Raasitha's Ninmel Kaadhalagi Nindren - P10

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
"இப்படி ஆளாளுக்குப் பேசாம, ஏம்பா கதிரவா, வாயத் தொறந்து உன்னோட தரப்பை சொல்லு. இல்லாட்டி எங்க தீர்ப்புக்கு கட்டுப்படுறியா" என முடிவாகத் துணை பஞ்சாயத்து தலைவர் கேட்க, கதிரவன் பேசப்போகும் சொல்லுக்காகச் சலசலப்பு அடங்கியது.

"பேசுறதெல்லாம் பேசியாச்சா? இல்ல என்னோட பாசமான மாமா இன்னு எதாவது பேச இருக்குதா ? அப்படினா முழுசா பேசிடுங்க. நான் வெயிட் பண்றே. அதுலயும் ஊர முதன்மையா வச்சு யோசுசீங்களே, நீங்க நின்னு அடிச்சு ஆடுறீங்க மாமோவ். என்னா பொதுநலம், என்னா நல்ல மனசு. இந்த மனசெல்லாம் கோடில ஒருத்தருக்குத்தான் இருக்கும் மாமோவ்" என மச்சக்காளையிடம் சின்னச் சிரிப்புடன் பேச, "என்ன இவன் ? தாம்தூம்னு குதிப்பான் , இல்ல சண்டைக்கு வருஞ்சுகட்டிட்டு வருவான், அதுவும் இல்லாட்டி கொஞ்ச பதட்டமாச்சு படுவானு பார்த்தா, இப்படி ஈஈனு இழுச்சுக்கிட்டுப் பேசுறான்" என மனதிற்குள் வேக வேக மாக யோசனைகளை ஓட்டியவர், அருகிலிருப்பவனை அழைத்து, "ஏண்டா...நான் இம்புட்டு நேர சரியாதான பேசுனே?" எனக் கேட்க, அவனோ, "ஆமாங்க அய்யா" என்றான் அவர் காதில் கிசுகிசுப்பாக.

------------------------------------------------------------------------------------------------------------------------

தூரத்தில் இருந்தாலும் கதிரவனின் அந்தக் குறுஞ்சிரிப்பு கனல்விழியைச் சொக்கவும் வைத்தது கொக்கிபோட்டு இழுக்கவும் செய்தது.

"எப்படிச் சிரிகிறாங்க பாரு.... அம்மாடியோ விழி இவர்கிட்ட நீ உஷாரா இருக்கணும். சிருச்சே ஆள கவுத்துருவாரு போல. ஆனா இவரு எப்பவாவது தான சிரிக்கவே செய்றாரு. அதுனால தான் இம்புட்டு அழகோ...நல்லவேளை வயசு பிள்ளைங்களைப் பஞ்சாயத்து கூட்டிவரக்கூடாதுனு நல்ல சட்டம் போட்டாங்க" என மனதிற்குள் ரசிப்புச் சிரிப்பு நிம்மதி என்று பல உணர்ச்சிகளைக் கரைபுரள செய்துகொண்டிருந்தாள். ஆனால் அவளின் பார்வை மட்டும் கதிரவனை விட்டு நகரவே இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------

, ஊர் மக்கள் திரும்பி வரும் சத்தம் கேட்க, விழி ஓட்டமும் நடையுமாக வள்ளிவீட்டிற்குள் புக, அதே நேரம் சரியாக உள்ளிருந்து வெளியே முல்லை வர, வாசலில் மல்லி நின்றிருந்தார்.

மல்லியை பார்த்ததும் முல்லைக்கொடி திருதிருவென்று முழிக்க, கனல்விழியும், "ஐயோ எப்ப என்ன சொல்றது ?" என நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே வள்ளியும் அவள் அம்மாவும் வெளியே வர, "இன்னைக்குத் தொலைஞ்சேன்" என முல்லைக்கொடி மொத்த நம்பிக்கையையும் இழந்தே விட்டாள்.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்.... ஆக மொத்தம் பேச வந்தவங்களயே குழப்பி விட்டாச்சு கூலா இருந்து.. கதிரு நீ கெத்துடா.. கனலு நீ காலி... இந்த சிரிப்புக்கே மயங்கினா மத்ததுக்கு... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா.... ஹா... ஹா...........
கனல்விழியக்கா மல்லியக்காவிடம்
மாட்டிங்கு
இதுக்குத்தான் களவாணித்தனம்
பண்ணப்படாது-ங்கிறது விழி மேடம்

ஆனாலும் நம்ம கதிர் என்ன
சொன்னான்?
எதைச் சொல்லி மச்சக்காளையை
மண்ணைக் கவ்வ வைச்சானா?
இல்லையா-ங்கிறதை நீங்க
சொல்லலையே, ராசிதா டியர்?
 
Last edited:

Raasitha

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா கனவிழியக்கா மல்லியக்காவிடம் மாட்டிங்கு இதுக்குதான் களவாணித்தனம் பண்ணப்படாதுங்கிறது விஷி மேடம் ஆனாலும் நம்ம கதிர் என்ன சொன்னாங்கறதை நீங்க சொல்லலையே ன் எதை ச் சொல்லி மச்சக்காளையை மண்ணை க்கவ்வ வைச்சனா இல்லையா ங்கிறதை ராசிதா டியர்

ha ha....ippave sollitaa suvarasiyam poidumla sis..nalaiku solrn :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top