Raasitha's Ninmel Kadhalaagi Nindren P9

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
"என்னங்க போன ஜோருக்கே வந்துடீங்க? அண்ணியைப் பார்க்க இப்பவே பொறப்படுவோமா? கிளம்பித்தா இருக்கே" என அவர்பாட்டிற்கு முருகேசனின் மனைவி மல்லி பேசிக்கொண்டிருக்க, "செத்த பொறுமா...." எனக் கூறியபடியே கந்தசாமிக்கு அழைத்தார்.

வெளியில் சென்ற மாமா திடுமென வந்ததுமட்டுமல்லாமல் ஏதோ யோசனையோடு யாருக்கோ அழைக்கவும், அம்மாவுக்கு என்னவோ ஏதோவென்று பதறியபடி உள்ளறையிலிருந்து விழி வெளியே வர, கந்தசாமி அழைப்பை ஏற்றிருந்தார்.

"மாப்பிள, இராவுக்குப் புறப்படலாம்தா கிளம்பினோம். ஊருல பஞ்சாயத்தைக் கூட்டிருக்காங்க. வீட்டுக்கு ஒருத்தர் அவசியம்னாலும், நான் தேவிக்காகக் கிளம்பிருப்பே. ஆனா இந்த முறை பிராத, நம்ம புள்ள மரியாதைய காப்பாத்துனானே அந்தப் பையன் மேல கொடுத்துருக்கானுங்க" எனக் கூற மறுமுனையில் கந்தசாமி, "யாரு? அந்தப் பையன் கதிரவன் மேலையா?" எனக் கேட்க, அதற்குள் கனல்விழி, "கதிரவனா இருக்கக் கூடாது" என மனதிற்குள் ஜபித்துக்கொண்டிருக்க, முருகேசன் கூறினார்.

---------------------------------------------------------------------------------------------------------------------


"இவ்ளோ வியாக்கியானம் பேசுறவ, என்ன செய்றதும்னு நீயே சொல்லு. எனக்கு இது சரியா படல. என்ன செய்யணும்னு பிடிபடல. இதப்பாரு புள்ள, ஒண்ணுக்கு இரண்டு தடவ நல்லா யோசனை பண்ணி முடிவ பண்ணு... கண்டிப்பா போய்த்தா ஆகணுமா ?" எனக் கேட்க, சில நிமிடங்கள் விழி அமைதியாக நின்றாள்.

"என்ன யோசிச்சிட்டியா?" என மீண்டும் முல்லையே கேட்க, ஹ்ம்ம் என்பதாய் தலை அசைத்தாள் கனல்விழி.

"என்ன ? போகணுமா? போகவேணாமா? " என முல்லை கேட்க,

"நான் யோசிச்சது போறதுக்கா இல்ல போகவேணாமானு இல்ல. எப்படிப் போறதுன்னுதான்" எனக் கூற, "அடிப்பாவி!" என வாயில் கை வைத்தாள் முல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------

பஞ்சாயத்தைக் கூட்டிட்டா, எல்லா அவுங்களுக்குச் சாதகமா வந்திடுமா ? நீ உன்னோட புள்ளைய என்ன நினைச்ச? ஓடி போற கோழைனா ? நான் போகணும்னா அது நானா நினச்சா மட்டும் தான் முடியும்.

இந்த நாலு வருசமா நான் ஊருல இல்லாததுக்காரணம் அவுங்க சொன்ன தீர்ப்பு இல்ல. என்னோட பயணம். எப்படியும் நான் படிக்க வேற ஊருக்கு போகணும். தொழில் தொடங்கவும் வேல கத்துக்கவும் வேற ஊருக்கு தான் போகணும். இதெல்லாம் மனசுல வச்சுதான் போனே. அத நீங்க புருஞ்சுக்கோங்க!

நம்ம இடத்துல வந்து மத்தவங்க வாழ இடக்கொடுக்கலாம். தப்பில்ல. ஆனா நம்மளையே ஆள நினச்சா அதுக்கு நம்ம விட்டு கொடுத்துப் போகக் கூடாது. இன்னைக்குப் பஞ்சயாத்துல இதுக்கு ஒரு முடிவு கட்டுறே" எனக் கதிரவன் பேச பேச, கொஞ்சம் துவண்டு போய் இருந்த பாண்டியும் சக்கரையும் கூடச் சுறுசுறுப்பாக மாறினர்.
பார்வதியின் அழுகை கதிரவனின் பேச்சைக்கேட்டு சற்றே குறைந்திருந்தாலும் அவர் மனதில், "நான் அன்னைக்கே சரியான முடிவு எடுத்திருந்திருக்கணுமோ..." என்ற கேள்வி ஆயிரமாவது முறையாக முளைத்துக்கொண்டுதான் இருந்தது.

----------------------------------------------------------------------------------------------------------------------

"நான் இப்ப சொல்லவரது ஒரு முதலாளியா மட்டுமில்ல. தொழிலாளியோட கஷ்ட நஷ்டம் தெரிஞ்சவனா பேசுறே" என மச்சக்காளை கூற,

வேகமாகச் சக்கரையின் காதை கடித்த பாண்டி, "பெருச்சாலிமாதிரி மூஞ்ச வச்சுக்கிட்டு முதலாளியாம். டேய் நாட்டுல இந்த முதலாளிங்க தொல்லை தாங்க முடிலடா... "


UD will be posted tmrw
 

RajiChele

Well-Known Member
:):) sis epo kathir viliya correct purinchupan??  epa paru ethayavathu ketutu vizhi pathi thapa paven ninaikran:(
 
Last edited:

தரணி

Well-Known Member
கதிரை எதுக்கு பஞ்சாயத்தில் நிறுத்தினாங்க..... யாரு புகார் கொடுத்தது
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அப்ப விழிய கதிர் காப்பாத்தி விட்டான்... இப்ப பதிலுக்கு விழி எதாவது செய்வாளோ....
 

Saroja

Well-Known Member
புதுசாஏதாவது தொழில் தொடங்கும்
விசயத்தில் பஞ்சாயத்தா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top