Raasitha'S Ninmel Kadhalagi Nindren P14

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
"அண்ணா சும்மா மழுப்பாம உண்மைய சொல்லு. நீ சொல்ற தினுச பார்த்தா இதுக்குப் பின்னாடி ஏதோவொன்னு இருக்கும் போலியே? லவ் எதுவும் பண்றியா ? தங்கச்சிட்ட மறைக்காம சொல்லு"

"லவ் தான். ஆனா மொதல்ல அது முல்லையோட லவ். இப்ப எங்களோட லவ்"

"அடே! அண்ணா என்னடா சொல்லுற ?"

"விழி ஷாக்க குற, ஷாக்க குற, நீ அதிர்ச்சியாகுறேன்னு, அய்யாவை சைடுல மரியாதை குறைவா பேசுற"

"ஹக்கும்… இப்ப மரியாதையா முக்கியம்? உங்க காதலுக்கு மரியாதை கதை என்னனு சொல்லுடா அண்ணா"

"விளங்கிடும். இப்படியொரு மரியாதையான தங்கச்சி ஊர் உலகத்துல வேற யாருக்கும் கிடைக்காது. அட்லீஷ்ட் முல்ல முன்னடியாவது தொல்லை பண்ணாம இரு" எனக் கடிய,

"கண்டிப்பா இருக்கேன். ஆனா உங்க லவ் ஸ்டோரி சொல்லு"

---------------------------------------------------------------------------------------------------------

"அப்படியா? சூப்பர் அண்ணா. கடவுளே உங்களுக்கு ஹெல்ப் பன்றாரு. முல்ல ரொம்பச் சந்தோச பட்டிருக்கும். என்ன சொல்லுச்சு ? அப்பா சம்மதம் கிடைச்ச பிறகு மொத மொத என்ன பேசுச்சு" என ஆர்வமாகக் கேட்டாள்.

"அது.... அது...." எனத் தயக்கத்துடன் பார்த்திபன் இழுக்க,


"டேய் அண்ணா சொல்ல கூடாத பெர்சனல் அப்படினா வேணாம். ரொம்ப இழுக்காத. ஆனா நம்ம பிரிஎண்ட்ஸ் போலன்னு சொல்லிட்டு இப்ப இப்படி மறைக்கிற. கவனிச்சுக்கிறே " எனக் கூற,


"மறைக்கல. ஆனா சொன்னா நீ ஓட்டக்கூடாது"

"என்னது ஓட்றதா? அப்படி என்னடா சொன்னா ?''

"ஏதும் சொல்லல. கேள்விதா கேட்டுச்சு"

"சரி! என்ன கேட்டா ? நீயும் என்ன லவ் பண்றியான்னு கேட்டுச்சா?"

"அப்படிக் கேட்ருந்தாதான் பரவாயில்லையே. அதைவிட்டு, உங்களுக்குப் பேஸ்மெண்ட் வீக்கானு கேட்டுடா விழி. அன்னைக்கு அப்பாவை பார்த்ததும் கால் ஆடுச்சுல. அத மனசுல வச்சு கேட்டுபுட்டா. என்னோட மானமே போச்சு" எனப் பாவமாக முகத்தை வைத்து கூற, கனல்விழியோ பெரிதாகச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

-----------------------------------------------------------------------------------------------------------------

"என்ன தங்கச்சி நீ ஒன்னு செல்ல மாடீங்கற?" எனக் கந்தசாமி மல்லியை பார்த்து கேட்க,

"நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல அண்ணே" என முகத்திற்கு நேராகக் கேட்டுவிட, முருகேசனும் தேவியும் தான் பதறி போனார்கள்.

மல்லி இந்நாள் வரையிலும் இப்படிப் பேசியதே இல்லை. கந்தசாமிக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது. மேலும் மல்லியே தொடர்ந்து, "உங்க மேல எம்புட்டு நம்பிக்கை வச்சிருந்தே. இப்படி என்னோட நம்பிக்கையைப் பொய் ஆகிப்புட்டீங்களே"

---------------------------------------------------------------------------------------------------------------------

அதே போல வேகமாகக் குளித்து முடித்துக் கோவிலுக்குச் செல்ல, சக்கரையின் பரோட்டா கடை பார்த்தததுமே முதல் நாள் கதிரவன் அவளைக் காப்பற்ற வந்ததில் தொடங்கி, அவனை அவள் கண்டா பொழுதுகள் அனைத்தும் மனதில் ஓட தொடங்கியது.

அவன் அமர்ந்த நாற்காலி, அவன் நின்றிருந்த கல்லுக்கால், அவன் நின்று பேசிக்கொண்டிருந்த பூ கடை, பஞ்சாயத்தில் நின்றிருந்த பஞ்சாயத்து கல் என அனைத்துமே அங்கிருந்த அனைத்துமே அவனுடைய பிம்பங்களைப் பிரதிபலிக்க அவள் காணும் இடமெல்லாம் அவனே நிறைந்திருந்தான்.

காட்சி பிழையோ - உன்னை
கண்டதுதான் பிழையோ
காணுமிடமெல்லாம் நீ
என்ற வரிகளை சுகமாக வரித்துக்கொண்டே வீடு சேர்ந்தாள்.
"ஹே ஏண்டி இம்புட்டு நேரம். உனக்காகத்தான் காத்திட்டு இருக்கோம்" என அவசரப்படுத்தினாள் முல்லை.

"ஏண்டி என்ன ஆச்சு?"

"மறந்துட்டியா? கடல்ல போனதே இல்லனு எப்பவு சொல்லிட்டே இருப்பல. அதா அப்பா உனக்காக ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நம்ம சிலுவை தாத்தா இன்னைக்கு மீன்பிடிக்கக் கடலுக்குப் போகலியாம். சும்மா கொஞ்ச தூரம் நம்மள கூப்பிட்டு போறாங்களானு அப்பா கேட்டாங்க. அவரு உடனே சரினு சொல்லிட்டாரு. வேற யாரும்னா வீட்ல விடவே மாட்டாங்க.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பார்த்திபனோட லவ் ட்ராக்கா.. சூப்பர்..
 

தரணி

Well-Known Member
எல்லாரும் லவ் பண்ணுறங்க எபி நம்ம கதிர் கனல் பண்ண போராங்க லவ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top