Sivapriya's அஞ்சனின் கீர்த்தனை - அறிமுகம்

Priyas

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் அன்புக்களே:love::love::love:


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்:love::love::love: கரும்பின் தித்திப்புடன் மஞ்சளும் இஞ்சியும் ஆரோக்கியத்தை பெருக்கி இந்ததைத் திருநாளில் நல்வழி பிறக்கட்டும்... மகிழ்ச்சி பொங்கட்டும்... பொங்கலோ பொங்கல்...

இந்த நாளில் என் அடுத்த கதையின் சிறிய அறிமுகம் இதோ... விழித்தெழு கண்ணம்மா முடிந்ததும் இக்கதை துவங்கும். அதற்குள் சிறு அறிமுகம் இங்கே...
அறிமுகம்

விழிமணிகள் இரண்டும் நம்பிக்கை துரோகத்தின் பலனில் கண்ணீரால் சூழப்பட்டு மின்ன, செங்குருதி ஆக்கிரமித்திருந்த அந்த விழிகளில் அனல் தெறித்தது.

“இப்போ என்னதானுங்க சொல்ல வர்றீங்க நீங்க?” என்ற அவள் கேள்வி இயலாமையில் இறங்கியது.

“நீ… நீங்க அவனையே கண்ணாலம் கட்டிக்கோங்க அம்மணி. உங்… உங்களுக்கு அவன்தான் பொருத்தம்.” திக்கித்திணறி அவன் சொல்லி முடித்தவுடன் அவனது சட்டைக் காலரை ஆங்காரமாய் பிடித்தாள் அவள்.

“யாரோ போல அம்மணின்னு கூப்பிடுறதை நிறுத்துங்க முதல்ல… எப்போதும் போல கண்ணுன்னு கூப்பிடுங்களேன்…” ஆவேசமாய் துவங்கியவள் இறுதியில் இறைஞ்ச அதுவும் பிடிக்கவில்லை அவளுக்கு.

காதலிக்கும் போது மட்டும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைக்காது கொஞ்சி, மிஞ்சி, ஊர் சுற்றிவிட்டு இப்போது அக்காதலை கரை சேர்க்க இவள் மட்டும் கெஞ்சுவானேன்! அவர்களின் காதலை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு அவனுக்கு இல்லையா என்ன! ஏதோ ஒருதலை காதல் போல் இவள் சென்று கெஞ்சுவது சுயமரியாதையை தட்டி எழுப்ப, அவன் காலரை பிடித்திருந்த கை, பிடியில் இறுக்கம் கூட்டி அவனை உலுக்கியது.

“தலையை கவுத்து நின்னா நான் விட்டுருவேன்னு நினைச்சீங்களாங்க? எனக்கு பதில் வேணுமுங்க. என்னோட அன்புக்கு நீங்க பதில் சொல்லித்தானுங்க ஆகணும்?”

“இனி சொல்ல எதுவும் இல்லைங்க அம்மணி… நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேனுங்க. நீங்க நிசமாவே என் மேல அன்பு வச்சிருந்தா என்னை கட்டாயப்படுத்தக் கூடாது. நீங்க அந்த வீட்டு மருமவளா ஆகப்போறவங்க, இப்படி தனியா என்னை சந்திச்சு பேசுறது சரியா இருக்காதுங்க அம்மணி… நீங்க கிளம்புங்க.”

ச்சீ என்று முகம் சுழித்தவள் அவன் காலரை விடுத்து, “அப்போ நல்லா கேட்டுக்கோங்க… உங்க கண்ணு முன்ன அவங்களோட பொஞ்சாதியா சந்தோசமா வாழ்வேன். அதை நீங்க பார்த்து பார்த்து புழுங்கனும். என் கையை பிடிச்சுக்கிட்டு எங்கெல்லாம் நீங்க கூட்டிட்டு போனீங்களோ… எங்கெல்லாம் காதல் வார்த்தை பேசி நம்பிக்கை கொடுத்தீங்களோ அங்கெல்லாம் நான் அவங்களோட போவேன்… அவங்க கையை பிடிச்சுக்கிட்டு போவேன், அதெல்லாம் பார்த்து குளிர்ந்து போங்க… அதுதானே வேணும் உங்களுக்கு…” என்று கத்தியவள் அவனை அற்பமாய் பார்த்துவிட்டு அவனை உதறி தள்ளிவிட்டுச் சென்றாள்.

***

“ஐயா சின்னவனே நம்ம பெரியவன் வூட்டு பக்கத்துல மெயின் ரோட்டை விட்டு ஒரு ஐநூறு மீட்டர் உள்ளாக்க இருக்குற பருப்பு குடோன் ஒன்னு விலைக்கு வருது… அதை ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துறேன்… தோதா இருந்தா வாங்கிப் போடுவோம். உன்ற பேர்லையும் சொல்லிக்கிற மாதிரி மில்லு குடோனுன்னு இருந்தா பொறவு வர காலத்துல உபயோகமா இருக்கும்ல…” என்று யோசனை சொன்ன தந்தையை சுணக்கத்துடன் ஏறிட்டவன்,

“அந்த குடோனு ஏற்கனவே ரெண்டு மூணு கைக்கு மாறியிருக்கு, அது வேணாம்.”

“கை மாறுனதா முக்கியம். அது எந்த இடத்தில இருக்கு, எவ்வளவு பெறுமானம் தேறும். பொறவு அதோட மதிப்பு எவ்வளவு கூடும்னுதான் பார்க்கோணும். அந்த இடம் டவுனிலிருந்து அஞ்சு மைல்ல இருக்கு. எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்.”

“அப்போ நீங்களே வாங்கி உங்க மத்த பசங்களுக்கு கொடுத்துடுங்க… எனக்கு வேண்டாம்.”

“ஏலேய் அதைத்தானே செய்யுறேன்... என்ற புள்ளைக்கு தான் சொத்து சேக்குறேன். மத்தவனுங்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சு செட்டில் பண்ணி வுட்டாச்சு. உனக்கும் கொஞ்சம் சேர்த்து வப்போம்னு நானும் பல வருஷமா போராடுறேன்… நீ எல்லாமே வேணாம் வேணாம்னு சொல்லிட்டு திரியுற. என்ன ரோசனையில் இருக்க நீ? இப்படி ஒன்னுமே இல்லாம இருந்தா எப்படி நாளைக்கு கண்ணாலம் கட்டிக்கிட்டு புள்ள குட்டிங்களை வளர்ப்ப?” என்று அவர் அதட்ட,

“அது என்றபாடு… எனக்கு வேணும்னா அதுக்கு நானே உழைச்சு புதுசா கட்டிக்குவேன்… ஏற்கனவே யாரோ ஒருத்தர்கிட்ட புழக்கத்தில் இருந்து தேஞ்சி ஓஞ்சி ஓடா போன பழசு எனக்கு வேண்டாம். அது எவ்வளவு பெறுமானம் உள்ள குடோனா இருந்தாலும் சரி இந்த வூடா இருந்தாலும் சரி…” என்று தீர்க்கமாய் சொன்னவன், உயிலில் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் வீட்டை இவன் பெயரில் எழுதி வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேசிவிட்டுச் செல்ல, அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த தந்தை பெருமூச்சிழுத்தார்.

”அவனுக்கு இதெல்லாம் தோதுபடாதுன்னு தெரியாதா உங்களுக்கு. எதுக்கு தேவையில்லாம ஒவ்வொரு தடவையும் அவன்கிட்ட கெஞ்சாத குறையா பேசிட்டு இருக்கீங்க. ரோஷம் உள்ளவன் அவனே சம்பாரிச்சு வாங்கிப்பான்…” என்று அவர் மனைவி கழுத்தை வெட்டினார். அதை மறுத்தவர்,

“உனக்கு அவன் செய்யுற விஷயங்களுக்கு பின்னாடி இருக்குற வீரியம் புரியல கண்ணு… இந்த குணம் அவனை எங்க கொண்டுபோய் நிறுத்தப்போகுதோ இல்லை எங்க முன்னேற விடாம நிறுத்தி வைக்கப்போகுதோன்னு தெரியல… ஆனா இது முன்னேறுறத்துக்கான வழியில்லைன்னு மட்டும் நல்லா தெரியுது. இப்படியே இருந்தான்னா ஒருநாள் ஒன்னுமில்லாம நிப்பான்.”

×××××

அறிமுகத்திலேயே மொத்தமும் இருக்கு. let's have some fun... ஹீரோ ஹீரோயின் பேரு என்ன இருக்கும்னு எனி கெஸ்? ரொம்ப ஈசி... சும்மா உங்க கெஸ் எல்லாத்தையும் ஷேர் பண்ணுங்க... கதையில் மற்றவர்களுக்கு இன்னும் பேர் வைக்கலை, நீங்க கெஸ் பண்ற பேரை அவங்களுக்கு வச்சிடுவோம்...

eiHNGGI75130.jpg
 
umamanoj64

Well-Known Member
#3
புதுக்கதைக்கு வாழ்த்துக்கள் சிவபிரியா...
அஞ்சன்---கீர்த்தனா.... சரியா பா..

இண்ட்ரோ நல்லா இருக்கு...

பொங்கல் வாழ்த்துக்கள்:love:
 
#5
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and உங்களுடைய
"அஞ்சனின் கீர்த்தனை"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சிவப்பிரியா டியர்
 
Last edited:
#6
:D :p :D
மிகவும் அருமையான அறிமுகம்,
சிவப்பிரியா டியர்

ஹீரோ பேரு அஞ்சன்
அஞ்சான்?
சித்தரஞ்சன்?
மனோரஞ்சன்?
ஹீரோயின் பேரு கீர்த்தனை

கொடவுன், வீடு நிலம்-ன்னு வேற கை மாறி வந்ததையே வேண்டாம்ன்னு சொல்லுறான்
அப்போ அடுத்தவனை காதலிச்ச பொண்ணை மட்டும் எப்படி அஞ்சன் கல்யாணம் பண்ணிக்குவான்?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamanivan[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes