Happy New Year 2019......

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த மல்லிகா மணிவண்ணன்
டியரின் சைட்டில் வலம் வரும்
என்னுடைய அனைத்து
இன்னுயிர்த் தோழிகளுக்கும்
தோழர்களுக்கும் சகோதரர்களுக்கும்
சகோதரிகளுக்கும் என்னுடைய
மனமார்ந்த இனிய ஆங்கிலப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
இனியத் தோழர் தோழிகளே

எல்லாம் வல்ல எம்பெருமான்
விநாயகர் பெருமானின்
திருவருளால் இந்த இனிய
ஆங்கிலப் புத்தாண்டில்,
நீங்கள் எண்ணியது
எல்லாமே இனிதாக
நடைபெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இனியத் தோழர் தோழிகளே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்!
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்!

வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னான்
அறிவுக்கு அதுதான் சுபதினம்!
புத்தன் பிறந்து போதனை செய்தான்
அன்புக்கு அதுதான் சுபதினம்!

காந்தி பிறந்து விடுதலை தந்தான்
உரிமைக்கு அதுதான் சுபதினம்!
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுபதினம்!

நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கதுதான் சுபதினம்!
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுபதினம்!

லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவர்க்கே அது சுபதினம்!
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கெல்லாம் சுபதினம்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top