Raasitha's Ninmel Kaathalaagi Nindraen P6

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
பஞ்சாயத்தின் தீர்ப்பின் படி மூன்று வருடங்கள் எவரோடும் தொடர்பில் இல்லை. படிப்பு முடிந்தவுடன் ஒருமுறை ஊருக்கு வந்து சென்றவன் பிறகு அவ்வப்போது பார்வதியிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தான். இப்போது கைபேசியின் வளர்ச்சி ஓரளவு கணிசமாக முன்னேறியிருக்கத் தாயுடன் முடிந்த போதெல்லாம் பேசிக்கொண்டே இருந்தான்.

பாண்டியும் சக்கரையும் கூடத் தூத்துக்குடிக்கு ஓரிருமுறை சென்று வந்தார்கள். இப்போது புதுக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆவுடையார் கோவில் திருவிழாவுக்கென்று வந்திருந்தான்.

"கலர் கலரா இருக்குது பலகாரம்
என்ன சாப்பிடவிடாம தடுக்க
யாருக்கு இருக்கு அதிகாரம்" எனக் கூறியவன் வேறு யாருமில்லை சோமாஸ் பாண்டியே.

"யோவ் பாண்டி. டயலாக் பட்டய கிளப்புது போ.... திடீர்னு என்னையா ஆச்சு உனக்கு ?" எனச் சந்தேகம் கேட்டபடி வந்தவன் சக்கரை. அவர்கள் இருவரோடும் மெல்லிய சின்னப் புன்னகையுடன் வந்துகொண்டிருந்தான் கதிரவன்.

முன்பிருந்ததைவிட இப்போது உடலிலும் முகத்திலும் நிறையவே மாற்றம். நல்ல வளர்ந்த ஆண்மகனாய் இருந்தான்.

*******************************************************************************************************

"என்ன விழி? இம்புட்டு அவசரம்? நீ சொல்ற ஜோர பாத்தா நன்றி சொல்ல போறது போலத் தெரியலையே. ஏப்புள்ள உண்மைய சொல்லு. உங்க அம்மாவுக்கு அதா என்னோட அத்தைக்குத் தெருஞ்சுச்சு நான் செத்தேன் "

"ஐ... முல்ல… ‘அத்த செத்த’ ... கவித கவித"

"அடியே கனல்விழி நல்லாப்போற என்னோட பொலப்புல பொங்க வச்சுட்டு போயிராதாடி... ஏதா இருந்தாலும் முன்னமே என்ட சொல்லிடு"

"அம்மாடியோ என்னமாதிரி கற்பன டி உன்னோடது? நான் போறது தேங்க்ஸ் சொல்ல மட்டும்தா. எதோ ஒருவிதமான அபிமானம் இருக்குறது நிசந்தா...ஆனா அது காதலுனு சொல்ல முடியாது. உன்ட மொக்கபோட்டு நேரந்தா வீனா போச்சு. வா அவர போய்த் தேடுவோம்" எனக் கூறியபடி முல்லைக்கொடியின் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு செல்ல, அவளின் இசைவுக்குக் கொடியும் பின்சென்றாள்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கவனிப்போர் யாருமில்லை என்று சென்றிருக்க, அது பொய் என்பதாய் தூணின் பின்புறமிருந்து மகேஷ் வெளியே வந்தான்.

"வாடி வா.... நா ஊருமுன்னாடி அசிங்க படுத்த காரணமா இருந்தவ, அசிங்கப்படுத்தினவனுக்குத் தேங்க்ஸ் சொல்ல போறீங்களா? இந்தா வந்துட்டே. அதெப்படி பேசுறன்னு நானு பாக்குறே" என மனதிற்குள் கருவியபடி மின்னல் வேகத்தில் சுந்தரை நோக்கி ஓடினான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top