E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
ஹே ஒத்த சொல்லால
என் உசிரெடுத்து வெச்சிக்கிட்டா

ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா

பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தங் குடிச்சு
என்ன கொன்னாடா

முட்ட கண்ணால
என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால
யேதோ ஆனேன்டா


நான் தான் அப்போவே சொன்னேன்
dic open பண்ணுங்கன்னு
 

vidhyaaj

Well-Known Member
FRIENDSSSS VANTHUTTAEN..
niraiya per seekiram mudinga kaetkaraaanga..
he he naan enna mudika maataen naa solraen athu mudiya maaattaenguthu..
ennoda mind flow eppadiyo appadi thaaan

inga rendu perumae misatkes irukkura common persons..
enna eswar misatke.. varshiniyai shatter panniruchchu..
innum eppadiyum 20 episodes irukku..
kathai seekiram mudiyaathu.. but my sincere prayers..
naan athukulla mudichidanum..
and this is just a story..
athukku neenga ivvalavu emotion aagum pothu oru pakkam santhoshamaa irukku
orupakkam tension aa irukku.. like i should keep all's expectations..

but i myself have a feel like dragging story.. athanai naan palamurai munnamae sollitaen..
but still nothing is in my hand.. eppadi pogumo theriyaaahu.. this is an emotional melodrama.. let me hope for the best with all your supports.


EPISODE 69

Eagerly waiting to know from you all.
Hai super. Varshu love pants eswarai. Ana Vera yaraium scan love pannathu pidikama divorce ketkura. Over possessiveness.
 

fathima.ar

Well-Known Member
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே...

துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே...

"ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி..

தேடி வா தேடி வா நம் இதயம் இனையும் ஒரு தேதி..."
 

malar02

Well-Known Member
லாஸ்ட்சீன் மௌனராகம் போல டைவர்ஸே தரும் போது
விட்டுடுனு ஒரு வார்த்தை சொல்லு..எல்லாம் விட்டுட்டு உன் கூடயே வந்துடறேன்..
வர்ஷ் சொல்லப் போறாளா :D

depositphotos_12312826-stock-illustration-thoughts-and-options-vector-illustration.jpg
 

malar02

Well-Known Member
Mallika விடம் நம்ம KK மட்டுமல்ல மணிரத்னம் KK வும் தோற்றுதான் போகும்..
யாருடைய கற்பனைக்கும் எட்டாத வகையில் புதுவிதமா அவங்கள சேர்த்து வைப்பாங்க, பாருங்க

lGMh92_photo.png
 

malar02

Well-Known Member
hi friend MM
nice ud
உங்க மனைவியா இருக்கும் போது அடுத்தவனை கல்யாணம் பண்ண யோசிக்கமுடியுமா ?இல்லை அடுத்தவன் மனைவியை கல்யாணம் பண்ண நினைக்கிறவனை நான் சூஸ் பண்ண முடியுமா ? செம டைலாக்
அடுத்து ஈஸ்க்கும் ஒரு கொட்டு அடுத்தவன் மனைவி ஆனாலும் உன்னை விடமாடடேன் சொல்லும் உன்னை போல் ஒருவன் எனக்கு வேண்டாம் என்று பின்னி பெடல் எடுக்கும் வார்த்தைகள்

அப்புறம் ஈஸ் சொல்றான் டைவர்ஸ் பண்ணிக்கிறோம் பண்ணிக்கலை எது நடந்தாலும் நான் வேற அவ வேற கிடையாது சொல்லி மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் இருக்கு மேலும் இங்கு கதையின் போக்குக்கு ஆன்சரையும் சொல்லிடிங்களே சூப்பர்


பாவம் வர்ஷ் அவனுடன் இருக்கும் போது காதல் என்ற தாக்கத்தை உணரவில்லை அவனை விட்டு பிரிந்தவுடன் காதல் தாக்கத்தை உணர ஆரம்பித்துவிடடாள் போல்
நிரம்ப ஆவலை தாங்கி இருந்தது வந்தும் விட்டது
 

malar02

Well-Known Member
ஹாய் தோழிகளே,
இங்கு தோழிகள் ஐஸை திட்றாங்க பாவம் அவள் அவளே வர்ஷியிடம் அவள் காதல்பற்றி சொல்ல வேண்டும் என்று சொல்லிருக்க மாட்டாள் அவள் ஈஸ் பற்றிய கோபத்தில் அவனை திட்டி இருக்கலாம் அப்போது எல்லாம் வெளி பட்டு இருக்கலாம் துரோகம் செய்த்தவனை கொண்டாடுறிங்க ஹீரோன்னு

அப்புறம் ரொமன்ஸ்க்கு நிறைய கதைகள் இருக்குப்பா ரொமான்ஸையே அலசி ஆராயிந்து எடுத்து எழுத தான் ஆட்கள் கம்மி அதனுடன் பிஸ்னஸ் குடும்பம் வேலை உறவுகள் இப்படி எல்லாத்தையும்எல்லா பாத்திரத்திற்கும் உருவம் கொடுத்து கலந்து கொடுக்கத்தான் ஆட்கள் இல்லை அதில் கிரேட் அவங்க இப்படியே அவங்க டிரண்ட் மத்தாம பிஸ்னஸ்க்காக எழுதினால் பல காலம் எழுதுலகில் நீங்க இடம் பிடிக்க முடியும் அனுராதாரமணன் ,வாஸந்தி சிவசங்கரி போன்றோர் போல்

எனக்கும்MM யுடைய அனைத்து ஹீரோக்களையும் ரொம்ப பிடிக்கும் மனம் வேறு புத்தி வேறு அல்லவா
தொடரும்........ ( எப்படி )

 

malar02

Well-Known Member
ஹலோ மக்களே நான் இப்ப சிரியஸ்னா கருத்துகளை முன்வைக்க போகிறேன் கவனமா கேட்டுக்கோங்க

எனக்கு புரியவே இல்லை ஒரு விஷயம் அது என்ன ?ஒரு குழந்தை வளரவே வளரதா ?கருத்து எண்ணங்கள் தோன்றாதா ?கூடாதா ?புத்தி மனது இணைந்து வேலை செய்தால் நல்லது தானே... சொல்லி கொடுத்த வாழ்க்கை இல்ல இல்ல கட்டி கொடுத்த சோறு எத்தனை நாள் தாங்கும்

வாழ்க்கை பெண்களுக்கு எப்படி இருக்கு இந்த கதையில் என்று MM சொல்வது மாதிரிதான் எனக்கு தோன்றுகிறது….. முதலில் ,
மலர் பாவம் வாயில்லா பூச்சி மஞ்சள் கயிறு மேஜிக் -க்குள் வாழ்பவர்


ரூபா தன்மானத்துடன் வாழ விரும்பினாலும் தன் துணையினால் அதை இழப்பவள்

கமலம்மா தன் துணையின் அங்காரம் துரோகம் இதை எல்லாம் சகித்து கொண்டு கடைசி வரை அவரே வாழ்க்கை என்று பணி செய்தவர் செய்ப்பவர்

ரஞ்சனி தன் துணையின் அருகாமையை இழப்பவள் இரண்டாகெட்டான் துணையை தன் தவறால் தவிர்க்கவும் முடியாமல் சரி செய்ய உதவியும் துணையிடம் மிருந்து கிடைக்காமல் தவிப்பவள்

ஐஸ் இவள்தான் இருப்பதிலேயே மிகவும் பாவ பட்டவள் தன் காதலனால் முழுமையாக காதலிக்க படாததை கூட அறியாமல் தன் காதலனால் கைவிடப்பட்டவள் தனக்கு இழைக்க பட்ட காதல் துரோகத்தை மெள்ளவும்
முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிப்பவள்


கடைசியாக விலாசினி இவள் மட்டும் தான் மதிப்பாக மனதோடு வாழ்கிறாள் என்று காண்பிக்க படுவது போல் எனக்கு தோன்றுகிறது ஏனென்றால் முரளி இங்கு மனைவியை ,திமிர்பிடித்த நட்பையும் கூட மற்றவரையும் மதிக்க தெரிந்தவனாக காண்பிக்க படுகிறான்

இவர்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள்தான் ஆனால் மன உறுத்தல் ,மன சஞ்சலதுடன் மன நிம்மதியற்று வாழ்பவர்கள் மனதினுள் வாழ்க்கை அமைந்து விட்டது விதியே என்று மன இறுக்கத்துடன் வாழ்பவர்கள் போல் எனக்கு தோன்றுகிறார்கள்
 

malar02

Well-Known Member
நம்ம ஹீரோயின் வர்ஷ் தன் வாழ்க்கை படகில் தனியாக துடுப்பு போட்டு வந்தவள் அவளுக்கும் கை வலிக்கும் அல்லவா ....தன் படகில் தன் எதிரேஒரு இணை இசைந்து துடுப்பு போட கை வலிகுறைக்க எதிர் பார்த்திருக்கலாம்….அல்லது நீ நிம்மதியாக உட்க்கார்ந்து கொள் நான் உன்னை கவனித்து உன் படகையும் வளித்து கொள்வேன் என்று சொல்லும் துணையை எதிர் பார்த்திருக்கலாம் ஆனால் கிடைத்ததோ இசைவு இல்லாமல் ஆபத்து வந்தால் உனக்கு தப்பித்து போக லைஃப் ஜாக்கிட் வீசுகிறேன் என்று மற்றோரு பக்கத்துக்கு படகில் பயணிப்பவன் போல் துணை அமைத்தால் எப்படி நிம்மதியை உணர முடியும் எங்கு எப்போது ஆபத்து வருமோ என்றபடி பயணிப்பது எப்படி ???.....................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top