Raasitha's Ninmel Kadhalagi Nindren P13

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
புதுக்கோட்டையில் இறால் மீன் நண்டு ஏற்றுமதி இறக்குமதி சங்க தலைவரான சேனாதிபதியும் கதிரவனின் அழைப்பை ஏற்று வந்திருக்க, கதிரவனின் சிரத்தையும் உழைப்பும் அவன் ஓவ்வொரு விஷயத்தைக் கையாளும் பாங்கும் கண்டு ஆச்சர்யம் கலந்த மரியாதை கொண்டார்.

"கதிரவன்! எல்லா விழாவுக்கும் போறதுபோலத் தான் இங்கயும் வந்தே. ஆனா உன்னோட அணுகுமுறை வித்தியாசமா இருக்கு. அதுனால புதுக்கோட்டைக்கு உன்னோட பண்ணையில இருந்து இறால் சப்பளை பண்ற கான்ட்ராக்ட உன்ட கொடுக்கலாம்னு யோசிக்கிறே. என்னப்பா ? எடுத்து பண்ணிடுவியா ?" எனக் கேட்க, கதிரவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

"கண்டிப்பா சார். சிறப்பா பண்ணி தரோம்" எனக் கூற, பாண்டியும் சக்கரையும் மனதளவில் மகிழ்ச்சி கொண்டனர்.

"நல்லா பண்ணுங்க கதிரவன்" என மேலும் அவர் வாழ்த்துக்கூற

"எல்லாம் உங்கள போலப் பெரியவங்க ஆசீர்வாதம்" எனக் கதிரவன் கூற,

"இது உங்க உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரம். இனி வெற்றி தேவதை உங்க வீட்லதான் நிரந்தரமா தங்க போறா" என மேலும் அவரே கூற கதிரவனுக்கோ அவனைத் தேடிவந்த முதல் அன்பு பரிசுதான் தன்னுடைய இந்த நாளை சிறப்பாக அமைத்து தந்ததென்று எண்ணம் கொள்ள வைத்தது.

"ஏ மாப்பு எனக்கு ஒரு சந்தேகம். நம்ம தங்கச்சிதான கதிரவன் வீட்ல தங்கும். இவரு என்ன ஏதோ வெற்றி தேவதைனு சொல்லுறாரு" எனப் பாண்டி தன்னுடைய இரண்டு கைகளிலும் குளிர்பானத்தை வைத்துக்கொண்டு இரண்டு உறிஞ்சி குழாயை போட்டு ருசித்து ரசித்துப் பருகியபடியே மிகவும் தீவிரமாக இந்தக் கேள்வியை முன்வைக்க, "ஹ்ம்ம் இரண்டும் ஒண்ணுதான்" எனப் பற்களைக் கடித்தபடி சக்கரை கூற, "ஓ அப்படியா? நம்ம தங்கச்சி இந்தப் பேரு மாத்திடுச்சா ? என்ட சொல்லவே இல்ல. சரி அத விடு. எனக்கு இன்னொரு சந்தேக"

"வேணாம்டா! இதுக்குமேல கேட்ட... " எனப் பொறுமையை இழுத்து பிடித்தபடி சக்கரை கூற,
---------------------------------------------------------------------------------------------------------------------
"அப்படியா? நல்லது. இவுங்க என்ன பண்றாங்க ?" எனக் கேட்க சிறிதும் யோசிக்காமல் சட்டென்று கதிரவன், "சக்கரை ஊருக்குள்ள கடை வச்சிருக்காங்க. இறால் பண்ணை கொஞ்சம் பெருசு பண்ணினதும் இங்க ஒரு கடையும் ஆரம்பிக்கப் போறான். ஏனா ஊருக்குள்ள இங்க இருந்து போறது தொலைவுல. இங்க வேல பாக்குறவங்களுக்கும் பக்கத்துல கடை கன்னின்னு வச்சாத்தான வசதியா இருக்கும். அதா சக்கரை எனக்கு இந்த யோசனையைச் சொன்னான்" எனக் கூற சக்கரையே ஒருநிமிடம் அதிர்ந்துதான் பார்த்தான்.

அவனுடைய அதிர்ச்சி விலகும் முன்னே, "இவன் பாண்டி. மீன்பிடிக்கிறவங்ககிட்ட இருந்து பண்ணைக்குத் தேவையான இறால் கொண்டு வர பொறுப்பா இவன்தான் பாத்துக்கப் போறான்" எனக் கூற, குளிர்பானத்தைக் கூட மறந்தவனாகப் பாண்டி நின்றுவிட்டான்.

சேனாதிபதியோ, "பரவாயில்லையேப்பா! இந்தக் காலத்து பசங்க எல்லாத்துலயும் கெட்டியாத்தான் இருக்கீங்க. சரி நான் புறப்படுறே! அவசர சோலிகிடக்கு. மத்த விவரத்தை பேச ஆபிஸ்க்கு வாங்கப்பா" எனக் கூறிவிட்டு கிளம்ப, கதிரவனிடம் சக்கரை, "டேய் என்னடா ? என்னென்னமோ சொல்லுற ?" எனக் கேட்க,

"ஆமா சக்கர! அந்தக் கடையதான் உங்க அப்பாவும் அம்மாவும் பாக்குறாங்கள்ல. நீ இங்கிட்டு ஒன்னு ஆரம்பி. மொத டி காபி ரொட்டினு வை. மெல்ல டிபன் போடலாம். ஒருவேளை மத்திய சாப்பாடு இங்க ஆர்டர் சொன்னா, தலையைக் கணக்கு பண்ணி ஊருக்குள்ள இருந்து இங்க பார்சல் எடுத்துட்டு வந்திடலாம்." எனக் கூற சக்கரையோ, "இதெல்லாம் சரியா வருமா ?" என மீண்டும் நம்பாமல் கேட்க, "வரும், வர வைக்கிறோம்" என முடிவாகக் கூற, பாண்டியோ, “மாப்பி கலரு கரிக்கிது டா..." எனச் சோக கண்ணில் கூறினான்.

அதைக் கேட்ட சக்கரையோ மற்றவைகளை விட்டு, "டேய் கதிரவன் செஞ்ச நல்லதுக்கு நியாயமா நீ கண்ணு வேற்குதுனு தானே சொல்லிருக்கணும் ? நீ என்ன கலரு கரிக்கிதுன்னு சொல்லுற ?" எனப் புரியாமல் கேட்க,

"கண்ணு வேர்க்குறது பழசு. கலரு கரிக்கிது புதுசு" எனப் பாண்டி பதில் சொல்ல, மீண்டும் அவனே தொடங்கி, "என்ன புரியலையா மாப்பி ? என்னோட கண்ணு கலங்கி கண்ணீர் பொங்கி இந்தக் கலரோட கலந்துருச்சுடா..." எனக் கையில் இருந்த குளிர்பான பாட்டிலை காட்டியபடி சொன்னவன், "அடே!!!!" எனச் சக்கரை பல்லை கடிக்க,

"அட! என்ன நம்பலையா ?நீ இந்தக் கலரை குடிச்சு பாரு. அப்ப தெரியும்" எனத் தன் கைகளிலிருந்து ஒன்றை சக்கரையிடம் நீட்ட, வாங்கியவன் வாயில் ஊற்ற, சட்டென்று 'தூ'வெனத் தும்பியேவிட்டான், "டேய் என்னடா நிசமாலுவே உப்புக்கரிக்கிது ?" எனக் கேட்டான்.
----------------------------------------------------------------------------------------------------------------------

"சட்ட ரொம்ப நல்லா இருக்கு கதிரு..." என மகன் போட்டிருந்த புதுச் சட்டையைப் பார்த்தபடி கூற, கதிரவன் என்ன சொல்லுவானோ எனச் சக்கரையின் நெஞ்சம் பதட்டமடைய, அந்நேரம் சரியாகக் கதிரவனுக்குக் கைபேசியில் அழைப்பு வந்தது.

"இதோ வரேமா" எனக் கூறியபடி சற்று தள்ளி செல்ல, வேகமாகப் பார்வதி சக்கரையிடம் நடந்ததைக் கூறி, "அம்மா வரலனு எதுவும் எம்மவ சங்கடப்பட்டானா ராசா" எனக் கேட்க, சக்கரையோ விதியின் விந்தையை நினைத்து ஆச்சர்யப்பட்டுப் போனான்.

----------------------------------------------------------------------------------------------------------------------

இத்தனை மாதங்கள் கழித்துத் தன்னுடைய தந்தை தாய் சகோதரனை காண செல்லும் ஆவல் கூடக் கதிரவனின் மீது கொண்டுள்ள காதலால் குறைந்துவிட்டதோ என்று அவளுடைய ஒரு மனம் முரண்டியது. இதயத்தில் நான்கு அறைகள் உண்டாம்... ஆனால் இப்போது கனல்விழியின் இதயத்தில் இரெண்டே அறைகள் தான். ஒன்று கதிரவனைப் பார்க்க முடியுமா என்ற எண்ணத்தைத் தன் அறையில் குடியேற்றியிருக்க, மற்றொன்றில் பெற்ற பாசம் குறைந்துவிட்டதா என்ற கேள்விகள் நிறைந்திருந்தன.

ஒன்றுக்கொன்று முரணான சிந்தனை தான். ஆனால் இரண்டையும் சுமந்து கொண்டிருந்தது அவளுடைய இதயம். அழுத்தமாக உணர்ந்தாள். பாரமாக உணர்ந்தாள். பாவமாகக் கூட உணர்ந்தாள். சந்தோசமாகக் காதலின் கைதியாகவும் இருந்தாள், சங்கடத்துடன் பெற்றோர் முன் கூண்டில் நிற்பதாகவும் தவித்தாள்.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நண்பேன்டா.. கதிரவா நீ.. நீ மட்டுமில்லாம உன் ப்ரண்ட்ஸ்க்கும் வழி செஞ்சு கொடுக்கற பாரூ.. சோமாஸ் டைலாக்ஸ் செம..
 

தரணி

Well-Known Member
நம்ம மட்டும் முன்னேறமா கூட இருக்குறவுங்களை சேர்த்து கூட்டிட்டு போறது பெரிய குணம்...... எப்படி சட்டை வந்தாச்சு..... ஆனா எப்படி வந்துச்சுனு தெரியல..... சோமஸ் கலரு கரிகிறது.....செம பொ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top