Thiru.Selvam-Part-4

#1
குருவே சரணம்​

அவர்கள் அம்பாசமுத்திரம் டவுனை அடைய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் , ஒரு காட்டு பகுதிக்குள் வண்டி சென்றது , அவர்கள் எதிரே காளி சினம்கொண்ட புலியை போல ஆவேசமாக நடந்து வந்தான் தனது கை வாள் செல்வம் கழுத்தை நோக்கி விரைந்தது . செல்வம் “யாரு நீங்க , உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டான் ”, அதற்க்கு குலாக அருகில் இருந்த மர கிளை மீது பாய்ந்து அமர்ந்து , காளி ”உனக்கு நான் யாருன்னு தெரியாதா …ஹா ..ஹா ..ஹா ..ஹா , உங்க அம்மா கிட்ட கேளு அவங்க சொல்லுவாங்க , க்..க் ..க்..க்..” காளி செல்வத்தின் தாயை பார்த்தான் , செல்வமும் அவரை பார்த்தான் , மலர்விழியும் அவரை பார்த்தாள் …செல்வத்தின் தாய்க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை …. காளி “நான் சொல்றேன்….நான் யாருன்னு ….நான் சொல்றேன் …” அவன் யார் என்று கூறினான் , “நான் உன் அப்பாவால் ஜெயிலுக்கு போனவன் , ரிலீஸ் ஆன மரு நாளில் இருந்து உன் அப்பாவை தேடி ஊர் முழுக்க சுத்தியும் பலன் இல்லை , நீ சென்னையில் இருக்கிறதுனால உன்னை தேடி வந்து இருக்கிறான் கேள்விப்பட்டு சென்னை முழுவதும் சுற்றியும் உங்கப்பன பாக்க முடியல்ல , உன்ன அங்க பாத்தும் அடையாளம் தெரியாம நீயும் தப்பிச்சுட்ட , இப்போதான் இவைங்க சொல்லி நீ தான் காளையன் புள்ளன்னு தெரிஞ்சது , எங்கட உன் அப்பன் , அவனை சாகடிக்காம எனக்கு நிம்மதி கிடைக்காது ” என்று கூறிக்கொண்டே செல்வம் அருகில் வந்து அடிக்க துவங்கினான் .

அந்த பெரும் படையினை கண்ட செல்வத்தின் மகன் பயம் கொண்டு அழ துவங்கினான் , மலர்விழி ஓடி வந்து தன் காரின் அருகில் இருந்த மகனை அணைத்து கொண்டாள் , மலர்விழியின் பின்னால் மறைந்து கொண்டான். மலர்விழியின் பையில் சொருகி இருந்த அவளது “செல்லுலார் போனை ” எடுத்து தனது நண்பன் விஸ்வநாதனுக்கு போன் செய்தான் , அந்த கால்லை விஸ்வநாதனின் தந்தை சிவாநன்தம் அட்டென்ட் செய்தார் , அவர் “சென்னை சிட்டி கமிஷனர்”, அழுது கொண்டே கூறியதை, பொறுமையாக கேட்ட கமிஷனர் அவனை அழாமலும் பயப்படாமலும் இருக்க சொன்னார் , இன்னொரு கையில் இருந்த வாக்கி டாக்கியில் சென்னை கண்ட்ரோல் ரூமுக்கு அழைத்து திருநெல்வேலி கமிஷனருக்கு கனெக்ட் செய்ய பணித்தார். சென்னை கண்ட்ரோல் ரூமில் இருந்து திருநெல்வேலி கண்ட்ரோல் ரூமுக்கு விஷயம் அறிவிக்கப்பட்டது. கனெக்ட் செய்ய பட்டது , அதன் பேரில் திருநெல்வேலி கமிஷனர் கொண்ட டீம் அந்த குறிப்பிட்ட ஸ்பாட்டை நெருங்கியது , காளியின் ஆட்களை சுற்றி வளைத்தது . காளி மீண்டும் அரெஸ்ட் செய்ய பட்டான்.

எந்த ஒரு தடையும் இல்லாமல் குலதெய்வ வழிபாடு முடித்து அனைவரும் வீடு திரும்பினார்கள் ,

தனது தந்தை ,மாமனார் , மாமியார் இறந்த பிறகு மலர்விழிக்கென இருக்கும் இரு உறவுகள் தன் கணவர் மற்றும் மகன் , அவர்கள் மனம் காய பட கூடாது என முடிவெடுத்தாள் , செல்வம் மற்ற மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கும் சமயத்தில் , அவரால் மகனை சரிவர கவனிக்க முடியாமல் போகலாம் என்பதற்காக , தனக்கு படிப்பு அறிவு இல்லை என்றாலும் தன் மகனுக்காக 35 வயதில் டுடோரியல் கல்லூரி சென்று தேர்ச்சி பெற்றாள் . அது அவள் செர்டிபிகேட் வாங்குவதற்காக இல்லை . மகனுக்கு படிப்பு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதனால் இப்படி ஒரு முடிவு எடுத்தாள் . மலர்விழி இந்த முயற்சி பற்றி கூறவில்லை என்றாலும் , செல்வம் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டியது . எல்லோரும் திருமணத்திற்கு முன்னாள் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள் , செல்வத்துக்கோ தனது மனைவியை பார்க்கும்போது "புது காதல்" மலர்ந்தது.
அவளது செயலை கண்டு அந்த ஏரியாவே வியப்பு அடைந்தது . இவ்வளவு சிறிய காலத்தில் படிப்பு அறிவு இல்லாத ஒருத்தி மிகவும் சரளமாக ஆங்கிலத்தில் இலக்கண பிழை இல்லாமல் பேசுவது அசாதாரணமான காரியம் .
ஆவெரேஜ் ஆக மார்க் எடுத்து கொண்டு இருந்த அருண் இப்பொழுது கிளாசில் நம்பர் “1”. எல்லா புகழும் தன் மனைவியையே சாரும் என்று பெருமையுடன் இருந்தான் செல்வம் . அடுத்தடுத்து அருண் தேர்ச்சி பெற்று 1௦ம் வகுப்பு சென்றான் . காலாண்டு பரீட்சை வந்தது , வீட்டை பார்க்க வேண்டுமே, சுழற்றி விட்ட பம்பரம் போல் ஒரு பக்கம் செல்வம் விரைந்தான் , மறுபக்கம் அருண் அதிரி புதிரியாய் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் பறந்தான் . அப்பாவுக்கும் மகனுக்கும் பல் துளைப்பதில் இருந்து , குளிப்பதில் இருந்து , சூ போட்டு கிளம்பும் வரை வீட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது . மலர்விழி அருண் உறங்காமல் படிப்பதர்காக தானும் உறங்காமல் விழித்து கொண்டு இருப்பாள் , அவள் சொல்லி கொடுப்பதை அப்படியே பரீட்சையில் பின்பற்றுவான் .

விடுமுறை தினத்தில் “5” பேர் கொண்ட ஆசிரியர் குழு கொடைக்கானலுக்கு “5” டே சுற்றுலா போகலாம் என்று தீர்மானித்து , செல்வத்திடம் கேட்டார்கள் , அவனும் “ஓகே ” சொல்ல , சுற்றுலா புறப்பட்டனர் . அந்த “5” டே சுற்றுலாவில் கொடைக்கானல் , மதுரை , திருச்சி சென்று சென்னை வருவதாக திட்டமிட்டு இருந்தார்கள் . முதல் நாள் கொடைக்கானலும், பின்பு சாயங்காலம் அங்கிருந்து வத்தலகுண்டு , நிலக்கோட்டை வழியாக மதுரை வந்தார்கள் . அங்கே இரண்டு நாட்கள் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் , அழகர் கோவில் , பழமுதிர்ச்சோலை , நாயக்கர் மஹால் . அங்கே இருந்து திருச்சி விரைந்தனர் .

சுற்றுலா முடித்து திருச்சியில் இருந்து புறப்பட்டனர் , அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தார்கள். மலர்விழிக்கு சந்தோஷம் பொங்க சிரித்து கொண்டே இருக்க திடீரென்று மூச்சு வாங்கியது , வந்த வண்டி திசை மாறி ஹாஸ்ப்பிட்டலுக்கு சென்றது . டாக்டர் பரிசோதித்துவிட்டு , “இதற்க்கு முன்னாள் இப்படி மூச்சு திணறல் ஏதாவது நடந்து இருக்க ?”. செல்வத்திற்கு புரியாத புதிராகவே இருந்தது . டாக்டர்கள் செல்த்வதை எச்சரிக்கையை இருக்கும்படி அறிவுறுத்தினார்கள் . ஒரு நிமிடத்தில் அணைத்து சந்தோஷமும் காணாமல் போனது .
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement