ராம்குமாரின் கோபம் வழக்கம் போல் மலையேறியது.
வாங்கி வந்த இரண்டையும் ஒரு ஓரமாய் வைத்து விட்டு கண் மூடி படுத்திருந்தவளின் அருகே படுத்தான்.
“ஒய் சின்ன பாக்கெட்! என்ன பண்ணி வெச்சிருக்கே?”
கேள்வி அதிகாரமாக இருந்தாலும் குரல் குழைந்து தான் இருந்தது.
பதிலே வராமல் போக ராம்குமார் அவள் காதில் ஊத அப்போதும் வஞ்சு அசையவில்லை.
“ஆபிஸ்ல எல்லாரும் என்னை கொடுமைப்படுத்தின மாதிரி ஒரே அட்வைஸ். எல்லாம் உன்னால தான்....”
வஞ்சுவிற்கு அவன் சொன்னது கேட்டாலும் இன்னும் அவள் இருந்த இடத்தை விட்டு இறங்கவில்லை.
“பேஸ் புக்ல போஸ்ட் போட்டு ஊருக்கே நாம சண்டை போட்டத சொல்வியா நீ?”
வஞ்சு அவன் சொல்வதை கேட்கிறாள் என்று தெரிந்தாலும் அவளிடம் அசைவில்லை.
“ஒய் அதுல ஐ லவ் யூ புருஷா! முதல் காதல்! முதல் முத்தம்! முதல் பரிசு! இதெல்லாம் நல்லா இருந்துச்சு. ஆனா இந்த முதல் சண்டை எனக்கு பிடிக்கவே இல்லை. முதல்ல வந்து சாரி கேட்கும் வரை நான் உண்ணாவிரதம்! அப்படின்னு போட்டிருக்கே. நிஜமாவே நீ நான் செஞ்சு வெச்ச பிரியாணிய சாப்பிடலியா?”
வஞ்சு அதற்கும் பதில் சொல்லாமல் அப்படியே இருக்க ராம்குமார் குறுநகையுடன் கேட்டான்.
“அப்ப உன் உதட்டோரம் ஒரு சோத்துப்பருக்கை ஓட்டிட்டு இருக்கே?”
என்று விரலை அவள் உதட்டருகே கொண்டு வர வஞ்சுவின் கை அவளையும் மீறி வாயைத் துடைக்க எழுந்தது.
ராம்குமார் அவள் செயலில் வாய் விட்டு சிரிக்க வஞ்சுவுக்கு அது தலையிறக்கமாகி விட மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
“ஒய் அப்ப நா வாங்கிட்டு வந்த வாலண்டைன்ஸ் டே கிப்ட் வேணாமா?”
வஞ்சு அவனின் வார்த்தையில் மயங்கியதில் அதற்கு மேல் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை.
ஆனாலும் வேண்டா வெறுப்பாக கேட்பது போல் “என்ன கிப்ட் குரு? சொல்லுங்க....” என்று கேட்டாள்.
“அதை நீ இப்படி கேட்டா சொல்ல மாட்டேன்.” என்றவன் அவள் காதில் தன் விருப்பத்தை கிசுகிசுக்க வஞ்சு “குரு! வர வர உங்க பேச்சே சரியில்லை....” என்று எழுந்து ஓடி விட்டாள்.
அவசரமாக தன்னை சுத்தம் செய்து ஒரு ஹை காலர் ஸ்லீவ்லெஸ் கருப்பு குர்தியும் வெள்ளையில் பூ போட்ட லெக்கினும் அணிந்து வந்தவள் இப்போது பார்க்க பூ போல இருந்தாள்.
ராம்குமார் அவள் முன்னால் ஒரு காலில் மண்டியிட்டு போக்கேவும் சாக்லேட் பாக்ஸும் கொடுத்து “பீ மை வாலண்டைன் ஆல்வேஸ் டியர்!” என்றவன் கன்னத்தில் முத்தமிட வஞ்சுவுக்கு முதல் சண்டை மறந்தே போனது.
ராம்குமார் கொடுத்த பரிசுகளை ஒரு புகைப்படமும் தங்கள் இருவரை செல்பியாகவும் எடுத்துக் கொண்டவள் சுடச்சுட அதை முகநூலில் பதிவிட்டாள்.
மை வலண்டைன்ஸ் கிப்ட்! வீ ஹாவ் patched up!(நாங்கள் சமாதானம் ஆயிட்டோம்) என்று போட்டு ஆடும் பெண்ணின் ஸ்டிக்கரை பதிவிட்டாள்.
ராம்குமார் மணி பார்க்க ஏழு ஆகியிருந்தது.
“எட்டு மணிக்கு டின்னருக்குடேபில் ரிசர்வ் பண்ணியிருக்கேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு...”என்று சொல்லிவிட்டு வஞ்சுவை பார்த்த பார்வையே சரியில்லை.
வஞ்சுவிற்கும் அந்த பார்வை புரிய “குரு! உன் பார்வையே சரியில்லை!” என்று சொன்னபடி பின்னால் அடியெடுத்து வைக்க ராம்குமார் சிரிப்போடு அவளை முன்னால் நெருங்கினான்.
வஞ்சுவின் கால்கள் சரியாக படுக்கையறைக்குள் போக ஒரு சந்தோஷ சிரிப்புடன் அவளைக் கையில் ஏந்தியவன் “இது வரைக்கும் நடந்ததை எல்லாம் மூஞ்சிபுக்ல போட்டியே! இதையும் போடுவியா?” என்று கேட்க வஞ்சுவின் கை அவன் நெஞ்சில் செல்லமாககுத்தியது,
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ரொம்ப சவால் விடாதீங்க நீல்ஸ்......
அப்புறம் அதையும் போட்டுட போறாங்க.......
அதை மட்டும் தான் இன்னும் கடைவிரிக்கலை......

வேலண்டைன்ஸ் டே க்கு வேலண்டைன்ஸ் டே எபி போட்டுட்டிங்க........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அப்ப கல்யாணம் பண்ணியும் குருதான் சமையலா??? அதுல எல்லாம் நல்ல தெளிவா தான் இருக்கா...

இந்த காலத்து பிள்ளைங்களுக்கு எல்லாத்தையுமே FB யில போடுறதே வழக்கமா போச்சு....... காலையில எழுந்ததுல இருந்து ராத்திரி தூங்குற வரைக்கும்....
 
Last edited:

Saroja

Well-Known Member
சின்ன பாக்கெட்
ரொம்ப தெளிவா வீட்டில்
வேல செய்ற விசயத்தில்
இருக்காளா

இப்படி எல்லா விசயங்களையும்
முக புத்தகத்தில் போடலாமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top