Raasitha'S Ninmel Kadhalagi NIndren P18

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
"அது வந்து...உங்களுக்கு எப்படித் தெரியும்?" எனப் பாண்டி கேட்க,

"நான் உங்கள கேள்விகேட்டா நீங்க என்கிட்ட மறுபடியும் கேக்குறீங்களா? ஏண்டா கதிரவனுக்கு ஒரு நல்லது நடக்குதுனா, குறுக்கவா நிக்கபோறே? என்னால தரமுடியாத பாசத்த, அவனை விரும்பி வேணும்னு வர பொண்ணு நிச்சயமா தருவாடா.

இப்படி எம்மவன நேசிக்கிற ஒருத்தி கிடைக்க நான்தான் கொடுத்து வச்சிருக்கணும்" என மனமுருகி பேச,

சக்கரையோ, "ஆமா அம்மா! நீங்க ரொம்பச் சரியாதான் சொல்லுறீங்க. அந்தப் புள்ளைக்குக் கதிரவனா உசுரு. ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு கூடப் போகாம ஏதோ ஒரு சாக்கு வச்சு இவன பார்க்க வந்திடும்.

ஆனா என்ன அம்புட்டு பிரியத்தயும் நெஞ்சுக்குள்ளையே வச்சுருக்கு. கதிரவன்கிட்ட இதுவரைக்கும் சொல்லவே இல்ல" எனக் கூற, பார்வதியோ, "அப்படியே சொல்லிட்டாலும் உன்னோட கூட்டாளி அப்படியே கல்யாணம் பண்ணிப்பான் பாரு. இத பெரியவங்கதான் பண்ணனும்.

கதிரவனை மொதல்ல கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல வைக்கணும். அவன் மட்டும் சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்லட்டும் அது போதும். என்ன தான் தெருஞ்ச பொண்ணுனாலும் இப்ப என்னோட மருமகளா பாக்குறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு.

எப்ப இங்க வருவாளோ ?" எனச் சந்தோசமாகக் கூற, அந்த நேரம் சரியாகக் கதிரவன் உள் நுழைந்தான்.

----------------------------------------------------------------------------------------------------------------

"அம்மா போதும். நீ இப்படிப் பேசாதா. இனியொருமுறை நீ இப்படி அழவே கூடாது. நீ அழறத நான் பார்க்கவே கூடாது. அதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லு ? ஒருவேளை நான் அந்த வீட்டுக்கு வரணுமா ? அப்படினாலும் சொல்லு. உன்னோட கண்ணீருக்கு முன்னாடி, அங்க நான் படுற அவமானம் எனக்குப் பெருசு இல்ல.

என்ன பண்ணனும்னு சொல்லு. " என உறுதியுடன் கேட்க, ஒரு சில நிமிடங்கள் பார்வதி சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் இதை நினைத்து கூறவில்லை. அவர் மனதில் இத்தனை ஆண்டுகளாக அழுத்திய விஷயத்தை அடக்கிவைக்க முடியாமால் அதீத அழுத்தத்தால் வெடித்துச் சிதறும்படியாகக் கண்ணீர்விட்டுவிட்டார்.

இஃது அவரே எதிர் பாராத ஒன்றுதான். ஆனால் இதைத் தன் மகனுக்கு நல்லதாக மாற்ற நொடியில் முடிவெடுத்திருந்தார்.

"அம்மா உன்னைத்தான் கேக்குறே? நான் என்ன செஞ்சா உன்னோட இந்தக் கஷ்டம் குறையும் ? என்ன பண்ணினா இப்படி நீங்க மறுபடியும் பொலம்பாம இருப்பீங்க ? சொல்லுங்க ?" என மீண்டும் கேட்க, மெல்ல பார்வதி சக்கரையைப் பார்த்தபடி, "நான் சொல்லிடுவே. ஆனா நீ செய்வியானு எனக்குத் தெரியல" என இழுத்தார்.

"எதுனாலும் சொல்லுங்க. செய்றே. ஆனா மறுபடியும் அழ மட்டும் செய்யாதீங்க" எனக் கதிரவன் உறுதி கூற, பார்வதி சொல்லியே விட்டிருந்தார்.

"கல்யாணம்! நீயொரு கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கப்புறம் எந்த வீட்டைவிட்டு போனியோ அஃது உன்னோட வீடு. அங்கையே வந்து நீ இருக்கணும்."

------------------------------------------------------------------------------------------------------------------

அந்த வார்த்தைகள், "யாருமா அந்தப் பையன் ?"

"அப்பா...உங்களுக்கு..." என அவளுடைய வாக்கியத்தை முடிக்கும் வழி தெரியாமல் விழித்தவளோ அப்படியே மீதி கேள்வியைக் காற்றோடு கரையவிட, எந்தவொரு பதற்றமும் இல்லாமல் நிதானமாகவே கந்தசாமி தொடர்ந்தார்.

"மத்த பொண்ணுங்கள பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா என்னோட பொண்ண பத்தி எனக்கு மட்டும் தான் தெரியும் பாப்பா. நீ எப்படிச் சொல்றதுன்னு தடுமாறுறது உன்னோட மனசுல இருக்க அந்தப் பையன்கிட்ட. எப்படியாச்சும் சொல்லிடணும்னு தவிக்கிறது இந்த அப்பா கிட்ட . சரிதானே பாப்பா ?"

"ஹ்ம்ம்ம்" என்பதாய் தலையை மட்டும் அசைத்தாள். அவளுக்குள் எப்போதும் இருக்கின்ற குற்ற உணர்வு இப்போதும் இருந்தது. ஆனால் அது தேவை இல்லை என்பதாக அடுத்து கந்தசாமி கூறிய வார்த்தைகள் அமைந்தன.

"எதுக்குப் பாப்பா தல குனிச்சு உக்காந்துருக்க? நீ எந்தத் தப்பும் செய்யல. உன்னால செய்யவும் முடியாது. உன்ன நான் அப்படி வளர்கல. என்னோட மக எப்பவும் துணிச்சலா இருப்பா, துணிஞ்சு முடிவெடுப்பா..அப்படிதான் நான் உன்ன நம்பிக்கிட்டு இருக்கேன்.

நீ செஞ்சது தப்பா சரியா அந்தக் கேள்வியே தப்பு என்ன பொறுத்தவரை. நான் உன்ன சரியா வளத்துருக்கேன். ஏன்னா அந்தப் பையன்கிட்ட உன்னோட விருப்பத்தைச் சொல்றதுக்கு முன்னாடி நீ என்கிட்டே சொல்லணும்னு தானே இந்த ஒரு வாரமா காலேஜ் போகாம வீட்ல இருக்க. சரி தான ?"
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, கடைசியில் பாரிஜாதம்தான்
ஜெயிக்கப் போறாளா?
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆஹா பாண்டியும் சக்கரையும் விழி பத்தி சொன்னா அவங்க அம்மா இப்படி புருஞ்சிட்டாங்களா... போச்சு. கதிர் அம்மாக்காக ஓகே சொல்லிடுவான் போல.. கனல் வீட்டுலையும் அப்பாகிட்ட பேச போறா.. யாரோட கல்யாணம் நடக்குமின்னே புரியலையே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top