Naan Ini Nee - Precap 9

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“தீபன்.. நீ தப்பு மேல தப்பு பண்ற....” என்று அனுராகா கத்த,

“நான் பண்றது எது சரி எது தப்புன்னு எனக்குத் தெரியும்.. கேம் தானே.. உன்னை போகவிடாம தடுக்க நான் எதுவும் செய்றேன்.. நீ உன்னோட ஸ்டேப் மூவ் பண்ணு.. அவ்வளோதான்..” என்றான் அசால்டாய்..

“ஹேய்.. இடியட்... இதெல்லாம் வெளிய தெரிஞ்சா என்னாகும் தெரியுமா??!! அவ்வளோ ஏன் என் டாட்க்கு இதெல்லாம் தெரிஞ்சா யூ ஆர் க்ளோஸ்..” என்று அனுராகாவும் சொல்ல,

“ஹா ஹா.. தெரியட்டுமே...” என்று சிரித்தான்..

அவனின் சிரிப்பு அவளுக்கு வேறெதுவோ உணர்த்த, “என்ன பேபி புரியலையா?? உன் அப்பா உனக்கு போட்ட பாடிகார்ட்ஸ தூக்கினதே நான் தான்..” என,

“என்னது??!!!” என்று அதிர்ந்துதான் போனாள் அனுராகா..

அவள் பழகிய வட்டத்தில் யாரும் இப்படியில்லை.. பணக்காரர்கள் என்றாலும் சட்டென்று நட்பு பாராட்டுவதும், ஒருவருக்கு விருப்பமில்லை என்று உணரும் நேரத்தில் பை சொல்லிடுவதும் இயல்பாகாவே இருந்தது.

ஆனால் இவன்??!!!!
------------------------------------------


வெளியே ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும், தீபனுக்கு அவன் மனதே சொல்லியது நீ செய்வது சரியில்லை என்று. இதற்கான விளைவுகளும் சந்திக்கவேண்டும் என்று.. அனைத்தும் தெரிகிறது.. அனைத்தும் புரிகிறது.. இருப்பினும்.....

ஆரம்பித்தாகிவிட்டது.. அதை முடிக்கவும் செய்யவேண்டும்..
அவனுக்கான வேலைகள் நிறைய இருக்கிறது.. இனி அடுத்த வாரம் ஒரு பெரிய பொதுக்கூட்டம் இவனின் பொறுப்பில் தான் சக்கரவர்த்தி விட்டிருந்தார்.. அதற்கான வேலைகள் இப்போதிருந்து ஆரம்பித்தால் தான் உண்டு..


தீபன் சக்ரவர்த்தி அங்கேயில்லை என்றாலும் அவன் சொல்படி அங்கே வேலைகள் நடக்கும்தான் ஆனால்?? என்றுமே பொறுப்பில் இருந்து விலகாதவன் என்று பேர் வாங்கிவிட்டு இன்று அதைக் கெடுப்பதா??!!

உஷாவின் எண்ணிலிருந்தும், அப்பாவின் பிஏ எண்ணில் இருந்தும் ஏகப்பட்ட அழைப்புகள்.

--------------------------------------------

இது என்னவோ வேறு விஷயம் என்று அனுராகா அவனின் பேச்சில் கவனமில்லாது இருக்க,
“முதல்ல வாங்கின பணத்தை கொண்டுபோய் கொடுங்க.. பொதுக்கூட்டம் நடத்த பணம் வரும்.. நான் கொடுத்து விடறேன்..” என்றவனின் முகத்தில் அப்படியொரு எரிச்சல் வேறு..


‘பார்ரா... வாங்கின பணத்தை திரும்ப கொடுக்க சொல்றான்..’ என்றுதான் பார்த்தாள் அனுராகா..

தீபனுக்கோ ‘சும்மாவே இவ என்னை மோசமா நினைக்கிறா.. இதுல பொதுக்கூட்டம் நடத்த பணம் இவங்க அப்பாக்கிட்ட இருந்து வந்தது தெரிஞ்சா அவ்வளோதான்...’ என்று எண்ணிக்கொண்டவன்,

“அண்ணாக்கு லைன் கனெக்ட் பண்ணுங்க..” என, சிறிது நேரத்தில் மிதுன் “என்னடா எங்க இருக்க??” என,

“நான் இருக்கிறது எல்லாம் இருக்கட்டும்.. பொதுக்கூட்டம் என் பொறுப்புதானே.. உன்னை யார் பணம் வாங்க சொன்னா..?!!” என்றான் என்றுமில்லாத விதமாய் மிதுனிடம்..
-------------------------------------------



“லோகேஷ்.. இதெல்லாம் எனக்கு சரியா படலை.. பிசினஸ் வேற.. பேமிலி வேற..” என்று தாரா சொல்ல,


“எப்போ இருந்து தாரா நீ இப்படி யோசிக்க ஆரம்பிச்ச??” என்றார் லோகேஸ்வரனும்.

“ஏன்.. யோசிக்கிறதுல என்ன தப்பு.. எனக்கென்னவோ சக்ரவர்த்தி பேமிலி விஷயம் அவ்வளோ மனசுக்கு சரியா படலை.. இதுல நீங்க அவ்வளோ பணம் வேற கொடுத்து இருக்கீங்க...”

“ஹா ஹா.. இது நார்மல் தானே..இதுக்குமுன்ன நம்ம கொடுக்கலையா??? இவங்களுக்கு மட்டுமில்லை.. நமக்கு பேவரா இருக்கிற எல்லாருக்கும் கொடுக்கிறோம்.. சோ வாட் தாரா...?!!!”

“இல்லை... அனு வராம எனக்கு எதுவும் அவ்வளோ சரின்னு இல்லை.. நீங்க அந்த பிரஷாந்த அப்போவே மீட் பண்ண விட்டிருந்தா அவ இவ்வளோ தூரம் போயிருக்கவே மாட்டா...” என,

“ஹேய்... பிரஷாந்த் யாரு.. என்கிட்டே கை நீட்டி சேலரி வாங்கற ஒருத்தன்.. அவனைப் போய்.. ச்சே ச்சே...” என்று தலையாட்டிவிட்டு லோகேஸ்வரன் எழுந்து சென்றுவிட, தாராவின் மனதினில் வேறொரு முடிவு தோன்றியது.
 

Joher

Well-Known Member
Tks சரயு......

ஆனால் இவன்......
உறவாடி கெடு?????

Right.......
அனு அப்பா businessக்கு தீபன் அப்பா political support......
Interdisciplinary business......

சக்கரவர்த்தி family சரியாப்படல......
So அம்மாவே பிரசாந்துக்கு call பண்ணப்போறாங்களா?????
D villageல் அவனே அவளை தேடி போவானா????

அம்மா பொண்ணுக்கு protection பார்க்குறாங்க......
அப்பா பொண்ணு மூலமா வரும் ஆதாயம் பார்க்கிறாரா status என்னும் போர்வையில்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top