Raasitha's Ninmel Kaathalaagi Nindraen P8

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
Dear Frnds....

Update will be posted tmrw...


"இப்ப ரெண்டுபேரும் ஏன் பேய உளவு பாக்க சொன்னமாரி பதறுறீங்க?" எனக் கேட்க,

"பேய கூடப் பாத்துடலம்மா. ஆனா இந்தச் சாமியார பாக்குறது ரொம்பக் கஷ்டம். அதுவும் அவன் கூட இருந்துகிட்டே அவன் போறவர இடத்தெல்லாம் உன்ட சொல்ல சொல்லுறியே... இதுக்குப் பதிலா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகச் சொல்லு நாங்க தைரியமா போயிட்டு வரோம்" எனப் பாண்டி கூற,

"அப்படியா! சரி இன்னைக்கு நைட் ரெண்டு பேரும் போயிட்டுவாங்க" எனச் சளைக்காமல் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சொல்ல,

"ஏம்மா நீ தங்கச்சியா? இராட்சசியா ?” என பாண்டி கூற, சக்கரையோ, “ஒரு பேச்சுக்கு சொன்னா நிசமாலுமே போகச் சொல்லுற. அவனை விட நாங்க உன்டதா உஷாரா இருக்கணும் போல" எனக் கூற, கனல்விழி சிரித்துவிட்டாள்.

-------------------------------------------------------------------------------------------------------------

நீ இருக்கும் இடத்திலே
நிலழாகவும்
நிஜமாகவும்
நான் இருப்பேன்
நீ என்றென்றும் என் வயிற்றில் நிறைந்திருப்பாய்

- எனக் காற்றில் கலந்து வந்த பிரியாணியின் மணத்தை நுகர்ந்தபடி மனதில் இந்த வரிகளைக் கூறிக்கொண்டவன் சோமாஸ் பாண்டிய!

“ஆசிப் வெட்ஸ் சாரா” என்ற எழுத்துக்கள் பதித்த பேனர் வரவேற்க, பிரியாணியின் மனமும் கோழிப்பிரட்டல் கொதிக்கும் வாடையும் பாண்டியின் மனதை கயிறில்லாமல் கட்டி இழுத்துக்கொண்டிருந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------

முதல் பந்தி முடிந்துவிட்ட கோபத்தில் இருந்த பாண்டி, "நீ போட்டிருக்கச் சட்ட என்ன கலர்?" எனச் சம்பந்தா சம்மந்தம் இல்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.

"என்ன நக்கலா? இது என்ன கலர்னு தெரியாதா ? பச்சை கலர்" எனக் கூற, "பச்சை கலர் சட்ட போட்டவங்களுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்" எனக் கூறியபடி முகைத்தை திருப்பிக் கொள்ள, சக்கரையும் கதிரவனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிரித்துக்கொண்டனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------

"அது வந்து...நீங்க சொன்னீங்கள்ள? கதிரவன் மனச மாத்தி கல்யாணம் பண்றது கஷ்டம்னு. அதுனால இங்க கல்யாணத்துல தூவுற மிட்டாய் அதுவா அவர் மடியில வந்து விழுந்து, அந்த விழுந்த மிட்டாய் என்னோட கைக்கு வந்துச்சுனா கண்டிப்பா என் காதல் ஜெயிக்கும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். எல்லாம் நீங்க இருக்கத் தைரியம்லா தான் வேண்டிகிட்டே. இப்ப என்னடானா, அது அந்தக் குழந்தைகிட்ட போய்டுச்சு. ப்ளீஸ் அண்ணே. அந்த மிட்டாய் தான் வேணும். வாங்கித் தாங்க" என அடம்பிடிக்க,

"ஐயோ காதலுச்சு அவனைக் கரெக்ட் பண்றத விட்டுபுட்டு, இப்படி மிட்டாய் வந்தா அவனுக்குக் காதல் வரும்னு நம்புதே! அட ராமா! என்ன ஏன் இதுங்க கூடக் கூட்டு சேர்க்குற" எனப் புலம்பியபடியே அந்தச் குழந்தையை தேடி போக, அவனைத் தடுத்த சக்கரையோ, "டேய் எங்க என்ன விட்டுத் தனியா போற ? பந்திக்கு போறியா ? இருடா நானும் வரே" எனத் தொத்திக்கொள்ள, அந்த நேரம் சரியாகக் கதிரவனின் அம்மாவும் கல்யாணத்திற்கு வந்திருக்க, மகனும் தாயும் அமர்ந்து பேச தொடங்கினர்.
 

தரணி

Well-Known Member
briyani kavithai ad ad ad.... pachai sattai pottavunglauku pathil solla mudiyathu...sapidum pothu yaru kelvi kettalum pathil solla mudiyathu sollunga somas
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சோமாஸ்... உனக்கு ஈடு யாருமில்ல...
 

banumathi jayaraman

Well-Known Member
சோமாஸ் பாண்டிக்கு இன்று
முதல் ஒரு கட்சி நான்
ஆரம்பித்து விட்டேன்,
ராசிதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top