E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
எத்தனை எதிரி வந்தாலும் சாமாளிப்பார்...லலிதா
சங்கீதவர்ஷினி மட்டும் அவர்கூட இருக்கனும்...இருப்பாங்கன்னு நம்புறேன்..
Yes pa கண்டீப்பா இருப்பா இனிமே வர்ஷினிய போக விட்டுடுவாரா நம்ம தல.ரொமான்ஸ் பன்னியே இல்ல கவுத்திடுவாருgood-job-smiley-emoticon.gif
 
Lalithaganesan

Well-Known Member
* உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?

தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது

உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி. மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள்,

யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.

மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.

முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியதுஎன எழுதப்பட்டிருந்தது. ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.என அதை நிராகரித்தார் மன்னர்.

அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியதுஎன எழுதப்பட்டிருந்தது. ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.என நிராகரித்தார்.

அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது
அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர் இராஜராஜ சோழர்,

அடுத்தாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார். அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழேஅன்பே சிவம்என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார்

மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.

அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள்.

இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது.

அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும் அன்பு. அன்புதான் இறைவன்.

அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து, ”அன்பே சிவம்என்று எழுதி வைத்தேன்.என விளக்கினார் சிற்பி.

இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம்.

நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்.என்று கூறி ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.

அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?. அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது.

அன்பே சிவம்.
உண்மை சகோ
 
Lalithaganesan

Well-Known Member
  • இளையராஜாவின் பாடல்களை இசைக்கும் அனைத்துப் பேருந்துகளுமே சொகுசுப் பேருந்துதான்..

ஏன் சகோ கார்,லாரி,வேன், இதெல்லாம் சொகுசா மாறாதா என்ன.
 
Lalithaganesan

Well-Known Member
என் வாழ்வு உன்னோடு ..
எனை தெரிந்தும் நீ
தலைவியின் நாயகன் ..

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனாவில் உன் முகம்

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சம்

நீதானே தாலாட்டும் நிலவு ..

வரம் தரும் வசந்தமே..

காதல் கொண்டேன்..

வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

பக்கம் வந்து கொஞ்சம்..

ஊமை நெஞ்சின் சொந்தம்

தென்றல்வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மற.

இப்படிக்கு உன் இதயம் ..

ஒரு வானவில் போல

வானம் தொடாத மேகம்..

சங்கீத ஜாதி முல்லை

நீ என்பது யாதெனில் ..

கனவே கை சேருமா..

மெண்டல் மனதில்..
சூப்பர்ர்ர்ர்ர்ர்
 
Lalithaganesan

Well-Known Member
ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.

அப்ப அந்த முடி திருத்துபவர், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க.......அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.

கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?"

இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.

அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,

"உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"

அதிர்ச்சியான முடி திருத்துபவர், "அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்."

"இல்லை...........அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."

"அஹ் முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"

"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்
சூப்பர்
 
banumathi jayaraman

Well-Known Member
==============================================================================​
நீ காற்று, நான் மரம்,
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி,
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்
நீ இரவு, நான் விண்மீன்,
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்

நீ அலை, நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்று கொள்வேன்
நீ உடல், நான் நிழல்
நீ விழ வேண்டாம், நான் விழுவேன்
நீ கிளை, நான் இலை,
உன்னை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தரிப்பேன்
நீ விழி, நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம், நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்

நீ வானம், நான் நீலம்,
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம், நான் வார்த்தை ,
நீ சொல்லும்பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில், நான் குயில்,
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை, நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல், நான் ஒளி,
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்

மிகவும் அருமையான பாடல், தங்கமலர் டியர்
எனக்கு, மிக, மிகப் பிடித்த பாடல், தங்கமலர் செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.

அப்ப அந்த முடி திருத்துபவர், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க.......அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.

கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?"

இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.

அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,

"உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"

அதிர்ச்சியான முடி திருத்துபவர், "அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்."

"இல்லை...........அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."

"அஹ் முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"

"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்
அவசரமாக ஒரு வெற்றி தேவை. ஒரு பத்து பேருக்கு அட்வைஸ் பண்ற மாதிரி சின்ன வெற்றியாக இருந்தாலும் பரவாயில்லை
உடல் நிலை சரியில்லை என்றால் பணக்காரர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கும், ஏழைகள் பெரியாஸ்பத்திரிக்கும் போவார்கள்...
முன்னாடி மொபைல் இருந்தா ஆச்சரியப்பட்டாங்க.. அப்புறம் ஃபேஸ்புக்ல அக்கௌண்ட்டான்னு ஆச்சரியப்பட்டாங்க..
இப்ப மொபைல் இல்லையான்னு ஆச்சரியப்படறாங்க.. இனிமே ஃபேஸ்புக்குல அக்கௌண்ட் இல்லையான்னு ஆச்சரியப்படுவாங்க...

#முக்கோண வாழ்க்கை
பிள்ளையார் அம்மா அப்பாவை சுத்தி வந்த மாதிரி, நாம ஃபேஸ்புக், ட்விட்டரை சுத்தி வந்தாலே உலகத்தைப் புரிஞ்சிக்கலாம் போல
ஹா ஹா ஹா
 
Last edited:

fathima.ar

Well-Known Member
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்

-முருகேசன்லட்சுமி

நைஸா நீங்களும் ஒரு மேதைன்னு
சொல்றீங்களா..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top